பருவ மழை தொடங்க உள்ள நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்கும் வகையில், ஒக்கியம் மடுவு நீர்வழி பாதையை விரிவாக்கம் செய்யும் பணி மற்றும் 5 வழிச்சாலை பாலம் கட்டும் பணியை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. தென்சென்னைக்கு உட்பட்ட பள்ளிக்கரணை, வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகள் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, நீர்வழிப்பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முக்கிய காரணமாகும்.
இதேபோல், மேற்கண்ட பகுதிகளில் உள்ள ஏரிகள் முறையாக தூர்வாரி சீரமைக்கப்படாததால், போதிய மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. பல ஏரிகளின் கரைப்பகுதி வலுவிழந்து காணப்படுவதால், மழைக்காலங்களில் உடைப்பு ஏற்பட்டு, சுற்றுப் பகுதி வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
குறிப்பாக, பள்ளிக்கரணை ஏரி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் போதிய நீரை சேமிக்க முடியாமல், உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. அவ்வாறு வெளியேற்றப்படும் உபரிநீர், ஒக்கியம் மடுவு வழியாக கடலை நோக்கி சென்றடையும்.
பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், நேரடியாக கடலுக்கு எந்த கால்வாயும் இல்லை. இதனால் பல கிலோ மீட்டர் பயணிக்கும் வெள்ளம், இறுதியாக முட்டுக்காடு வரை செல்ல வேண்டியுள்ளது. இதனால் இந்த கால்வாய் அனைத்தையும் அரசு இப்போது மிகுந்த அக்கறையுடன் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
هذه القصة مأخوذة من طبعة September 23, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 23, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் ₹15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம்
மணலி மண்டலக்குழு கூட்டத்தில் 15 கோடி மதிப்பிலான பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
70 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் தயாரிக்க 2வது ஒப்பந்தம் - அதிகாரிகள் தகவல்
ஓட்டுநர் இல்லாத 70 மெட்ரோ ரயில் தயாரிப்பதற்காக இரண்டாவது ஒப்பந்தம் பிஇஎம்எல் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம்
காக்களூர் மற்றும் புட்லூரில் திமுக பாக முகவர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
புழல் காவாங்கரை, தண்டல் கழனி பகுதியில் மரண பள்ளங்களாக மாறிய சர்வீஸ் சாலை
சீரமைக்க கோரிக்கை
100 நாள் வேலை வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
புலிப் பாக்கம் ஊராட்சியில் நூறு நாள் வேலை முறையாக வழங்காததை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மாமல்லபுரம் வருகை
புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை
டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்
மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம்
சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
தாம்பரம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியில் ₹7,500 கோடி மதிப்பீட்டில் புதிதாக 18.000 வகுப்பறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு நிதியின் கீழ் 5 ஆண்டுகளில் 7,500 கோடி மதிப்பீட்டில் 18,000 வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.