விருதுநகர், நவ. 11: பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான செலவுகளை அரசே ஏற்கும் என்று விருதுநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் சென்றார். அன்று பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்து தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து, அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு செய்த முதல்வர், தான் வாங்கி வந்த கேக், பிஸ்கட் மற்றும் பழங்களை அவர்களுக்கு வழங்கினார். இதனால் நெகிழ்ச்சியடைந்த மாணவிகள், முதல்வரை அப்பா என்று அழைத்து மகிழ்ந்தனர்
இதையடுத்து, விருதுநகரில் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவை, விருதுநகர் கள ஆய்வில் ஒரே நாளில் கோரிக்கை நிறைவேற்றம்
விருதுநகரில் நேற்று முன்தினம் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தொழிலாளர்களிடம் குறை கேட்டறிந்தார். அப்போது பெண் தொழிலாளர்கள் சிலர், பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்தால், 'அவர்களது குழந்தைகளின் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.
இதையேற்று விருதுநகரில் நேற்று நடந்த அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'பட்டாசு ஆலை விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும்' என்று அறிவித்தார். கோரிக்கை வைத்த ஒரே நாளில் முதல்வர் அறிவிப்பை வெளியிட்டதற்கு தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
هذه القصة مأخوذة من طبعة November 11, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 11, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
கட்சியும் உடைந்தது; கனவும் கலைந்தது உத்தவ்தாக்கரே, சரத்பவார் எதிர்காலம் என்ன?
மகாராஷ்டிராவில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது பாஜ கூட்டணி.
பாக்.கில் 37 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் நடந்த கலவரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக சூப்பர் கபடி லீக்கிற்கு அனுமதி
உலக சூப்பர் கபடி லீக் 2025 போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச கபடி கூட்டமைப்பு (ஐகேஎப்) முறைப்படி அனுமதி வழங்கி உள்ளது.
எனக்கு எதிரான சதி செய்தால் பிலிப்பைன்ஸ் அதிபரை கொல்வதற்கு ஒப்பந்தம்
பிலிப்பைன்சில் அதிபர் பெர்டினான்ட் மார்கோஸ் மற்றும் துணை அதிபர் சாரா டுடெர்டே இடையேயான கருத்து வேறுபாடு மற்றும் விரிசல் அதிகரித்து வருகின்றது.
பேருந்துகளின் சேவை மற்றும் தரம் குறித்து யணிகளின் மனநிறைவு மதிப்பீடு செய்ய ஆய்வு
மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை:
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது தமிழகத்தில் 27ம் தேதி வரை கன மழை பெய்யும்
வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் வருகிற 27ம் தேதி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை தேர்தல்களில் தொடர்ந்து சறுக்கும் காங்கிரஸ்
மாநிலம் வயநாடு, மகாராஷ்டிராவில் நந்தண்ட் மக்களவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் வயநாட்டில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும், நந்தண்ட் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர சவான் 1457 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மக்களவை தேர்தலில் 48க்கு 30, சட்டப்பேரவை தேர்தலில் 288க்கு 49 மகாராஷ்டிராவில் 6 மாதத்தில் என்ன நடந்தது?
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு முதல் அரசியல் களத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. 2019 சட்டமன்றத் தேர்தலில் பிளவுபடாத சிவசேனா, பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
டங்ஸ்டன் சுரங்கம் எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் ஒன்றிய அரசு ஆய்வுக்கு கூட அனுமதி வழங்க மாட்டோம்
டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து 20 ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினம் தமிழகம் முழுவதும் திமுகவினர் மரியாதை
மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 21ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் அவரது சிலை மற்றும் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.