CATEGORIES
فئات
செஞ்சடை வேடுவன்
சிவபெருமான் வேடுவனாகத் தோன்றி அன்பர்களுக்கு அருள்பாலித்ததை அநேகத்தலபுராணங்கள் குறிக்கின்றன. ஊழிக்காலம் முடிந்து உலகைப் படைக்கத் தொடங்கிய வேளையில் சிவபெருமான் வேடனாகத் தோன்றி பிரம்மனுக்கு அருள் புரிந்தான் என்று குடந்தைப் புராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோருக்கு வழிகாட்டவும், பகைவர்களை அழிக்கவும் வேடனாகத் தோன்றியதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. பெருமான் வேடனாகத் தோன்றி அருள்பாலித்த வரலாறுகள் சிலவற்றைக் கண்டு மகிழலாம்.
சடாரண்ய தலங்கள்
காஞ்சியில், காமேஸ்வரிக்கும் ஏகாம்பரேஸ்வரனுக்கும் திருமண ஏற்பாடு கோலாகலமாக நடக்க ஆரம்பித்தது. உலக அம்மைக்கும், அப்பனுக்கும் நடக்க விருக்கும் திருமணத்தைக் காண தேவர்கள், முனிவர்கள் யட்சர்கள், கந்தர்வர்கள் என அனைவரும் கூடினார்கள். கூட்டம் அதிகமானால் அமளி துமளியும் அதிகமாகத்தானே இருக்கும்? இந்த அமளி துமளிக்கு நடுவே, இறைவனை வழிபடுவது என்பது, புலன் அடக்கிய முனிவர்களுக்கும் கைவராத காரியம் அல்லவா?
சிவயோகம்
குமரி முதல் இமயம் வரை சிவவழிபாடு பரந்துள்ளது. வேத வேதாந்த நூல்கள், புராணம், இதிகாசம், ஆகமம், காவியம், தர்ம சாஸ்திரம் என அனைத்தும் சிவ தத்துவத்தை பலவிதங்களில் விவரிக்கின்றன.
காஞ்சிபுரம் யோக ஸ்தானத்து லகுளீசரம்
யோகாசாரிய மதம் யோகங்களைப் போற்றி அட்டமா சித்திகளை வெறுத்து இறைவனோடு கலந் திருக்கும் நிலையே முத்திப்பேறு என்று கூறுகிறது. யோகத்தின் படிகள் 1. இயமம், 2.நியமம், 3.ஆதனம், 4.பிராணாயாமம், 5.பிரத்தியாகாரம், 6.தாரணை, 7.தியானம், 8. சமாதி என்று எட்டாகும். இவற்றை முறையே பயின்று கைவரப்பெற்றவர் கரணங்கள் இறந்து சாக்கிரா தீதத்தில் தன்னிலையை அறிந்து தன்னை மறந்திருக்கும் நிலையில் நிர்விகல்ப சமாதி எனும் பேரின்ப நிலையை அடைவர்.
தந்தையும் மகனும் உருவாக்கிய பேலூர் கலைக்கோயில்!
கர்நாடக தேசம் ஹொய் சல அரசர்களால் ஆளப்பட்ட காலம் அது. விஷ்ணுவர்த்தனர் என்பவர் பேரரசராக இருந்து, நல்ல முறையில் ஆட்சி செலுத்தி வந்தார்; கலைகளையும் ஆட்சி கலைஞர்களையும் நன்கு ஆதரித்து, கலைகள் செழித்து வளரும்படியாக செலுத்தி வந்தார்.
காரடையான் நோன்பு 14.3.2021
காரடையான் நோன்பு காட்டும் வாழ்வியல் ரகசியங்கள்
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அறிவதற்கு அரிதான வேதாந்தக் கருத்துகளைப் பாமரனும் புரிந்து கொள்ளும் படி எளிய உலகியல் உதாரணங்கள் மூலம் விளக்க வல்லவர் வில்லூர் நடாதூர் ஸ்ரீபாஷ்ய சிம்மாசனம் டாக்டர் ஸ்ரீ உவே கருணாகராச்சாரியார் சுவாமிகள்.
(லிங்கோத்பவம்) - சிவம் லிங்கமாக மாறிய மகாசிவராத்திரி
பார்வதி தேவி நம் பொருட்டு கௌதம மகரிஷியிடம் ஒரு கேள்வியை கேட்டாள். அதாவது, இந்த பூவுலகில் மகா சிவராத்திரி என்கிறார்களே அது என்ன?
எத்தனை கோடி இன்பம்!
புனிதம் நிறைந்த இந்த மனித வாழ்வின் பொருள் தெரியாமலேயே, பல பேரின் வாழ்க்கை முடிந்து வருகிற பரிதாபத்தைத் தான் அனைவரும் அறிந்த கீழ் கண்ட பாடல் எடுத்துரைக்கின்றது.
காவிரியாய்-காலாறாய்-கழியுமாகி
சிவபெருமாள் எங்கும் பரந்து விரிந்திருக்கின்ற நிலையை விரிவாகக் கூறித்துதிக்கும் பாசுரம் திருநாவுக்கரசரின் “நின்ற திருத்தாண்டகம்” ஆகும்.
திருக்குறளில் படமெடுக்கும் நாகம்!
உலகெங்கும் நாகங்கள் தென்படுகின்றன. நஞ்சுள்ள நாகங்கள், நஞ்சில்லாத நாகங்கள் எனப் பாம்புகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. திருக்குறளிலும் பாம்பு மூன்று குறள்களில் ஊர்ந்து வருகிறது. பொருட் பாலில் இரண்டு இடங்களிலும் காமத்துப் பாலில் ஓர் இடத்திலும் நாகத்தைப் பற்றிப் பேசுகிறது வள்ளுவம்.
நீரும் நெருப்புமாகி ஆடும் பிரான்
செம்பொருட்சோதித் தீயாக விளங்குபவன் சிவபெருமான். அவன் ஓயாது உலகம் இயங்கும் பொருட்டு ஆனந்த மாநடம் ஆடிக் கொண்டே இருக்கின்றான். அவன் அருளாக வெளிப்பட்ட பராசத்தியின் வடிவமாகத் திகழ்வது தண்ணீராகும். சிவபெருமான் நீரோடு இணைவது சிவசக்தி சங்கமமாகும். இதுவே உலக உயிர்களிடத்தில் பரஸ்பர இன்பத்தை வளர்ப்பதாகும்.
இறந்தவரை பிழைக்க வைக்கும் இரக்கமிகு கலைவாணி!
வசந்த பஞ்சமி 16-2-2021
பெருமாளும் பெருமாளும்
(23.2.2021 குலசேகரர் அவதார நட்சத்திரம்)
காரியத்தடை நீக்கும் மாலினி
"சாமளை" இந்த உமையம்மை வடக்கு திசையின் காவல் தேவதையாக திகழ்கின்றாள். சாமளை என்ற தேவதை உமையம்மைக்கு உடன் நின்று அம்மை சொற்படியே செயலாக்கப்படுத்துபவள்.
வழித்துணைநாதர்
ஷேத்ரக் கோவைப் பாடலில் மூதூருக்கு அடுத்தபடியாக அருணகிரிநாதர் குறிப்பிட்டிருக்கும் தலம் விரிஞ்சை எனப்படும் திருவிரிஞ்சிபுரம் ஆகும்.
காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் காந்தாரி
"எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க நீங்கள் யார்?"
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
அறவழி தவறிய மன்னர்கள் அதிக அளவில் பூமியை ஆண்டு வந்த நிலையில், அவர்களை அழித்து நல்லறம் செழிக்கும்படிச் செய்ய வேண்டும் என்று விரும்பினார் திருமால். அதனால், ஜமதக்னியின் மகனான பரசுராமருக்குள் தனது சக்தியைச் செலுத்தினார். பரசுராமர் மூலமாகப் பல தீய மன்னர்களை அழித்தார்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
நர்மதா நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற ஊரில் கூடாரம் அமைத்துச் சில நாட்கள் தங்கியிருந்தான் ராவணன். அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அது ராவணனின் கூடாரத்தையே மூழ் கடித்துவிட்டது. இவ்வளவு பெரிய வெள்ளம் எப்படி வந்தது என்று திகைத்தபடி ராவணன் வெளியே வந்து பார்த்தான். அங்கே ஆயிரம் தோள் படைத்த ஒருவனும் சில பெண்களும் ராவணனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.
ஆழ்வார்கள் கண்ட கருட சேவை
வைணவ மரபிலே கருட சேவைக்கு தனி ஏற்ற முண்டு. வேதத்தின் மூலம், வேதம் காட்டும் பரம் பொருளை தரிசிப்பதே, கருட சேவையின் உட்பொருள்.
ஜெயதேவர் பூஜித்த ராதா மாதவன்!
சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவம். கி.பி. 1670 ஆம் ஆண்டில், வட இந்தியாவில், ஸ்திரமாக நின்றுவிட்ட முகலாய சாம்ராஜ்ஜியத்தை, ஒளரங்கசீப் கோலோச்சிய காலம் அது.
அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருக்கடையூர் அபிராமி
அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடவூரில் அமையப்பெற்றுள்ளது. இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் அடங்கும். இத்திருக் கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் அமையப் பெற்றுள்ளது.
எப்படி அழைப்பேன் உன்னை?
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
தாயுமானவ தனிக் கருணைப் பெருநிதி
தாயுமானவர் குரு பூஜை 5-2-2021
நாய்க்கு மோட்சம்!
தாமிரபரணி ஆற்றின் வடகரை யில் ஒரு யோகி வாழ்ந்து வந்தார். அவர் தினமும் விடியலில் எழுந்து ஆற்றில் குளித்து. தென் கரையில் இருக்கும் எம்பெருமானை இக்கரையில் இருந்தே வணங்குவார்.
தனித்துவமிக்க தர்ப்பை
இந்து மதத்தைப் பொறுத்த வரையில், இறைவனை பூஜிப்பது முதல் முன்னோர்களை பூஜிப்பது வரையில் அனைத்திலும் தர்ப்பைப் புல்லிற்குத்தான் முதல் இடம். இப்படி எல்லா சுப காரியங்களுக்கும் பயன்படும் தர்ப்பைப் புல்லின் பெருமையை காண்போமா!
பழ தல விருட்சங்கள்
ஔவையாருக்கு சுட்டபழம் உதிர்த்துத் தந்தானே முருகன், அந்த நாவல் மரம், பழமுதிர்சோலையில் தலவிருட்சமாக விளங்குகிறது. இந்த நாவல் மரம் கந்தசஷ்டி நாட்களில் மட்டுமே கனிகளைத் தருகிறது என்பது வியப்பான தகவல்.
வேத சொரூபியான கருடன்
இறைவனை நமக்குக் காட்டித் தரும் கருவியாக வேதம் உள்ளது. ஆனால் நம் போன்ற சாமானியர்களுக்கு, வேதத்தைக் கற்று, அதன் பொருளை அறிந்து, அதைப் பின்பற்றி இறைவனை அறிவது என்பது மிகவும் கடினமான காரியம். எனவே நம்மேல் கருணைகொண்ட வேதமே, இறைவனை நமக்கு எளிதில் காட்டித் தரும் பொருட்டு மற்றோர் உருவம் எடுத்துக்கொண்டது.
ஞானியின் கணக்கு
திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஞானத்திலும் தவத்திலும் நிரம்பப் பெற்றவர்; அடக்கத்தில்... ஈடு இணை சொல்ல முடியாது.
ஞானப் பசியோடு வயிற்றுக்கும் ஈந்த வள்ளல்!
இறை தரிசனம் எல்லோருக்கும் வாய்க்கப் பெறுவதில்லை, எனக்கு அருள்புரிவீராக என ஏங்கி உள்ளம் உருக தொழுது, தேவைப்பட்டால் அழுது அரற்றி அவனை அழைப்பவர்களுக்கு மட்டுமே அவனது அருட்காட்சி கிடைக்கப் பெறும். இவ்வழி சென்று இறைவனை தரிசித்து அந்த பரவசத்தில் அவனுடன் ஒன்றிக் கலந்தவர்கள் எண்ணற்றோர்.