நிறைய மருத்துவக் குணங்களையும், ஏராளமான ஊட்டச்சத்துகளையும் கொண்ட பழம் இது.
குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே விளைவிக்கப்பட்டு, உலகம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது. இதன் தேவை அதிகமாக இருப்பதால் விலையும் அதிகம். நம்ம ஊரில் இதனை பட்டர் ஃப்ரூட் என்று அழைக்கின்றனர். காரணம், பெரும்பாலான வேகன் பேக்கரிகளில் வெண்ணெய்க்குப் பதிலாக அவகேடோவைப் பயன்படுத்துகின்றனர்.
மட்டுமல்ல, சுமார் 10 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மெக்சிகோவில் அவகேடோ விவசாயம் செய்யப்பட்டதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரைக்கும் தென் அமெரிக்க நாடுகள், இஸ்ரேலில் மட்டும் பிரத்யேகமாக விளையக்கூடிய ஒரு பழமாக இருந்து வந்தது, அவகேடோ. 100 வருடங்களுக்கு முன்புதான் இந்தியா போன்ற நாடுகளில் அவகேடோ விவசாயம் கால்பதித்தது. பொதுவாக வெப்பநிலை 20 முதல் 30 டிகிரி செல்சியஸுக்குள் உள்ள பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஒரு பழம் இது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளாவில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே விளைகிறது. இந்நிலையில் வெப்பநிலை அதிகமுள்ள தெலங்கானாவில் அவகேடோ விவசாயம் செய்து வருகிறார் ஜெய்ப்பால் நாய்க். தெலங்கானாவின் முதல் அவகேடோ விவசாயியும் இவரே. ஹைதராபாத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம், தெப்படகுடா. இந்தக் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர், ஜெய்ப்பால் நாய்க்.
பள்ளிப்படிப்பை தெலுங்கு வழியில் படித்தார். சிறு வயதிலிருந்தே எல்லோருக்கும் தெரிந்த பெரிய ஆளாக வேண்டும் என்பது அவரது கனவு. ஓரளவுக்கு நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்ததால் ஜெய்ப்பாலின் விருப்பங்களுக்கு எந்த தடையும் வீட்டில் இல்லை. இந்தியாவில் எஞ்சினியர் படிப்பை முடித்துவிட்டு, மேற்படிப்பை வெளிநாட்டுக்குச் சென்று படித்தால் ஊரில் நல்ல மரியாதையும், புகழும் கிடைக்கும் என்று நினைத்தார் ஜெய்ப்பால்.
هذه القصة مأخوذة من طبعة 07-06-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 07-06-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.