சேலையூர் அகரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்த விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்ட கூலிப்படை தலைவன் சீசிங் ராஜாவுக்கு சொந்தமான வீடு மற்றும் உறவினர்கள், கூட்டாளிகளுக்கு சொந்தமான 14 இடங்களில் நேற்று துணை கமிஷனர் தலைமையில் 200 போலீசார் வருவாய் துறை அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர்.
ஆந்திர மாநிலம் சித்தூரை பூர்வீகமாக கொண்டவர் சீசிங் ராஜா (51). முதலில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். பின்னர் படப்பை குணாவுடன் இணைந்து கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்களில் ஈடுபட்டு வந்தார். அந்த நட்பு மூலம் கடந்த 2006ம் ஆண்டு ரமணி என்பவரை சீசிங் ராஜா வெட்டி கொலை செய்தார். அதன் பிறகு 2008ம் ஆண்டு வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரை வெட்டி படுகொலை செய்தார்.
அதே ஆண்டு ராஜமங்கலம் காவல் எல்லையில் விஜி என்பவரை வெட்டி படுகொலை செய்தார். 2010ம் ஆண்டு ஸ்கிராப் டெண்டர் எடுப்பதில் ஏற்பட்ட மோதலில் தனது கூட்டாளியான ஆற்காடு சுரேஷுடன் இணைந்து சின்னா மற்றும் ஸ்ரீதர் ஆகிய 2 வழக்கறிஞர்களை வெட்டி படுகொலை செய்தார். சீசிங் ராஜா மீது மொத்தம் 39 வழக்குகள் நிலுவையில் உள்ளது. பிரபல தாதா சம்பவ செந்திலுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல ஆண்டுகளாக காலியாக உள்ள பல கோடி மதிப்புள்ள மனைகள் மற்றும் நிலங்களை அடையாளம் கண்டு, அந்த இடத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
هذه القصة مأخوذة من طبعة November 20, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 20, 2024 من Dinakaran Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
பொதுமக்கள் சாலை மறியல்
கடும் போக்குவரத்து நெரிசல்
அரசுப்பள்ளி முன்பாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும்
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
இன்று திமுக அவசர ஆலோசனை கூட்டம் அமைச்சர் சா.மு.நாசர் தகவல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட சார்பில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக திமுக மாவட்டச் செயலாளர் அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைப்பு
பள்ளிப்பட்டில் 3ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பெண்களுக்கு தையல் இயந்திரம்
சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர், நல்லூர், பழைய எருமை வெட்டிபாளையம், புதிய எருமை வெட்டிபாளையம், காரனோடை ஆகிய 5 ஊராட்சிகளில் தையல் பயிற்சி முடித்த 9 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாதவரத்தில் உள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வடகரை, அழிஞ்சிவாக்கம் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கோயில் மண்டபம் இடித்து அகற்றம்
நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை
பயனாளிக்கு மானியத்துடன் ஆட்டோ
காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய ஆட்டோவினை `நிறைந்தது மனம்’ திட்டத்தின் கீழ் கோவூரை சேர்ந்த சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது.
புராதன சின்னங்களை காண மாமல்லபுரத்தில் குவிந்த மாணவர்கள்
உலக பாரம்பரிய வாரத்தையொட்டி, மாமல்லபுரம் புராதன சின்னங்களை சுற்றி பார்க்க இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்
ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியர்கள் திடீரென வேலை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
சாலையை கடக்கும் இடத்தில் விபத்து அபாயம்
வாலாஜாபாத் ஒன்றியம் கட்டவாக்கத்தில் பொதுமக்கள் சாலையை கடக்கும் இடத்தில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.