يحاولGOLD- Free

மகளிர், மாணவர்களுக்கு புதிய திட்டங்கள்

Dinamani Cuddalore|March 15, 2025
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

சென்னை, மார்ச் 14: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர், மாணவர்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக்கட்டணம் குறைப்பு, மாணவர்களுக்கு மீண்டும் கணினி போன்ற திட்டங்களை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.

வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை தாக்கல் செய்து, முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:

மகளிர், மாணவருக்கான திட்டங்கள்: சமூகத்தில் மட்டுமன்றி, அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்வது அவசியம். அந்த வகையில், ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துகளும் பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டால் அத்தகைய ஆவணங்களுக்கு பதிவுக்கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இந்தத் திட்டம் வரும் ஏப். 1 முதல் நடைமுறைக்கு வரும்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் மகளிரை தொழில்முனைவோராக உருவாக்கிடும் பெருந்திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் கீழ், 20 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை வங்கிக்கடன் பெற்று மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்க வழி ஏற்படும். இதற்காக அவர்களுக்கு உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகள் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இந்தத் திட்டத்திற்கான மானிய நிதியுதவியாக ரூ.225 கோடி ஒதுக்கப்படும்.

மீண்டும் கணினி: தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். இந்தத் திட்டத்துக்காக வரும் நிதியாண்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கப்படும்.

هذه القصة مأخوذة من طبعة March 15, 2025 من Dinamani Cuddalore.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة March 15, 2025 من Dinamani Cuddalore.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CUDDALORE مشاهدة الكل
Dinamani Cuddalore

புதுச்சேரியில் 3 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் 3 பேரிடம் இணையவழியில் ரூ.2.57 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

தரமற்ற பொருள்கள்: நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

தரமற்ற பொருள்கள் குறித்து பொதுமக்களுக்கு நுகர்வோர் அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று, புதுவை முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி கேட்டுக் கொண்டார்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா

புதுச்சேரி மூலக்குளத்தில் உள்ள ஈஸ்ட் கோஸ்ட் செவிலியர் கல்லூரியின் 5-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

மியான்மர் நிலநடுக்கம் 2,000-ஐ கடந்த உயிரிழப்பு

மியான்மரில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ கடந்ததாக அந்நாட்டு ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

வக்ஃப் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு தயார்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய தயார் நிலையில் மத்திய அரசு உள்ளதாக மத்திய சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கான முன்னேற்ற அட்டை தயாரிப்பு குறித்த சிறப்பு பயிற்சி இரண்டு நாள்கள் நடைபெற்றது.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

கொள்ளிடக் கரையில் கஞ்சா விற்பனை: இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே கொள்ளிடக் கரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

பார்வையற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே விண்மீன் பார்வையற்றோர் முன்னேற்ற சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

time-read
1 min  |
April 01, 2025
Dinamani Cuddalore

ரூ.67,000-ஐ கடந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

time-read
1 min  |
April 01, 2025

نحن نستخدم ملفات تعريف الارتباط لتقديم خدماتنا وتحسينها. باستخدام موقعنا ، فإنك توافق على ملفات تعريف الارتباط. يتعلم أكثر