கடந்த ஆண்டு ஜூன் 28ம்தேதி. பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், ‘இந்தியா’ கூட்டணியின் முதல் கூட்டம் கூடியது.
15 எதிர்க்கட்சிகள் அதில் பங்கேற்றன. ‘2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவைத் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புவதே நமது வேலை’ என அந்தக்கூட்டத்தில் ஒரு மனதாக உறுதியேற்கப்பட்டது.
ஆனால், எண்ணி ஏழே மாதங்களில் ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் மூலைக்கு ஒன்றாக முறைத்துக்கொண்டு திரும்ப ஆரம்பித்திருக்கின்றன. ‘இந்தியா’ கூட்டணியில் இவ்வளவு விரைவில் விரிசல்கள் விழும் என யாரும் எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.
சரி. ‘இந்தியா’ கூட்டணியில் என்னதான் பிரச்னை?
கடந்த ஆண்டு இறுதியில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலும், அதில் காங்கிரஸ் அடைந்த தோல்வியும்தான் ‘இந்தியா’ கூட்டணியின் பிரச்னைக்கான பிள்ளையார் சுழியாகக் கருதப்படுகிறது.அதைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு பிரச்னை.‘‘காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் காட்டும் அக்கறையை தொகுதிப் பங்கீட்டில் காட்ட மறுக்கிறது...’’ என்ற குமுறல் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பல கட்சிகளிடம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
கூடவே ‘‘உயிர்பிழைத்து, உயிர்த்தெழ வேண்டிய நிலையில் இருக்கிற காங்கிரஸ் கட்சி, மறுமலர்ச்சியுடன் இருப்பதைப் போல காட்டிக் கொள்கிறது...’’ என்ற எண்ணப்போக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள பல கட்சிகளிடம் நிலவுகிறதாம்.‘இந்தியா’ கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்று திரிணாமுல் காங்கிரஸ். மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ், மேற்கு வங்கத்தையும் தாண்டி அசாம், மேகாலயா மாநிலங்களில் காங்கிரசுடன் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது.
அதேபோல ‘இந்தியா’ கூட்டணியின் மற்றொரு முதன்மைக் கட்சியான ஆம் ஆத்மிக்கு தில்லி, பஞ்சாப்பைத் தாண்டி அரியானா, குஜராத் மாநிலங்களிலும் காங்கிரசுடன் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்ள ஆசை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு இதில் துளியும் விருப்பம் இருப்பதாகத் தெரியவில்லை என திட்டவட்டமாக சொல்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
هذه القصة مأخوذة من طبعة 09-02-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 09-02-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.