நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு, துணி, இனிப்பு, எலக்ட்ரானிக் உள்ளிட்ட பொருட்கள் வியாபாரம் எதிர்பார்த்ததைவிட அதிகளவில் இருந்ததால் வியாபாரிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீபாவளிக்கு நாடு முழுவதும் சுமார் ரூ.4 லட்சம் கோடிக்கு விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று முன்தினம் (வியாழன்) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. காலையில் எழுந்து, குளித்து புத்தாடை அணிந்து கோயிலுக்கு சென்று வழிபட்டனர்.
பின்னர் உறவினர்கள், நண்பர்கள் ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர். இதை தொடர்ந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து தீபாவளி பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். அதிகாலை முதல் இரவு வரை போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொருவரும் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். குறிப்பாக, இந்த தீபாவளி பண்டிகைக்கு பகலில் வெடிக்கும் வெடியை விட இரவு நேரத்தில் வெடிக்கும் ராக்கெட், புஸ்வானம் மற்றும் வானில் வர்ணஜாலம் காட்டும் வெடிகள் அதிகளவில் வெடிக்கப்பட்டது.
சென்னையில் இதுபோன்ற பட்டாசுகள் வெடிக்கும்போது, இரவை பகலாக்கும் அளவுக்கு வானத்தில் பட்டாசு வர்ணஜாலம் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மழை இல்லாமல் இருந்தது பட்டாசு பிரியர்களை மட்டுமல்லாது, வியாபாரிகளையும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி, ஆங்காங்கே பட்டாசு விற்பனைக்காக தனி கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இவர்கள் சிவகாசியில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து இங்கு விற்பனை செய்தனர். அதேநேரம், சிவகாசியில் இருந்தும் வியாபாரிகள் பலரும் நேரடியாக சென்னை, கோவை உள்ளிட்ட நகர் பகுதிகளுக்கு வந்து தள்ளுபடி விற்பனையில் பட்டாசுகளை விற்பனை செய்து அசத்தினர். நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை வானம் தெளிவாக இருந்ததால் பொதுமக்களும் ஆர்வமுடன் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
هذه القصة مأخوذة من طبعة November 02, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 02, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பொதுமக்கள் சாலை மறியல்
கடும் போக்குவரத்து நெரிசல்
அரசுப்பள்ளி முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இன்று திமுக அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட சார்பில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக திமுக மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு
பள்ளிப்பட்டில் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்களுக்கு தையல் இயந்திரம்
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 5 ஊராட்சிகளில் தையல் பயிற்சி முடித்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரத்தில் உள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
பயனாளிக்கு மானியத்துடன் ஆட்டோ
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோவினை `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கோவூரை சேர்ந்த சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள்
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.