"ஆமாம்பா, கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் கூட இந்த நேரத்தில் தமிழகம் வந்து சென்றிருக்கிறாரே?"
"அரசுமுறைப் பயணமாக சென்னைக்கு வந்த கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வரும் திடக் கழிவு மேலாண்மைத் திட்டங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார். இது தவிர, குப்பைகளை மறுசுழற்சி செய்வது, பயோகேஸை பல்வேறு துறைகளில் பயன்படுத்துவது குறித்தும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்துள்ளார். இந்தப் பயணத்தில் அமைச்சர் உதய நிதியை சந்தித்தும் விவாதித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சொல்லப்பட்டாலும் வேறு சில விசயங்கள் இருக்கிறது என்று கிசுகிசுக்கிறது கோட்டை வட்டாரம்."
"அது என்னப்பா வேறு சில விசயங்கள்?"
"இதுகுறித்து கோட்டைத் தரப்பில் விசாரித்தபோது, தமிழகத்திலும் சிவக்குமாருக்கு நிறைய மின் உற்பத்தி தொடர்பான பல தொழில்கள் இருக்கிறது. சென்னையில் உள்ள மார்வாடிகள் சிலர் அவரது தொழில் பங்கேற்பாளர்கள். பவர் ப்ராஜெக்ட் (மின் உற்பத்தி திட்டம்) சில பிரச்சனைகள் இருக்கிறது. அதனை அவரது தொழில் பங்கேற்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அது குறித்து முதல்வர் ஸ்டாலின்ிடம் விவாதிக்கவிருந்தார் சிவக்குமார். ஆனால், முதல்வர் அமெரிக்காவில் இருப்பதால், உதய நிதியை சந்திக்குமாறு அவருக்கு அமெரிக்காவில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதனையடுத்து, உதய நிதியிடம் அப்பாயின்ட்மெண்ட் ஃபிக்ஸ் செய்யப்பட்டது. உதயநிதியை சந்திக்கத்தான் சிவக்குமார் சென்னை வந்திருக்கிறார். அவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றால், சந்திப்பின் என்ன என்பது குறித்து பல விமர்சனங்கள் எழக்கூடும். அதனால், திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிடுவது போல அரசு முறை பயணமாக வந்து செல்வது என அவர் தீர்மானித்தாராம். அதன்படியே நடந்திருக்கிறது.
தொழில்ரீதியாக உள்ள பிரச்சினைகளை உதயநிதியிடம் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார். பாசிட்டிவான பதில் உதயநிதி தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்."
"முதல்வர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சீனியர் அமைச்சர்களிடம் தொய்வு தெரிந்தபோதும், இளம் அமைச்சர்கள் சிலர் விறுவிறுப்பாக இயங்கிவருகிறார்களே?"
هذه القصة مأخوذة من طبعة September 07 - 10, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 07 - 10, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நஷ்டம்... ஆனாலும் இஷ்டம்!
நான் தயாரிப்பாளர் ஆனதே.... எதிர்பாராமல் நடந்ததுதான். என் னைப் படம் தயாரிக்கச் சொல்லி ஊக்கமும், உதவியும் செய்ததே ஏவி.எம்.மெய்யப்பன் அப்பச்சிதான்.
அந்த இரண்டு பெண்கள்! Exclusive ஆடியோ! சிக்கும் ஐக்கி!
சாமியாரும், ஈஷா யோகா மையத்தின் நிறுவனருமான ஜக்கி வாசுதேவ் குறித்து 'துவக்கத்திலிருந்தே 'நக்கீரன்' செய்திகள் மூலம் அம்பலப்படுத்தி வருகிறது.
ட்ரம்ப் செகண்ட் இன்னிங்ஸ்!
உலகமே உற்றுக்கவனித்த அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்று, இரண்டாவது முறை யாக அமெரிக்க அதிபராகிறார்.
விஷவாயு? மயங்கிவிழும் மாணவிகள் -திருவொற்றியூர் பள்ளி அவலம்!
எண்ணூரில் சில மாதங்களுக்கு முன்பாக விஷவாயுக் கசிவு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் தாக்கம் மாறுவதற்குள் திருவொற்றியூரில் திடீரென பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கிவிழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் பேரகராதி உருவாக்கும் ஜெர்மன் பேராசிரியர்!
தமிழ் என் தாய்மொழி யில்லை. ஆனால் தமிழ் செய்யுள்கள் என் காதலுக்குரிய வை' என்கிறார் ஈவா வில்டன்.
இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா!
போதைப் பொருள்களை ஒழிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஒருபக்கம் பிரச்சாரம் செய்துவரும் நிலையில், அதைப்பற்றிக் கொஞ்ச மும் கவலைப்படாமல் சமூக விரோதிகள் சிலர், சட்டவிரோத போதைப் பொருட்களை கடத்தியும், விநியோகித் தும் சட்டம் ஒழுங்கிற்கு சவால் விட்டு வருகின்றனர்.
கூட்டுறவு சங்க சுருட்டல்கள்! விரக்தியில் விவசாயிகள்!
விவசாயிகளுக்கும், நலிவடைந்த மக்க ளுக்கும் குறைந்த வட்டியிலும், வட்டி இல்லாம் லும் கடனுதவி செய்து, அவர்களின் வாழ்க்கைத்தரம் உயர பேருதவியாக இருப்பதற்காகத் தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் தொடங் கப்பட்டன. இப்படி பொது மக்கள், விவசாயிகளென எளிய மக்களுடன் பின்னிப்பிணைந்த கூட்டுறவு சங்கங்களில், தற்போது ஊழியர்கள், அதிகாரிகளென அனைவரும் முறைகேட்டில் ஈடுபடு வது தொடர் சம்பவங்களாக நடைபெற்றுவருகின்றது. இதனால் சுமார் 500 வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்துள்ளனர்.
விஜய் வருகையால் வேகம் எடுத்த தி.மு.க.!
அமைச்சர்களுக்கு மார்க் போடும் ஸ்டாலின்!
குடிபோதை! சினை மாடுகள் மீது மோதல்! ஈஷா நிர்வாகி அட்டூழியம்!
கோவை ஈஷா யோக மையத்தின் நிர்வாகி தினேஷ் ராஜா, மடக்காடு கிராமத் தினருகே குடிபோதையில் காரை ஓட்டி வந்து, தங்கமணி என்ற பெண் வளர்த்துவந்த சினைப்பசு மாடுகள் மீது மோதியதோடு, போலீஸ் ஆதரவோடு மிரட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவலி பதில்கள்
சிலிண்டர் 16.500 மட்டுமே [ஜார்கண்டில் மட்டும்]