கடந்த மே மாதம் 3ம் தேதி மணிப்பூர் உயர்நீதிமன்றம், ‘மணிப்பூரின் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட இந்து சமூகமான மெய்தி சமூகத்தையும் பழங்குடி பட்டியலில் சேர்க்கவேண்டும்’ என்ற உத்தரவுக்குப் பின்னணியில் அம்மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பாஜகவின் இந்துத்துவா அரசியல் இருக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
மெய்தி சமூகத்தின் சில பிரிவுகள் பட்டியல் இனத்திலும், பல பிரிவுகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் இருந்தாலும் இந்த எல்லா மெய்தி சமூகமும் தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 10 வருடங்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மணிப்பூரின் 3 முக்கியமான சமூகங்கள் மெய்தி, குக்கீஸ் மற்றும் நாகா இன மக்கள். இதில் மெய்திகள் அதிமாக பிற்படுத்தப்பட்ட சமூகம். மற்ற இரண்டுமே பழங்குடி மக்கள். நிலவியல்படி மணிப்பூரின் 90 சதவீத பரப்பு மலையும் மலை சார்ந்த காடுகளும்தான்.
இதில்தான் பழங்குடிகளான குக்கீஸ் மற்றும் நாகா இன மக்கள் வாழ்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமூகமான மெய்திகளில் பெரும்பான்மையானோர் மணிப்பூரின் தலைநகரான இம்ஃபால் உட்பட சமவெளி பகுதிகளில் வசிக்கிறார்கள்.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆள்வதற்கு முன்பாக இந்தியாவின் சமூகப் பிரிவுகளுக்கு குறிப்பிட்ட பெயர் எல்லாம் கிடையாது. ஆங்கிலேயர் ஆட்சியில்தான் இன்னாருக்கு இன்ன பெயர் என்று சூட்டப்பட்டது. அப்படித்தான் மணிப்பூரிலும் குக்கீஸ், நாகா, மெய்தி என்று மக்கள் தங்களை அடையாளம் கண்டுகொண்டனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே மணிப்பூரின் மற்ற சமூகங்களைவிட மெய்தி சமூகப் பிரிவு ஓரளவு நல்ல நிலையில் இருந்தது. இதனால் தங்களை பழங்குடி என்று சொல்வதற்கு அவை எதிர்ப்புக் காட்டின.
இன்றைய நிலையில் ஒரு தலைநகருக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் அதுவும் அரசு வேலை, அரசு சேவைகளில் மிகவும் முன்னணியில் இருக்கும் சமூகம் இந்த மெய்தி சமூகம்தான்.
குக்கீஸ் மற்றும் நாகா போன்ற பழங்குடி சமூகங்களைவிட சமூக நிலையில் முன்னேறிய இடத்தில் இருக்கும் மெய்தி சமூகம், இன்று தங்களை பழங்குடி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று தொடர்ச்சியாக கோரிக்கையை வைத்து போராடுவதற்கு பின்புலமாக பழங்குடிகளைப் பற்றிய சில பொய்ப் பிரசாரங்களே காரணம் என்கிறார்கள்.
هذه القصة مأخوذة من طبعة 21-07-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 21-07-2023 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.