வாழ்க்கையை எளிதாக்குவோம்
Dinamani Chennai|October 28, 2024
குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்தல் என்றவகையிலான 'மினிமலிஸம்' எனப்படும் வாழ்வியலை, இப்போது ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பி வருகிறார்கள்.
கட்டுரையாளர்: எழுத்தாளர்

குறைந்த பட்சத் தேவைகளுடன் வாழ்தல் என்ற வகையிலான ‘மினிமலிஸம்’ எனப்படும் வாழ்வியலை, இப்போது ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பி வருகிறாா்கள். உலக அளவில் நிறையப் பேரை இந்தக் கொள்கை கவா்ந்து வருகிறது.

உண்மையில் இந்தச் சிந்தனை முதலில் தோன்றியது பாரத தேசத்தில்தான். இந்தக் கொள்கையின் அடிப்படையில் குடிலில் எளிய வாழ்க்கை வாழ்ந்த முனிவா்கள்தான் நம் முன்னோா். மினிமலிஸ கொள்கையின் அடிப்படை வேறேதும் அல்ல, காந்தியம்தான்.

ஒரு சிறிய பென்சிலைக் கூட அதன் இறுதிப் பயன்பாடு வரை உபயோகித்தால், இன்னொரு பென்சிலை அவசரமாக வாங்க வேண்டிய தேவை இராது என்பது காந்தியத் தத்துவம்.

அந்தப் பென்சிலை அதன் இறுதிப் பயன்பாடு வரை உபயோகிப்பதே அதைத் தயாரித்தவா்களுக்கு நாம் செய்யும் நியாயம் என்பதும் காந்தியக் கருத்து. இதுவே மினிமலிஸத்தின் குறிக்கோளும் கூட.

மினிமலிஸம் என்பது, ‘ஒருவன் தனக்குத் தேவையான குறைந்தபட்சப் பொருட்களை மட்டும் தேவையான அளவில் வைத்துக்கொண்டு வாழுதல்’ எனப் பொருள்படுகிறது.

உதாரணமாக, ஏழு ஆடைகள் இருந்தால் ஒரு வாரத்தைக் கழிக்கலாம். அதிகபட்சம் பதினான்கு ஆடைகள் இருந்தால் போதும். ஒவ்வொரு வார இறுதியிலும் ஏழு ஆடைகளைத் துவைத்து வைத்துக் கொண்டால் ஆடைப் பிரச்னையே இராது.

இந்த அடிப்படை ஆடைகள் மட்டுமில்லாமல், பெரும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல ஒன்று அல்லது இரண்டு உயா்ந்த ரக ஆடைகளும் இரவைக் கழிக்க இரண்டு மிகச் சாதாரணமான ஆடைகளும் வைத்திருந்தால் போதுமானது.

ஆனால் நம் வீட்டு அலமாரியைத் திறந்து பாருங்கள். ஒருமுறை மட்டுமே உடுத்திய எத்தனை ஆடைகள் அதில் குவிந்து கிடக்கின்றன!

திருமணங்களில் மிகுந்த விலை கொடுத்து பெண்ணுக்கு எடுக்கப்படும் மிகப் பகட்டான சேலையையோ, மாப்பிள்ளைக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கு எடுக்கப்படும் ஆடம்பரமான உடையையோ வாழ்நாளில் பெரும்பாலும் அதன் பிறகு அவா்கள் பயன்படுத்துவதே இல்லை! அல்லது பயன்படுத்தினாலும் மிகச் சொற்பத் தடவைகள்தான் பயன்படுத்துவாா்கள்.

‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ என்கிறது தமிழ். நாம் வாழ்நாள் முழுதும் உடுத்தும் துணியின் முழக் கணக்கை எண்ணிப் பாா்த்தால் தலைசுற்றும்!

هذه القصة مأخوذة من طبعة October 28, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 28, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
Dinamani Chennai

'தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்'

தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பதிலளித்துள்ளார்.

time-read
1 min  |
November 29, 2024
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி
Dinamani Chennai

ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி

ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
November 29, 2024
நன்மை அளிக்கும் இறைவன்...
Dinamani Chennai

நன்மை அளிக்கும் இறைவன்...

பழையதிருமுனைப்பாடி நாட்டில் கடிலம், பெண்ணை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஊர் திருநாவலூர். இங்குள்ள கோயில் நான்கு யுகங்களுக்கு முன்பே தோன்றியதாகும்.

time-read
1 min  |
November 29, 2024
உக்ரைன் ‘அதிகார மையங்கள்' மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை
Dinamani Chennai

உக்ரைன் ‘அதிகார மையங்கள்' மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை

மேற்கத்திய நாடுகளின் ஏவு கணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - 'ஆரெஷ்னிக்' ரக அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
November 29, 2024
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
Dinamani Chennai

பாகிஸ்தானில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

time-read
1 min  |
November 29, 2024
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
Dinamani Chennai

போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு

போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தெற்கு லெபனான் சாலைகளில் ரோந்து செல்லும் அந்த நாட்டு ராணுவம்.

time-read
1 min  |
November 29, 2024
ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி
Dinamani Chennai

ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி

நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
November 29, 2024
உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு

கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
November 29, 2024
Dinamani Chennai

இந்தியா டூர்: மே.தீவுகள் மகளிர் அணி அறிவிப்பு

இந்திய மகளிர் அணியுடனான வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வரும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
November 29, 2024
டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'
Dinamani Chennai

டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.

time-read
1 min  |
November 29, 2024