இந்த விளையாட்டை அறியாத ஒரு அமெரிக்கர் கூட இருக்க மாட்டார். அமெரிக்காவின் தேசிய விளையாட்டும் இதுவே.
தவிர, கடந்த ஐம்பது வருடங்களாக அமெரிக்கர்களின் மத்தியில் அமெரிக்கன் ஃபுட்பாலும் பிரபலமாகி வருகிறது. அத்துடன் அமெரிக்கன் ஃபுட்பால் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
பேஸ்பால், அமெரிக்கன் ஃபுட்பாலுக்கு அடுத்து அமெரிக்கர்கள் விரும்பும் ஒரு விளையாட்டாக இருக்கிறது, கூடைப்பந்து.
1980களிலிருந்து அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டு ஏறுமுகத்தில் உள்ளது. 21ம் நூற்றாண்டில்தான் அமெரிக்காவின் முக்கிய விளையாட்டுகளின் பட்டியலில் ஐஸ் ஹாக்கியும், கால்பந்தும் இடம்பிடித்தன.
பேஸ்பால், அமெரிக்கன் ஃபுட்பால், கூடைப்பந்து, ஐஸ் ஹாக்கி, கால்பந்து ஆகியவற்றை அமெரிக்காவின் மிகப்பெரிய ஐந்து விளையாட்டுகள் என்கின்றனர்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் பேஸ்பாலுக்கு அடுத்து குத்துச்சண்டைதான் அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது. மட்டுமல்ல, கோல்ஃப், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளுக்கும் அமெரிக்காவில் கணிசமான ரசிகர்கள் இருக்கின்றனர்.
இன்று அமெரிக்காவில் மிகப்பிரபலமான விளையாட்டுகளின் பட்டியலில் டென்னிஸுக்கு ஆறாம் இடம் கிடைத்துள்ளது. சமீபத்தில் தற்காப்புக்கலை சார்ந்த விளையாட்டுகளுக்கும் அமெரிக்காவில் மவுசு கூடியிருக்கிறது.
தவிர, வாட்டர் ஸ்கீயிங், விண்ட் - சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங், ஸ்னோபோர்டிங், பீச் வாலிபால் போன்ற விளையாட்டுகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே அமெரிக்காதான்.
இதுபோக அமெரிக்காவின் புரொஃபஷனல் விளையாட்டுகளின் சந்தை மதிப்பு சுமார் 5.76 லட்சம் கோடி ரூபாய். இது ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்காவை ஒன்று சேர்த்தால் கிடைக்கும் சந்தை மதிப்பை விட 50 சதவீதம் அதிகம்.
விஷயம் இதுவல்ல; சமீபத்தில் அமெரிக்காவுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது, கிரிக்கெட். ஆனால், 300 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடப் பட்டிருப்பதாக வரலாறு சொல்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்துக்குள் இருந்தது வட அமெரிக்கா. அப்போது ஆங்கிலேயர்கள் மூலமாக வட அமெரிக்கர்களுக்குக் கிரிக்கெட் விளையாட்டு அறிமுகமானது.
هذه القصة مأخوذة من طبعة 28-06-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة 28-06-2024 من Kungumam.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!