Kungumam Doctor - September 01, 2023
Kungumam Doctor - September 01, 2023
انطلق بلا حدود مع Magzter GOLD
اقرأ Kungumam Doctor بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط عرض الكتالوج
1 شهر $9.99
1 سنة$99.99 $49.99
$4/ شهر
اشترك فقط في Kungumam Doctor
سنة واحدة $4.99
شراء هذه القضية $0.99
في هذه القضية
கணிப்பொறி கவனம்... கண்களைக் காப்போம்!
தினமும் கண்ணை கவனி!
சென்ற நூற்றாண்டை எலெக்ட்ரிகல் யுகம் என்று சொன்னால் இந்த நூற்றாண்டை எலெக்ட்ரானிக்ஸ் யுகம் என்று சொல்லலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்ட புரட்சி நம் நவீன வாழ்வையே அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. இன்று கைகளில் செல்போன் இல்லாதவர்களே இல்லை. டி.வி., கணிப்பொறி, லேப்டாப், டேப்லெட் என விதவிதமான வடிவங்களிலான எலெக்ட்ரானிக்ஸ் ஒளிர்திரைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பின்னிரவு இரண்டு மூன்று மணி வரை கொட்ட கொட்ட விழித்தபடி வாட்ஸப் அரட்டையிலும் யூடியூப் வீடியோவிலும் மூழ்கியிருக்கிறோம்.
4 mins
கரும்புள்ளிகள் மறைய...
முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் பலரது முக அழகையே மாற்றிவிடுகிறது. இவ்வாறு கரும்புள்ளிகள் தோன்ற பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, ஊட்டச்சத்து குறைபாடு, செரிமானக் கோளாறு போன்றவைகளால் கூட கரும்புள்ளிகள் வரலாம். கரும்புள்ளிகளை தவிர்க்க, ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் நார்ச்சத்துள்ள உணவுகளையும் அதிகம் சேர்த்துக் கொள்ள, இதனை தவிர்க்கலாம். இதற்கு சில எளிமையான வீட்டு சிகிச்சைகளே போதும். அவற்றைப் பார்ப்போம்.
1 min
கொழுப்புப் படிதல் ...தடுக்க...தவிர்க்க!
குழந்தை கருவில் வளரும்போது, சுமார் ஆறு மாதத்துக்குப் பிறகு, குழந்தையின் உடலில் ‘கொழுப்பு செல்கள்’ உருவாக ஆரம்பிக்கிறது. அதன்பின், பருவம் அடையும் வயதில்தான், அதாவது ‘பாலின ஹார்மோன்கள்’ (Sex Hormones) உடலில் சுரக்க ஆரம்பிக்கும் நேரத்தில்தான் மறுபடியும் கொழுப்பு செல்கள் புதிதாக உருவாகிறது.
2 mins
பாதங்களில் பித்த வெடிப்பு… தீர்வு என்ன?
பாதங்களின் ஓரங்கள் பிளவுபடுவதை பித்த வெடிப்பு என்று அழைக்கின்றோம். அவை வலியை கொடுப்பதோடு நிறுத்தாமல் சங்கடத்தையும் ஏற்படுத்தும். பாதங்களுக்கு போதிய கவனத்தை செலுத்தாததாலும் சுத்தமாக இல்லாததாலும் தான் பித்த வெடிப்பால் பலரும் கஷ்டப்படுகின்றனர்.
1 min
மூட்டு வலி தீர்வு தரும் ஆயுர்வேதம்!
நாற்பது வயதைக்கடந்துவிட்டாலே, பெரும்பாலானவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னை மூட்டுவலி ஆகும். மூட்டு என்பது இரண்டு எலும்புகளை இணைக்கும் பகுதி. நாம் சிரமமின்றி ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதற்கு உதவுவது இந்த மூட்டுகளே. இந்த மூட்டுகளுக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படும்போது, அதில் வலி உண்டாகிறது. மருத்துவ ஆய்வுகள் ஆண்களைக் காட்டிலும் பெண்களே இந்த பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள் என்கிறது. அந்தவகையில், நீண்டகாலமாக மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு பக்கவிளைவுகள் எதுவும் இன்றி நிரந்தரத் தீர்வளிக்கிகும் ஆயுர்வேத மருத்துவம் குறித்து தெரிந்து கொள்வோம்.
2 mins
ஷூ சாக்ஸ் எது சரி? எது தப்பு?
வெறும் காலில், வயல் வரப்புகளில் காலாற நடந்த காலம் போய், செருப்பு அணிய ஆரம்பித்தோம். நம்முடைய தட்பவெப்பநிலைக்கு, காற்றோட்டமாக இருக்கும் காலணிகளுக்குப் பதிலாக, இன்று நகர்ப்புறங்களில் மிக முக்கியமான டிரெஸ் கோடாகவே மாறிவிட்டது ஷூ அணிவது.அலுவலக வாசலில் நிற்கும் காவலர் முதல் சி.இ.ஓ வரை இன்று அனைவருமே ஷூ அணிகிறார்கள். வேலைக்குச் செல்பவர்கள் மட்டுமின்றி, பள்ளி செல்லும் குழந்தைகள், காவலர்கள், மார்க்கெட்டிங் பணிக்காக வெயிலிலும் மழையிலும் அலைபவர்கள் எனப் பலதரப்பினரும் ஷூ அணிகிறார்கள்.
1 min
ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்!
தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சவாலான பல கதாபாத்திரங்களில் நடித்து குறுகிய காலத்தில் திறமையான நடிகை என்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். காஷ்மீரில் பிறந்தவரான ஷ்ரத்தா ஸ்ரீநாத் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர். அவருடைய தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியதால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பள்ளிக் கல்வியை முடித்தார். சட்டத்தில் பட்டம் பெற்றுள்ள ஷ்ரத்தா, நடிகையாவதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். அவருக்கு சிறுவயது முதலே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால், பள்ளி, கல்லூரி காலத்தில் இருந்தே அவ்வப்போது நாடகங்களில் நடித்துவந்தார். இதன் மூலம், விளம்பர படங்களில் நடிக்க வாய்ப்புகிட்ட நடித்து வந்தார்.
1 min
நலம் தரும் வெந்தயக் கீரை!
இன்றைய சமூகத்தினர் மாறுபட்ட உணவுப்பழக்கம், இராசயனம் கலந்த உணவுப் பொருட்கள், வேறுபட்ட பணி நேர சூழல் போன்ற காரணங்களால் பல்வேறு நோய்களை இலவசமாக பெற்றுக் கொள்கிறார்கள். நோய்களை தடுக்க நவீன மருத்துவத்தில் பல வசதிகள் இருந்தாலும், பெரும்பாலானோர் இயற்கை வழிமுறையில் குணம் பெற விரும்புகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. நமது உடல் இயல்பாகவே நோயினை எதிர்க்க சர்வ வல்லமையுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை கொண்டுள்ளது.
1 min
வயதான பெண்களுக்கான பரிசோதனைகள்!
பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் செய்யப்படும் மாஸ்டர் ஹெல்த் செக்அப் (மாஸ்டர் ஹெல்த் செக்அப்) பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தவகையில், பெண்களுக்கான குறிப்பிட்ட சோதனைகள், அவை ஏன் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன என்பதும், எந்த அளவுக்கு அடிக்கடி செய்யமுடியும் என்பதையும் பார்ப்போம்.
2 mins
சமைக்கும் முறைகள் நன்மைகளும் தீமைகளும்!
குடும்பத்தின் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவுசெய்வதில், உணவை சமைக்கும் முறைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. உணவு பார்வைக்கு அழகாகவும், சுவை மிகுந்ததாகவும் இருப்பின் உண்ண வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும். பழங்கள், காய்கறிகள் மற்றும் கொட்டைகளைப் பச்சையாக உண்ணலாம். ஆனால் பெரும்பாலான உணவுகள், சமைத்த பின்னரே விரும்பத்தக்க மாற்றங்களை அடைகின்றன. உணவு வெப்பத்திற்கு உட்படுத்தப்படுவது சமைத்தல் என்கிறோம்.
4 mins
இதயம் காப்போம்!
ஒரு மனிதன் உயிர்வாழ, ஆதாரமாக இருப்பது இதயம். ஆனால் அந்த இதயத்தின் பாதுகாப்பு குறித்து நாம் கவனம் செலுத்துகிறோமா என்றால், கேள்விக்குறிதான். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, அதிக இதயநோயாளிகள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
3 mins
மன அழுத்தத்தைக் கையாளும் வழிகள்!
நம்மைச் சுற்றி நிலவும் சுழல்கள் மற்றும் சமூக அமைப்புகளே பொதுவாக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த மன அழுத்தம் என்பது சிறியவர் முதல் பெரியவர் யாரை வேண்டுமானாலும் எந்நேரத்திலும் தாக்கலாம். மேலும், மன அழுத்தம் என்பது மனதளவில் மட்டும் அல்லாமல் உடல் அளவிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே, முடிந்தளவு மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்வது நல்லது.
2 mins
Kungumam Doctor Magazine Description:
الناشر: KAL publications private Ltd
فئة: Health
لغة: Tamil
تكرار: Fortnightly
Kungumam Doctor is a health magazine that offers health, nutrition, sex and fitness advice to everyone. Tamilnadu's No. 1 health magazine, Kungumam Doctor is the most authoritative guide for people who want to be proactive about their health. It empowers readers to make healthy decisions and lifestyle changes not just in the doctor's clinic, but in the supermarket, at the gym, in the bedroom and the garden.
It is a true encyclopaedia of groundbreaking medical research, symptoms, diagnosis, prevention, wellbeing & workout mantras. Stay fit and healthy with a regular dose of kungumam Doctor!
- إلغاء في أي وقت [ لا التزامات ]
- رقمي فقط