CATEGORIES
فئات
விசாரணையில் ஒத்துழைக்க மறுத்தார் யூன்
கிளர்ச்சி ஏற்படுத்தியது, பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் எதிர்கொள்கிறார்.
செல்வப்பெருந்தகை: கல்வி நிலையங்களில் காவிமயம் வேண்டாம்
கோமியத்தில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளது என்று இந்திய தொழில்நுட்பக் கழக இயக்குநர் காமகோடி அண்மையில் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதற்கு அரசியல் தலைவர்களும் கல்வியாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருவது தொடர்கிறது.
'எந்தக் கதாபாத்திரத்துக்கும் கச்சிதமாகப் பொருந்துவார் தனுஷ்’
தன் வயதுக்கு எட்டவேண்டிய உயரத்தைவிட நடிகர் தனுஷ் இப்போது இருக்கும் இடம் மிகப்பெரியது. அவர் அடைந்துள்ள உயரமும் மிக அதிகமானது,” என்கிறார் இயக்குநர் சேகர் கமுல்லா.
அனைத்து வீடுகளிலும் நடக்கும் கதையைக் கொண்டு உருவாகி உள்ள படம் 'குடும்பஸ்தன்’
வினோத்குமார் தயாரிப்பில், ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், ஷான்வி நடித்திருக்கும் படம் ‘குடும்பஸ்தன்’.
இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் தடுப்புவேலியால் புதிய பதற்றம்
இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் ஏற்படுத்தப்பட்டு உள்ள முள்வேலி இரு நாடுகளுக்கும் இடையில் புதிய பதற்றத்தை எழுப்பி உள்ளது.
கடும் மன அழுத்தத்துக்குப் பயன்படுத்தப்படும் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் 'கெட்டமின்’
சிங்கப்பூரில் கடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சை அளிக்க கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருளான ‘கெட்டமின்’ கடந்த நான்கு ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.
'விமான நிலைய திட்டத்தில் அரசுக்கு ஏதோ லாபம் இருக்கிறது’ பரந்தூர் மக்களுக்குத் துணை நிற்போம்: விஜய்
“திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதன் மூலம் ஆளுங்கட்சியை எதிர்த்து வந்தது. இப்போது ஆளும் கட்சியாக இருந்துகொண்டு விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.
ஓவியம் வரைந்து வியக்கவைத்த விலங்குகள்
மனிதர்களால் மட்டும்தான் கலைப்படைப்புகளை உருவாக்க முடியுமா என்று சிலர் நினைக்கக்கூடும்.
குடிநுழைவுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை: டிரம்ப்
புதிய அமெரிக்க அதிபராகத் திங்கட்கிழமை (ஜனவரி 20) பதவியேற்ற டோனல்ட் டிரம்ப், தமது முதல் நாள் பதவிக்காலத்திலேயே குடிநுழைவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்போவதாக பல்லாயிரக்கணக்கானோர் கூடி ஆர்ப்பரித்த தமது ஆதரவாளர்கள் மத்தியில் சூளுரைத்தார்.
ஆசியானில் இணையக் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க ஸாகித் வேண்டுகோள் செயற்குழு அமைக்க பரிந்துரை
அனைத்துலகக் காவல்துறையைப் போன்ற ஆசியான் வட்டாரத்துக்கென இணையக் குற்றங்களைத் தடுக்கும் செயற்குழு ஒன்றை அமைப்பது குறித்து பரிசீலிக்கவேண்டும் என்று மலேசியத் துணைப் பிரதமர் அகம்மது ஸாகித் ஹமிடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திறன் மேம்பாடு, பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்க இலக்கு
சிங்கப்பூருக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பொருளியல் உறவுகளை வலுப்படுத்தவும் திறன் மேம்பாட்டை அதிகரிக்கவும் தெலுங்கானா அரசும் சிங்கப்பூரின் தொழில்நுட்பக் கல்விக் கழகமும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
காஸாவுக்கு $300,000 நிவாரணம் வழங்கும் செஞ்சிலுவைச் சங்கம்
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான ஆதரவு வழங்க சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் 300,000 வெள்ளி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை வழங்கப்போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்கத்தா மருத்துவர் கொலை: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
பெண் மருத்துவர் ஒருவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொன்ற வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மவுண்ட்பேட்டன் தொகுதி வரலாற்று கலைப்படைப்பு
சிங்கப்பூரின் எஸ்ஜி60 கொண்டாட்டத்தை முன்னிட்டு, இவ்வாண்டின் சிங்கப்பூர் கலை வாரத்தில் ‘பேஷன்ஆர்ட்ஸ்’ கலைத்திட்டத்தின்கீழ் இடம்பெற்றுள்ள கலைப்படைப்பு ஒன்று நாட்டின் வரலாற்றுக்கும் அதை வலுப்படுத்தும் சமூக உணர்விற்கும் ஒரு தனித்துவமான அர்ப்பணிப்பை வழங்குகிறது.
பிணைக்கைதிகளையும் கைதிகளையும் விடுவித்துவரும் ஹமாஸ், இஸ்ரேல்
காஸாவில் போர் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (ஜனவரி 20) நடப்புக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் இயங்கும் டிக்டாக்
டிக்டாக் சமூக ஊடகத் தளம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஜனவரி 19) அமெரிக்காவில் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
இதய நோயாளிகளை ஆதரிக்கும் புதிய ‘ஹார்ட்லேண்டர்ஸ்' திட்டம்
லாப நோக்கமற்ற அமைப்பான லியென் அறநிறுவனமும் சிங்கப்பூர் தேசிய இதய நிலையமும் இணைந்து ‘ஹார்ட்லேண்டர்ஸ்’ எனும் திட்டத்தை திங்கட்கிழமை (ஜனவரி 20) அறிமுகப்படுத்தியுள்ளன.
கொவிட்-19 பரவலால் தாமதமான ‘பிடிஓ’ திட்டங்கள் நிறைவு
கொவிட்-19 நெருக்கடிநிலையின் காரணமாகத் தாமதமடைந்த ‘பிடிஓ’ எனப்படும் தேவைக்கேற்ப கட்டப்படும் வீடுகள் தொடர்பான 92 திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) தெரிவித்தார்.
இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சர் சிங்கப்பூருக்கு அறிமுகப் பயணம்
இந்தோனீசியத் தற்காப்பு அமைச்சர் சாஃப்ரி சம்சுதீன் சிங்கப்பூருக்கு அறிமுகப் பயணம் மேற்கொண்டுள்ளதாகத் தற்காப்பு அமைச்சு திங்கட்கிழமையன்று (ஜனவரி 20) தெரிவித்தது.
'அணுசக்தி உற்பத்தி அதிகரிப்பு 2030க்குள் சாத்தியம் இல்லை'
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தங்கள் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய அதிக நாடுகள் அணுசக்திக்கு மாறுவது குறித்து சிந்திக்கலாம்.
மாப்பிள்ளை கிடைத்ததும் மாணவனை விஷம் வைத்துக் கொன்ற கொடூரம் காதலன் கொலை: 24 வயது பெண்ணுக்கு மரண தண்டனை
ஈராண்டுகளுக்கு முன்னர் பழச்சாற்றில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து கொடுத்து தமது காதலனைக் கொலை செய்த இளம்பெண்ணுக்கு கேரள நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உள்ளது.
இளையர்களுக்கான ‘மனித நூலகம்
வெளியுறவு விவகாரம், ஆசிரியர், மருத்துவம், தற்காப்பு, தொற்றுத் தடுப்பு, தகவல் தொடர்பு, அரசு நீதிமன்றங்கள், சிறைச் சேவை என அரசாங்கப் பணிகளில் சிறந்து விளங்கும் ஒன்பது பேச்சாளர்கள், ஜனவரி 18ஆம் தேதி (சனிக்கிழமை) ‘மனித நூலகம்' எனும் நிகழ்ச்சியில் நூல்களாகத் திகழ்ந்து தங்களுடைய பணியிட அனுபவங்களையும் அறிவுரைகளையும் சுமார் 40 பங்கேற்பாளர்களுக்கு எடுத்துரைத்தனர்.
‘மாடலிங்’, ‘சினிமா’ இரண்டும் வெவ்வேறு உலகங்கள்: ரேச்சல்
பா.ரஞ்சித் இயக்கிய ‘நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் பிரபல மாடல் அழகியான வின்சு ரேச்சல்.
மத்திய அரசு நிதி தராததால்தான் கடன் சுமை: தங்கம் தென்னரசு
ஆனால், மெட்ரோ போன்ற மேம்பாட்டுத் நிதியை மத்திய அரசு ஒதுக்காததால் மட்டுமே தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகரித்துள்ளது.
திமுகவில் இணைந்தார் திவ்யா சத்யராஜ்
நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், ஞாயிற்றுக்கிழமை முதல் அமைச்சரும் திமுக வின் தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.
தூறலுக்கிடையே துள்ளல், இனங்களுக்கிடையே பொங்கல்
வானம்பாடிகளின் மக்களிசை, காலையில் மக்களை வரவேற்ற மாடுகள், நவதானியங்கள் இலிருந்து பானையில் முளைத்து நிமிர்ந்து நின்ற முளைப்பாரி, உயர்ந்த கும்பம், 'பாடும் செந்தில் கணேஷ்-ராஜலட்சுமி இணைய நிகழ்ச்சி நெறியாளர் ஜி டி மணியின் பொங்கல்சார் தகவல்கள் என புக் கிட் பாஞ்சாங் வட்டாரத்தையே குதூகலமாக மாற்றியது, ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) காலை நடந்த பொங்கல் கொண்டாட்டம்.
தென்கொரிய நீதிமன்ற கட்டடத்திற்குள் அத்துமீறி நுழைந்த யூன் ஆதரவாளர்கள்
தென்கொரியாவில் அரசியல் குற்றம் சுமத்தப்பட்டு தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ள அதிபர் யூன் சுக் இயோலின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர், ஜனவரி 19ஆம் தேதி, நீதிமன்றக் கட்டடத்துக்குள் அத்துமீறி நுழைவது நேரலையில் காட்டப்பட்டுள்ளது.
துணைப்பாட வகுப்புகளுக்கு $1.8 பி. செலவிட்ட குடும்பங்கள்
சிங்கப்பூரிலுள்ள குடும்பங்கள் பிள்ளைகளின் துணைப்பாட வகுப்புகளுக்கு 2023ஆம் ஆண்டில் $1.8 பில்லியனைச் செலவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
‘வட்டார ஒருங்கிணைப்பை ஆசியான் வலுப்படுத்த வேண்டும்*
ஆசியான், வட்டார ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்தி, அதன் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
குடும்பங்களின் கல்விச் செலவு கூடியதற்கு பாலர் கல்விச் செலவு அதிகரிப்பு காரணம்
சிங்கப்பூரில் பிள்ளைகளின் பாலர் கல்விக்குக் குடும்பங்கள் கூடுதலாகச் செலவிடுவது தெரியவந்துள்ளது.