ஆனா, அதையும் தாண்டி தனித்துவமாக இருந்திருக்கார் என்பது அவரின் மறைவிற்குப் பிறகு அவரின் நண்பர்கள் சொல்ற செய்திகள்ல இருந்தே தெரிஞ்சுக்கிட்டேன். அப்பாவைப் பற்றி அவர்களின் புகழாரத்தைக் கேட்குறப்ப மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு...’’
நெகிழ்ந்து பேசுகிறார் பிரியா. சமீபத்தில் மறைந்த திரைப்பட ஆய்வறிஞர், சமூக வரலாற்றாளர், எழுத்தாளர், கட்டுரையாளர் எனப் பன்முகத்தன்மையுடன் விளங்கிய ராண்டார் கையின் மகள் இவர்.
சினிமா சம்பந்தமான அத்தனை வரலாற்றுத் தகவல்களையும் விவரமாகவும், தெளிவுடனும் அள்ளித் தந்தவர் ராண்டார் கை. ‘தமிழ்ச் சினிமா வரலாறு’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். ‘மெமரிஸ் ஆஃப் மெட்ராஸ்’ என்பது இவரின் கடைசிப் புத்தகம்.‘
தவப்புதல்வன்’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மேடை நிகழ்ச்சியில் பாடும், ‘லவ் இஸ் ஃபைன் டார்லிங்...’ என்ற பாடலின் வரிகளை எழுதியவர் ராண்டார் கைதான். ஆரம்பத்தில் வாசகர்கள் அவரை ஓர் ஆங்கிலேயர் என்றே நினைத்தனர். ஆனால், அவரின் இயற்பெயர் மாடபூஷி ரங்கதுரை என்பது பலர் அறியாதது.
இப்போது இவரின் அத்தனை நூல்களையும், இதனுடன் அச்சில் ஏறாத எழுத்துகளையும் தொகுத்து ராண்டார்கையின் நண்பர் ஸ்ரீதரன் உதவியுடன் வெளிக்கொண்டு வரவுள்ளார் பிரியா. இதனால் சினிமா, சமூக வரலாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்னும் அறியப்படாத பல அரிய தகவல்கள் கிடைக்கலாம் என உற்சாகமாகச் சொல்கிறார்.
‘‘அப்பா, 1934ல் இன்றைய ஆந்திர மாநிலம் நெல்லூரில் பிறந்தார். அப்போது சென்னை மாகாணமாக இருந்தது. பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்சி முடிச்சிட்டு அப்புறம் பி.எல் பண்ணினார். அப்பாவின் அப்பா அதாவது என் தாத்தாவும் சட்டம் படிச்சவர். அதனால, அப்பாவும் பி.எல் படிச்சார்.
படிப்பு முடிச்சதும் பிரபல வழக்கறிஞரான வி.சி.கோபால் ரத்னம் சார்கிட்ட ஜூனியராக சில ஆண்டுகள் இருந்தார். அப்போ, வி.சி.கோபால் ரத்னம் சாரைப் பார்க்க பிரபல சினிமா ஸ்டார்ஸ் உள்பட பெரிய பெரிய பிரமுகர்கள் எல்லாம் வருவாங்க.
அப்படியாக அப்பாவுக்கு அவங்கள பத்தின பின்புலம் எல்லாம் தெரியவந்திருக்கு. அப்பாவுக்கும் சினிமா மேல் அதீத ஆர்வம். நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்பார். சினிமா சம்பந்தமான ஆங்கிலப் புத்தகங்களும் படிப்பார்.
هذه القصة مأخوذة من طبعة 07-07-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 07-07-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!