சமீபத்தில் ‘எக்கோ’ இசை நிறுவனம், இளையராஜா இசையமைத்த 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்த தங்களுக்கு உரிமை உள்ளதாகக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. அதில்தான் மேற்சொன்ன வாதத்தை முன்வைத்துள்ளது.
இளையராஜாவும் காப்பிரைட்ஸ் பிரச்னையும் கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஓயாமல் இடியாப்ப சிக்கலாகவே இருக்கிறது. இசையமைப்பாளர்கள் உருவாக்கும் இசை யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்னை இசையமைப்பாளர்களுக்கும், இசை நிறுவனங்களுக்கும் இடையில் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டு இளையராஜா சென்னை போலீஸ் கமிஷனரைச் சந்தித்து ‘எக்கோ’ நிறுவனத்தின் மீது ஒரு புகார் அளித்தார். அதில், தனது பாடல்கள் அனைத்தையும் சி.டி.யாக வெளியிடும் உரிமையை ‘எக்கோ’ ரிக்கார்டிங் நிறுவனத்துக்கு கொடுத்ததாகவும், இது சம்பந்தமாக ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், குறிப்பிட்ட பங்குத் தொகையைத் தர அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால், ஒப்பந்தப்படி கடந்த 20 வருடங்களாக பங்குத் தொகை எதுவும் தரவில்லை என்றும், பாடல் மூலம் பல கோடி ரூபாய் சம்பாதித்து மோசடி செய்துள்ளதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ‘எக்கோ’ நிறுவனத்திடமிருந்து 20 ஆயிரம் சிடிகளை அப்போது பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் இளையராஜாவின் புகாரில் பதிவான வழக்குகளை ரத்து செய்யக்கோரி ‘எக்கோ’ நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. பின்னர் 2018ம் ஆண்டு இது ஒரு சிவில் பிரச்னை என்பதால் குற்றவியல் புகார் அளிக்க முடியாது எனக் கூறி இந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுஒருபுறம் இருக்க 2014ம் ஆண்டு ‘எக்கோ’ உள்ளிட்ட சில இசை நிறுவனங்கள் மீது, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளது. இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக உரிமை இருக்கிறது எனத் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
هذه القصة مأخوذة من طبعة 28-06-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 28-06-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.