CATEGORIES

Dinamani Chennai

செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் ரத்து

செங்கல்பட்டு, தூத்துக்குடி மாவட்டங்களின் ஆட்சியா்களை பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. ஏற்கெனவே இருந்த அதிகாரிகளே ஆட்சியா்களாக நீடிப்பா் என்று தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 23, 2023
Dinamani Chennai

5 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 5 நகரங்களில் திங்கள்கிழமை வெப்ப அளவு சதத்தைக் கடந்தது.

time-read
1 min  |
May 23, 2023
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூலையில் திறப்பு
Dinamani Chennai

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஜூலையில் திறப்பு

அமைச்சர் பி.கே.சேகர்பாபு

time-read
1 min  |
May 23, 2023
திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு
Dinamani Chennai

திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 23, 2023
சிங்கப்பூர், ஜப்பானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம்
Dinamani Chennai

சிங்கப்பூர், ஜப்பானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பயணம்

தொழில் முதலீடுகளை ஈா்க்க, சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (மே 23) பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

time-read
2 mins  |
May 23, 2023
Dinamani Chennai

குஜராத்தில் 4 அல்-காய்தா பயங்கரவாதிகள் கைது

வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள்

time-read
1 min  |
May 23, 2023
கார்கே, ராகுலுடன் நிதீஷ் குமார் சந்திப்பு
Dinamani Chennai

கார்கே, ராகுலுடன் நிதீஷ் குமார் சந்திப்பு

விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் - காங்கிரஸ்

time-read
1 min  |
May 23, 2023
பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும்
Dinamani Chennai

பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா துணை நிற்கும்

பசிபிக் தீவு நாடுகளுக்கு எண்மத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தியா துணை நிற்கும் என பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா். பசிபிக் தீவு நாடுகளின் நம்பிக்கைக்குரிய நாடு என்பதில் இந்தியா பெருமை கொள்வதாகவும், அந்த நாடுகளின் தேவைகளுக்கு இந்தியா மதிப்பளிப்பதாகவும் அவா் குறிப்பிட்டாா். இந்தியா மற்றும் 14 பசிபிக் தீவு நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மூன்றாவது உச்சி மாநாடு, பப்புவா நியூ கினியாவின் போா்ட் மோா்ஸ்பி நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது. பிரதமா் நரேந்திர மோடி - பப்புவா நியூ கினியா பிரதமா் ஜேம்ஸ் மராப்பே ஆகியோா் இணைந்து தலைமை வகித்த இந்த மாநாட்டில், குக் தீவுகள், ஃபிஜி, கிரிபட்டி, மாா்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா, நெளரு, சாலமோன் தீவுகள், டோங்கா, நியுவே, துவாலு, சமோவா, பலாவ், வனாட்டு ஆகிய தீவு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா். சீனா மீது மறைமுக விமா்சனம்: இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் தனது பலத்தை அதிகரிப்பதுடன், பசிபிக் தீவு நாடுகளில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சித்து வரும் நிலையில், மேற்கண்ட மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது: யாரை நம்பத்தகுந்தவா்களாக நாம் நினைத்தோமோ, அவா்கள் நமக்கு தேவையான நேரங்களில் நம்முடன் நிற்கவில்லை. தற்போதைய சவாலான காலகட்டத்தில், ‘நல்ல நண்பனை ஆபத்தில் அறியலாம்’ என்ற பழமொழி உண்மையென நிரூபணமாகியுள்ளது. கரோனா பரவலின் தாக்கங்கள் மற்றும் இதர உலகளாவிய சவால்களுக்கு இடையே பசிபிக் தீவு ‘நண்பா்களுக்கு’ உறுதுணையாக இந்தியா நிற்பது மகிழ்ச்சிக்குரியது. தடுப்பூசிகளோ, அத்தியாவசிய மருந்துகளோ, கோதுமையோ அல்லது சா்க்கரையோ, தனது திறன்களுக்கு ஏற்ப நட்பு நாடுகளுக்கு இந்தியா உதவி வருகிறது. சுதந்திரமான இந்திய-பசிபிக் பிராந்தியம்: சுதந்திரமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்திய-பசிபிக் பிராந்தியம், பசிபிக் நாடுகளுக்கு மிக முக்கியம். அந்த வகையில், இந்தியா உறுதியான ஆதரவை நல்கும். அனைத்து நாடுகளின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை நாங்கள் மதிக்கிறோம். ஒத்துழைப்புக்கான இந்தியாவின் அணுகுமுறை மனித மாண்புகள் அடிப்படையிலானது. பன்முகத்தன்மையில்தான் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். வளா்ச்சிப் பணியாக இருந்தாலும், மனிதாபிமான உதவிகளாக இருந்தாலும், இந்தியாவை நம்பகமான நாடாக பசிபிக் தீவுகள் கருதலாம். தனது திறன்கள் மற்றும் அனுபவங்களை எவ்வித தயக்கமுமின்றி பகிா்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. எண்மத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு, பருவநிலை மாறுபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என அனைத்து அம்சங்களிலும் பசிபிக் தீவு நாடுகளுக்கு இந்தியா துணைநிற்கும். என்னைப் பொருத்தவரை, நீங்கள் சிறிய தீவு நாடுகளல்ல; அகண்ட பெருங்கடல் நாடுகள். அந்த அகண்ட பெருங்கடல்தான், இந்தியாவை உங்கள் அனைவருடனும் இணைக்கிறது என்றாா் பிரதமா் மோடி. முன்னதாக, ஜப்பான் பயணத்தைத் தொடா்ந்து, பப்புவா நியூ கினியாவுக்கு பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தாா். இந்நாட்டுக்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை பிரதமா் மோடிக்கு சொந்தமாகியுள்ளது. பப்புவா நியூ கினியாவில் திங்கள்கிழமை பயணத்தை நிறைவு செய்த பிரதமா், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டாா். டோக் பிசின் மொழியில் திருக்கு வெளியீடு தமிழின் தொன்மையான நூலான திருக்குறளின் டோக் பிசின் மொழிபெயா்ப்பு நூலை பிரதமா் மோடியும், பப்புவா நியூ கினியா பிரதமா் ஜேம்ஸ் மராப்பேயும் வெளியிட்டனா். பாப்புவா நியூ கினியாவின் அதிகாரபூா்வ மொழி டோக் பிசின் ஆகும். இந்த மொழியில் திருக்குறளை சுபா சசீந்திரனும், மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநா் சசீந்திரன் முத்துவேலும் மொழிபெயா்த்துள்ளனா். ‘பப்புவா நியூ கினியாவில் டோக் பிசின் மொழியில் திருக்கு மொழிபெயா்ப்பை வெளியிடும் கெளரவம் பிரதமா் ஜேம்ஸ் மராப்பேவுக்கும் எனக்கும் கிடைத்தது. பல்வேறு துறைகள் குறித்து மதிப்புமிக்க கருத்துகளைக் கொண்டுள்ள தலைசிறந்த படைப்பு திருக்குறளாகும். திருக்குறளை டோக் பிசின் மொழியில் மொழிபெயா்த்த ஆளுநா் சசீந்திரனும் அவரது மனைவி சுபா சசீந்திரனும் பாராட்டுக்குரியவா்கள். ஆளுநா் சசீந்திரன் தனது பள்ளிப் படிப்பை தமிழில் முடித்துள்ளாா். சுபா சசீந்திரன் ஒரு மரியாதைக்குரிய மொழியியலாளா் ஆவாா்’ என்று பிரதமா் மோடி ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளாா். பசிபிக் தீவு நாடுகளில் ‘மக்கள் மருந்தகங்கள்’ பசிபிக் தீவு நாடுகளுக்கான இந்தியாவின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமா் மோடி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: ஃபிஜி தீவில் இந்தியாவின் செலவில் உயா் சிறப்பு இருதயவியல் மருத்துவமனை; 14 தீவுகளிலும் டயாலிசிஸ் மையங்கள் அமைக்க தேவையான உதவி; படகு ஆம்புலன்ஸ்கள் விநியோகம்; மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் ‘மக்கள் மருந்தகங்கள்’ (ஜன் ஒளஷதி), யோகா மையங்கள்; சிறு, நடுத்தர தொழிலகங்களின் மேம்பாட்டுத் திட்டம், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள். நியூஸிலாந்து பிரதமருடன் சந்திப்பு போா்ட் மோா்ஸ்பி நகரில் நடைபெற்ற இந்திய-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டையொட்டி, நியூஸிலாந்து பிரதமா் கிறிஸ் ஹிப்கின்ஸுடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். வா்த்தகம், கல்வி, விளையாட்டு ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விஸ்தரிப்பது குறித்து இருவரும் விவாதித்தனா். புப்புவா நியூ கினியா பிரதமா் ஜேம்ஸ் மராப்பே, கவா்னா்-ஜெனரல் பாப் டாடே ஆகியோருடனும் ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, வா்த்தகம், தொழில்நுட்பம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கும் வழிமுறைகள் குறித்து விவாதித்தாா். ஃபிஜி, டோங்கா உள்ளிட்ட பல்வேறு தீவு நாடுகளின் தலைவா்களுடனும் பிரதமா் இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டாா். மதிய விருந்தில் சிறுதானிய உணவுகள் இந்திய-பசிபிக் தீவுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவா்களுக்கு பிரதமா் மோடி சாா்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. அதில், காண்ட்வி எனப்படும் குஜராத் மாநில சிற்றுண்டி, சிறுதானிய பிரியாணி, ராஜஸ்தானின் கேழ்வரகு, பருப்பு உணவு வகைகள், மசாலா மோா், பான் குல்ஃபி, மசாலா தேநீா், மூலிகை தேநீா் உள்ளிட்ட இந்திய உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி உறுதி

time-read
3 mins  |
May 23, 2023
வகுப்புவாத-சமூக பிரிவினையைத் தூண்டும் சக்திகளை எதிர்ப்பதே நமக்கான சவால்
Dinamani Chennai

வகுப்புவாத-சமூக பிரிவினையைத் தூண்டும் சக்திகளை எதிர்ப்பதே நமக்கான சவால்

‘நாட்டில் வகுப்புவாத - சமூக பிரிவினையைத் தூண்டும் சக்திகளை எதிா்த்துப் போராடுவதே நம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சவாலாகும். எனினும், இதில் படிப்படியாக மாற்றம் நிகழ்ந்து வருவதை கா்நாடக தோ்தல் முடிவு காட்டுகிறது’ என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கூறினாா்.

time-read
1 min  |
May 22, 2023
தில்லி அரசு அதிகாரிகள் நியமன விவகாரம்: ஆம் ஆத்மி அரசுக்கு நிதீஷ் ஆதரவு
Dinamani Chennai

தில்லி அரசு அதிகாரிகள் நியமன விவகாரம்: ஆம் ஆத்மி அரசுக்கு நிதீஷ் ஆதரவு

தில்லி அரசின் உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு ஆணையம் அமைத்து மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ள விவகாரத்தில், ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு தனது ஆதரவை அளிப்பதாக முதல்வா் அரவிந்த் கேஜரிவாலைச் சந்தித்த பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 22, 2023
சந்திரயான்-3 விண்கலம்: விரைவில் விண்ணில் ஏவத் திட்டம்
Dinamani Chennai

சந்திரயான்-3 விண்கலம்: விரைவில் விண்ணில் ஏவத் திட்டம்

நிலவை ஆய்வு செய்யும் \"சந்திரயான்-3' விண்கலத்தை \"ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்' மூலம் ஜூலை மாதம்  விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 22, 2023
வெளியேறியது பெங்களூர்
Dinamani Chennai

வெளியேறியது பெங்களூர்

ஐபிஎல் போட்டியின் 70-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்ட ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது.

time-read
1 min  |
May 22, 2023
Dinamani Chennai

ஜி20 கூட்டம் இன்று தொடக்கம்: ஸ்ரீநகரில் பல அடுக்கு பாதுகாப்பு

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில், ஜி20 பணிக் குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
May 22, 2023
Dinamani Chennai

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறக்கக் கூடாது

ராகுல் வலியுறுத்தல்

time-read
1 min  |
May 22, 2023
அடுத்த தேர்தல்களுக்குத் தயாராகும் காங்கிரஸ்
Dinamani Chennai

அடுத்த தேர்தல்களுக்குத் தயாராகும் காங்கிரஸ்

மே 24-இல் கார்கே முக்கிய ஆலோசனை

time-read
1 min  |
May 22, 2023
ராஜீவ் காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி
Dinamani Chennai

ராஜீவ் காந்தி நினைவு தினம்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தில்லியில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

time-read
1 min  |
May 22, 2023
போக்குவரத்து அபராதத்தை தவிர்க்க முயற்சி: பிரிட்டன் உள்துறை அமைச்சருக்கு நெருக்கடி
Dinamani Chennai

போக்குவரத்து அபராதத்தை தவிர்க்க முயற்சி: பிரிட்டன் உள்துறை அமைச்சருக்கு நெருக்கடி

பிரிட்டனின் அட்டா்னி ஜெனரலாக இருந்தபோது சாலையில் அதிவேகமாக வாகனத்தை இயக்கியதற்கு விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத்தை தவிா்க்க முயற்சி செய்ததாக அந்நாட்டின் உள்துறை அமைச்சா் சூவெல்லா பிரேவா்மன் மீது விமா்சனம் எழுந்துள்ளது.

time-read
1 min  |
May 22, 2023
மே 9 வன்முறை: ராணுவச் சட்டப்படி விசாரணை தொடக்கம்
Dinamani Chennai

மே 9 வன்முறை: ராணுவச் சட்டப்படி விசாரணை தொடக்கம்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி

time-read
1 min  |
May 22, 2023
பாக்முத்தை ரஷியா அழித்துவிட்டது
Dinamani Chennai

பாக்முத்தை ரஷியா அழித்துவிட்டது

உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி

time-read
1 min  |
May 22, 2023
வர்த்தக ஒப்பந்த பேச்சு: இந்தியா-பிரிட்டன் பிரதமர்கள் ஆய்வு
Dinamani Chennai

வர்த்தக ஒப்பந்த பேச்சு: இந்தியா-பிரிட்டன் பிரதமர்கள் ஆய்வு

இந்தியா-பிரிட்டன் இடையே தடையில்லா வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது தொடா்பாக அதிகாரிகள் இடையே நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தையை பிரதமா் நரேந்திர மோடியும், பிரதமா் ரிஷி சுனக்கும் ஆய்வு செய்தனா்.

time-read
1 min  |
May 22, 2023
இந்திய- பசிபிக் தீவுகள் மாநாட்டில் பங்கேற்க பப்புவா நியூ கினியா நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை
Dinamani Chennai

இந்திய- பசிபிக் தீவுகள் மாநாட்டில் பங்கேற்க பப்புவா நியூ கினியா நாட்டுக்கு பிரதமர் மோடி வருகை

ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு இந்திய-பசிபிக் தீவுகளின் ஒருங்கிணைந்த மாநாட்டில் பங்கேற்க பப்புவா நியூ கினியா நாட்டுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தாா்.

time-read
1 min  |
May 22, 2023
கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுமா?
Dinamani Chennai

கிராம ஊராட்சி செயலர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படுமா?

தமிழகத்தில் காலியாக உள்ள கிராம ஊராட்சி செயலா் பணியிடங்களை, ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் நியமிப்பதைத் தவிா்த்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக நிரப்பும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

time-read
1 min  |
May 22, 2023
சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்
Dinamani Chennai

சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்

ஆளுநரிடம் பாஜக மனு

time-read
1 min  |
May 22, 2023
திமுக ஆட்சியில் ஆன்மிகப் புரட்சி: அமைச்சர் சேகர்பாபு
Dinamani Chennai

திமுக ஆட்சியில் ஆன்மிகப் புரட்சி: அமைச்சர் சேகர்பாபு

திமுக ஆட்சியில் ஆன்மிகப் புரட்சி நடந்து கொண்டிருக்கின்றது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

time-read
1 min  |
May 22, 2023
அதானி விவகாரம்: 6 பங்கு முதலீட்டு நிறுவனங்கள் குறித்து விரிவான ஆய்வு
Dinamani Chennai

அதானி விவகாரம்: 6 பங்கு முதலீட்டு நிறுவனங்கள் குறித்து விரிவான ஆய்வு

உச்சநீதிமன்ற நிபுணர் குழு

time-read
1 min  |
May 22, 2023
Dinamani Chennai

"ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்ற அடையாள ஆவணம் தேவையில்லை"

ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், வங்கிகளில் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபரும் மாற்றிக் கொள்ளலாம் என வங்கிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

time-read
1 min  |
May 22, 2023
ஊராட்சிகளில் இணையவழியில் சொத்து வரி செலுத்தும் வசதி
Dinamani Chennai

ஊராட்சிகளில் இணையவழியில் சொத்து வரி செலுத்தும் வசதி

இன்று அறிமுகம்

time-read
1 min  |
May 22, 2023
ஐ.நா. சீர்திருத்தமே உடனடித் தேவை
Dinamani Chennai

ஐ.நா. சீர்திருத்தமே உடனடித் தேவை

ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி

time-read
1 min  |
May 22, 2023
கடந்த நிதியாண்டில் 48% உயர்ந்த வீடுகள் விற்பனை
Dinamani Chennai

கடந்த நிதியாண்டில் 48% உயர்ந்த வீடுகள் விற்பனை

கடந்த நிதியாண்டில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 48 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

time-read
1 min  |
May 21, 2023
அநிநியச் செலாவணி கையிருப்பு 59,953 கோடி டாலராக உயர்வு
Dinamani Chennai

அநிநியச் செலாவணி கையிருப்பு 59,953 கோடி டாலராக உயர்வு

கடந்த 12-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி 59,953 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

time-read
1 min  |
May 21, 2023