CATEGORIES
فئات
கொரோனாவை போல சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை வைரஸ்!
சீனாவில் கொரோனாவை போல இப்போது புதிய வகை வைரஸ் பரவிவருகிறது. பலர் காய்ச்சல், இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உருவாகும் '7 ஜி ரெயின்போ காலனி 2!
தமிழ் சினிமாவில் கடந்த 2004-ஆம் ஆண்டு வெளியான \"7ஜி ரெயின்போ காலனி\" திரைப்படம், இயக்குனர் செல்வராகவன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணி, ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. இப்படம் வெளியான 20 ஆண்டுகளுக்கு பின், இதன் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார்.
சிக்கலில் அஜித்தின் ‘விடாமுயற்சி'!
அஜித்தின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கியது. தொடக்கத்தில் இயக்குனர் மாற்றம் உள்பட பல சிக்கல்களை சந்தித்து வந்த இப்படம், ஒருகட்டத்தில் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
இன்று, கவர்னர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என். ரவியுடன் சபாநாயகர் அப்பாவு சந்திப்பு! பேரவையில் உரையாற்ற நேரில் அழைப்பு!!
காலை தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் 6-ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சபாநாயகர் அப்பாவு இன்று சென்றார். ஆளுநர் ஆர். என்.ரவியை சந்தித்து பேசினார்.
சிட்னி கடைசி டெஸ்ட் போட்டி: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது! ஆஸ்திரேலியா பந்துவீச்சில் மிரட்டல்!!
சிட்னியில் இன்று தொடங்கிய இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் வினையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய பவுலர்கள் வேகப் பந்து வீச்சில் மிரட்டினர்.
வேலு நாச்சியார் பிறந்த நாள்: பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம்! த.வெ.க. தலைவர் விஜய் கருத்து!!
வேலு நாச்சியார் பிறந்த நாளில் பெண்களின் பாதுகாப்பிற்கும் எப்போதும் அரணாக இருப்போம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்கருத்து தெரிவித்துள்ளார்.
கோவையை பரபரப்பில் ஆழ்த்திய விபத்து: 20 டன் எரிவாயுவுடன் மேம்பாலத்தில் கவிழ்ந்த டேங்கர்! 500 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை!!
கோவை மேம்பாலத்தில் எரிவாயு டேங்கர் லாரி கவிழ்ந்து வாயு கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள 5 பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தில் துணிகரம்: தொழிலதிபர் வீட்டில் 1 50 பவுன் நகை கொள்ளை! ரூ. 6 லட்சம், 4 உயர் ரக கடிகாரங்களும் திருட்டு!!
சென்னை நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் 150 பவுன் நகை, 6 லட்சம் ரொக்கம், 4 உயர் ரக கடிகாரங்கள் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டுள்ளன.
2.20 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ‘டோக்கன்’ விநியோகம்!
இன்று வீடு வீடாக வழங்கும் பணி தொடங்கியது!!
கதிர் ஆனந்த் எம்.பி.யின் கல்லூரியில் சோதனை!
* அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை; * வீட்டில் யாரும் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருப்பு!!
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லியில் நினைவிடம் எழுப்ப இடம் தேர்வு? விரைவில் அறிவிப்பு வெளியாகிறது!!
கடந்தவாரம் டெல்லியில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான நினைவிடம் அமைக்க சில இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்து அவரது குடும்பத்தினருடன் ஆலோசிக்கப்பட்டு ஒரு இடம் தேர்வு செய்யப்படுவதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
காவிச் சாயம் பூசவேண்டியது இல்லை: திருவள்ளுவர் சிலை அமைய காரணமாக இருந்ததே காவிதான்!- பா.ஜ.க. அறிக்கை!!
திருவள்ளுவர் சிலை அமைந்த காரணமாக இருந்ததே 'காவி'தான். ஆகவே 'காவி' சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை என்று தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என். எஸ். பிரசாத் கூறியுள்ளார்.
திருவொற்றியூர் மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூ.49 லட்சத்தில் கருவிகள்! கலாநிதி வீராசாமி எம்.பி.வழங்கினார்!!
திருவொற்றியூர் மாநகராட்சி மருத்துவமனைக்கு ரூபாய் 49 லட்சம் செலவில் அதிநவீன மருத்துவமனையை வடசென்னை எம்பி டாக்டர் கலாநிதி வீராசாமி வழங்கினார்.
மாணவி பாலியல் வழக்கில் மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? குஷ்பு ஆவேசம்!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? என பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.
துபாயில் மாதவனுடன் புத்தாண்டு கொண்டாடிய நயன், விக்கி ஜோடி!
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு: நாளை முதல் டோக்கன் விநியோகம்!
நடப்பாண்டு 2.20 குடும்ப அட்டைதாரர்களுக்கு, 249.76 கோடிரூபாய் செலவில் பொங்கல் பரிசு தொகுப்பினை தமிழக அரசு வழங்க உள்ளது. இந்த பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன் நாளை முதல் வீடு வீடாக விநியோகிக்கப்பட உள்ளது.
பா.ஜ.க. மகளிர் அணி பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும், குற்றவாளி இ.மு.க.வைச் சேர்ந்தவன் என்பதால், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வராமல் மறைக்க தி.மு.க. அரசு முயற்சி செய்வதையும் கண்டித்து, தமிழக பா.ஐ.க. மகளிர் அணி சார்பில், மாநிலத் தலைவர் உமா ரதி ராஜன் தலைமையில், மதுரையில் இருந்து சென்னை வரை நீதிப் பேரணி நடைபெற உள்ளதாக தமிழக பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு!
தமிழகத்தில் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்: குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும்!
‘யார் அந்த சார்....?' என கேட்டு திருமாவளவன் பரபரப்பு பேட்டி!!
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற சவுமியா அன்புமணி கைது! - ஏராளமான பா.ம.க.வினரும் கைது!!
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி உள்பட ஏராளமான பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
இரட்டை இலை சின்னம் விவகாரம்: உள்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது! - எடப்பாடி தாக்கல் செய்த மனுவில் தகவல்!
அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டார்கள். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்வழக்கு தொடுத்தார்கள். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
முகுந்தன்தான் பா.ம.க. இளைஞர் அணித்தலைவர்! - டாக்டர் ராமதாஸ் திட்டவட்ட அறிவிப்பு!!
உள்கட்சி பிரச்சினையை பேசித்தீர்த்துவிட்டோம்: நான் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை:
ஆவடியில் ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க.வினர் கைது!
ஆவடியில்தடையைமீறி ஆர்ப்பாட்டம் செய்த அ.தி.மு.க.வினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் விடுதலை செய் யப்பட்டனர்.
தாம்பரம் அருகே வாலிபர்கழுத்தை அறுத்துக் கொலை!
பாலத்தின் அருகே உடல் வீச்சு!!
பாலியல் அத்துமீறல் விவகாரம்: டொனால்டு டிரம்புக்கு 5 மில்லியன் டாலர் அபராதம்!
அப்பீல் நீதிமன்றம் உ றுதிப்படுத்தியது!!
தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் தற்கொலை!
சென்னையில் வீட்டில் தூக்கில் தொங்கினார்!
மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தி.மு.க.வினருக்கு தொடர்பு இருப்பதால்மறைக்க முயல்கின்றனர்! எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!!
மாணவி பாலியல் வன்கொடுமை தில் சம்பவத் தி.மு.க.வினருக்கு தொடர்பு இருப்பதால் ம ற க் க முயற்சிக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி பரபரப்பாக குற்றஞ்சாட்டினார்.
இன்று நள்ளிரவில் புத்தாண்டு விழா: சென்னை, புதுச்சேரியில் கடும் கட்டுப்பாடுகள்!
* மெரினாவில் இரவு 8 மணிக்குமேல் போக்குவரத்து நிறுத்தம்; * கடலில் இறங்கவும், குளிக்கவும் தடை!!
சென்னையில் தடையை மீறி போராட்டம்: சீமான் உட்பட 500 பேர் கைது! போலீசாருடன் தள்ளுமுள்ளு!!
அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொ டுமை சம்பவத்தை கண் டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட முயன்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப் பாளர் சீமான் உட்பட 500 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா: வாழ் நாள் முழுவதும் தமிழுக்கும், மக்களுக்கும் உழைப்பதேஎன்கடமை!
6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!!