ஒரே இரவில் தீர்வு?
Tamil Mirror|June 26, 2023
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ், வலைத்தளத்தில் எழுதிவரும் 'உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்' என்ற கேள்வி - பதில் தொடரில், அண்மையில் கேட்கப்பட்டிருந்த, 'ரணில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகண்டுவிவார் போல இருக்கிறதே' என்ற கேள்விக்கு, ‘ஏறச்சொன்னால் கழுதைக்குக் கோபம்; இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்' என்ற நிலையில்த்தான், நமது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பலகாலமாய் நடந்து கொண்டிருக்கின்றன' என்று தனது பதிலில் குறிப்பிட்டு இருந்தமை, கவனத்தை ஈர்ப்பதாக அமைந்திருந்தது
என். கே அஷோக்பரன்
ஒரே இரவில் தீர்வு?

இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, இலங்கை அரசாங்கம், தமிழ்த்தேசம் ஆகிய இருதரப்பினரிடையே ஏற்பட வேண்டுமாயின், இருதரப்பும் சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும். அது நடக்காத வரை, தீர்வு என்பது சாத்தியமில்லை.

ஆனால், இங்குதான் சூட்சுமமானதொரு நுட்பம் இருக்கிறது. இந்தச் சமரசங்களும் விட்டுக்கொடுப்புகளும் ஒரே இரவில் நடந்துவிட வேண்டுமென்ற அவசியம் இல்லை. அப்படி எதிர்பார்ப்பதும் யதார்த்தமானது இல்லை. ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசிய அரசியலின் பிரச்சினை, இங்குதான் தொடங்குகிறது.

தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், தங்களுடைய மக்களாதரவைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, அதீத பகட்டாரவாரப் பேச்சுகளையும் கொள்கை நிலைப்பாடுகளையும் முன்வைக்கிறார்கள். இதன் விளைவாக, தீர்வு காண்பதில் சமரசம் அல்லது விட்டுக்கொடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுகிறது.

ஏனென்றால், இன்று தமிழ்த் தேசிய அரசியல் பேசும், ஒன்றோடொன்று போட்டிபோடும் கட்சிகளும், ஒருவரோடொருவர் போட்டிபோடும் அரசியல்வாதிகளும் உளர். அதி தீவிர தேசியவாதப் பகட்டாரவார நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவேனும் பிசகினாலும் போட்டிக் கட்சி அல்லது போட்டியாளர் 'துரோகி' முத்திரை குத்தி, அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கிவிடுவாரோ என்ற பயத்திலேயே சமரசம், விட்டுக்கொடுப்பு ஆகியன பற்றி பேசக்கூட முடியாத சூழ்நிலையில், சமரசத்தின் பாலான தீர்வை விரும்பும் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் கூட, சிக்கி நிற்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

எந்தப் பிரச்சினைக்குமான அரசியல் தீர்வு என்பது, ஒரே இரவில் ஏற்பட்டுவிடாது. முழுமையான தீர்வு கிடைக்கும் வரை, இருந்த இடத்திலேயே இருப்போம்; முழுமையான தீர்வை நோக்கி ஓர் அடி கூட நகரமாட்டோம் என்பது அடிமுட்டாள்தனமான அரசியல்.

ஆனால், எங்கே அதைச் செய்யாவிட்டால் துரோகி என முத்திரை குத்தி, அரசியல் எதிர்காலத்தை அஸ்தமனமாக்கிவிடுவார்களோ என்ற பயத்தால் அரசியல் யதார்த்தம் புரிந்தவர்கள் கூட அமைதியாக இருக்கிறார்கள்.

هذه القصة مأخوذة من طبعة June 26, 2023 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة June 26, 2023 من Tamil Mirror.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من TAMIL MIRROR مشاهدة الكل
கொம்புடன் கூடிய மண்டை ஓடு ஏலம்
Tamil Mirror

கொம்புடன் கூடிய மண்டை ஓடு ஏலம்

நாகா இனத்தைச் சேர்ந்த 19ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் புதன்கிழமை (09) ஏலம் விடப்பட்டது.

time-read
1 min  |
October 10, 2024
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்
Tamil Mirror

இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்

இலங்கைக்கெதிரான தொடரில் ஏற்பட்ட அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக நியூசிலாந்திலிருந்து கேன் வில்லியம்சன் புறப்படுவது தாமதமாவதன் காரணமாக இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை அவர் தவறவிடவுள்ளார்.

time-read
1 min  |
October 10, 2024
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து
Tamil Mirror

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.

time-read
1 min  |
October 10, 2024
சகலதுறைவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா
Tamil Mirror

சகலதுறைவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
October 10, 2024
பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்
Tamil Mirror

பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்

பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.

time-read
1 min  |
October 10, 2024
பாடசாலையிடம் விளக்கம் கோர தீர்மானம்
Tamil Mirror

பாடசாலையிடம் விளக்கம் கோர தீர்மானம்

தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி உயிர்மாய்த்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட பாடசாலையிடம் விளக்கம் கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

time-read
1 min  |
October 10, 2024
Tamil Mirror

அமெரிக்க அட்மிரல் இலங்கைக்கு விஜயம்

இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பினைப் பலப்படுத்துவதற்காக

time-read
1 min  |
October 10, 2024
பிணை நிபந்தனை உறுதிக்குப்பின் வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை
Tamil Mirror

பிணை நிபந்தனை உறுதிக்குப்பின் வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை

எம்.ஹொசாந்த் பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால், புதன்கிழமை (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 10, 2024
"சலுகைகளை குறைக்கும் எண்ணமே இல்லை”
Tamil Mirror

"சலுகைகளை குறைக்கும் எண்ணமே இல்லை”

\"அரசாங்கத்தினால் முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன்.

time-read
1 min  |
October 10, 2024
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்
Tamil Mirror

மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்

எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
October 10, 2024