குரூப் 2 பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியும், குரூப் ஒன்றில் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியும் நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டின் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினத்துடன் இந்த போட்டிகளின் சூப்பர் 12 சுற்று நிறைவடைந்தது. இதனையடுத்து அரை இறுதிப் போட்டிகளில் மோதக்கூடிய 4 அணிகள் தேர்வாகியுள்ளன. அதன்படி நாளை ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் மதியம் நடைபெறும் முதல் அரை இறுதிப் போட்டியில் குரூப் ஒன்றில் முதல் இடத்தைப் பிடித்த நியூஸிலாந்து அணியும், குரூப் 2வில் இரண்டாவது இடத்தைப் பிடித்த பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. நாளை மறுநாள் அடிலெய்டு மைதானத்தில் மதியம் நடைபெறும் 2வது அரை இறுதிப் போட்டியில் குரூப் 2வில் முதல் இடத்தில் உள்ள இந்தியாவும், குரூப் ஒன்றில் 2வது இடத்தில் உள்ள இங்கிலாந்தும் மோதுகின்றன.
சூப்பர் 12 சுற்று தொடங்கியபோது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழையாது என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அந்த அளவுக்கு பாகிஸ்தானை துரதிர்ஷ்டம் துரத்தியது. ஆனால் நேற்று முன்தினம் நெதர்லாந்துடன் தென் ஆப்பிரிக்க அணி மோதிய ஆட்டத்தின் முடிவால் பாகிஸ்தானின் அரை இறுதி பயணம் பிரகாசமானது. தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் அன்றைய தினத்தில் வங்கதேசத்தை தோற்கடித்தால் நாம் அரை இறுதிக்குள் நுழைந்து விடலாம் என்ற மகிழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்கள் துள்ளி குதித்தனர். அதன்படி வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான அணி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்திடம் தோல்வி அடைந்தபோதே இந்தியாவும் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்த பின்னரே அரை இறுதியில் இந்தியா இங்கிலாந்துடன் மோதுவது உறுதியானது.
هذه القصة مأخوذة من طبعة November 08, 2022 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 08, 2022 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதா? செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் 19-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்!
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மாடம் பாக்கம், அகரம் தென், மதுரப்பாக்கம் ஊராட்சிகளில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
செஞ்சி அருகே கார் மீது பஸ் மோதி வாலிபர் பலி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மகன் ராஜ்குமார் (வயது 31).
கிண்டி சிறப்பு மருத்துவமனையில் பயங்கரம் அரசு மருத்துவருக்கு சரமாரிகத்திக்குத்து!
சென்னை கிண்டி சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டார்.
டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம்: தமிழக அரசு சுற்றறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும்!
விற்பனையாளர்கள் நலச்சங்கம் கோரிக்கையப
நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் 'தளபதி 69' பட நிறுவனம்?
'கோட்' படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது கடைசி படமான 'தளபதி 69' படத்தில் நடித்து வருகிறார்.
தரமற்ற கட்டிடங்களை கட்டி குழந்தைகளின் உயிரோடு விளையாடுவதா?
டி.டி.வி.தினகரன் கண்டனம்!
ரூ.64.53 கோடி செலவில் கட்டப்பட்ட 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம்
மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!!
தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மூலம் போதைப்பொருள் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும்!
ஜி.கே. வாசன் எம்.பி வலியுறுத்தல்!!
தேர்தல் களத்தில் அனல் தெறிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி இன்று புனேயில் பிரசாரம்!
காங்கிரஸ் அணி மீது கடும் சாடல்!!
சிவகார்த்திகேயனுடன் இணையும் நிவின்பாலி!
அமரன் படத்துக்கு கிடைத்து வரும் மிகப்பெரிய வரவேற்பு காரணமாக மிகவும் உற்சாகமடைந்துள்ள சிவகார்த்திகேயன், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.