அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைத்து பாதுகாப்பு தரப்பு உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
அத்துடன், சட்டம் ஒழுங்கை உறுதிப்படுத்தி நாட்டில் சுதந்திரமான தேர்தலுக்கு ஒத்துழைப்பது ஜனாதிபதி என்ற வகையில் தனதும் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகிய தரப்பினரதும் பொறுப்பு என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஸ்ரீ ஜெயவர்தனபுர விசேட அதிரடிப் படை நடவடிக்கை மையத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் செவ்வாய்க்கிழமை (13) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டில் எந்த வகையிலும் வன்முறைகளுக்கும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்திய ஜனாதிபதி, அது தொடர்பில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொண்டார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட நடவடிக்கை மையத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கெளரவமாக வரவேற்கப்பட்டார்.
இந்த நிகழ்வில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போதைப்பொருள் ஒழிப்புக்காக தற்போதுள்ள அனைத்து பொலிஸ், இராணுவ மற்றும் சிவில் நிறுவனங்கனை ஒன்றிணைத்து போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் தனியொரு நிறுவனமாக உருவாக்கி, அதற்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும்.
பாதாள உலகக் குழுகளுக்கோ அல்லது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கோ நாட்டை அழிக்க இடமளிக்க முடியாது என வலியுறுத்திய ஜனாதிபதி, இலங்கையில் பாதாள உலக செயற்பாடுகளுக்கு எதிராக புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ அனுமதிப்பது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதனைச் சட்டத்தில் உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, "நாட்டு மக்களை சட்டம் ஒழுங்கின் கீழ் வாழ இடமளிப்பது அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதாகும் என்தைக் கூற வேண்டும். அதை சட்டத்தில் சேர்க்கவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
هذه القصة مأخوذة من طبعة August 15, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة August 15, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
நிலநடுக்கத்தின் எதிரொலி: எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தடை
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதித்து, சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
இலங்கைக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து
இலங்கைக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை நியூசிலாந்து கைப்பற்றியது.
மெஸ்ஸி, சுவாரஸுடன் இணையும் நெய்மர்?
ஐக்கிய அமெரிக்க கால்பந்தாட்டக் கழகமான இன்டர் மியாமியில் தனது முன்னாள் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவின் சக வீரர்களான லியனல் மெஸ்ஸி, லூயிஸ் சுவாரஸுடன் மீள இணைவது சுவாரஸ்யத்துக்குரிய விடயமென பிரேஸிலின் முன்களவீரரான நெய்மர் தெரிவித்துள்ளதுடன், சவுதி அரேபியக் கழகமான அல்-ஹிலாலுடனான ஒப்பந்தம் முடிவடைகின்ற நிலையில் ஐக்கிய அமெரிக்காவுக்குச் செல்வதை மறுக்கவில்லை.
சீமெந்து முடைகளை திருடியவர் தப்பியோட்டம்
காத்தான்குடி கடற்கரை பிரதேசத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீமெந்து மூடைகளை திருடிய சந்தேக நபர் தப்பியோடி உள்ள நிலையில், அவரை பொலிஸார் தேடி வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.எம். ஏ.ரஹீம் தெரிவித்துள்ளார்.
குருக்கள் மீது தாக்குதல்
கிளிநொச்சி கனகாம்பிகை குளம் பகுதியைச் சேர்ந்த சிவ ஸ்ரீ சிவகுமாரன் குருக்கள் மீது அங்கிருந்த ஒருவர் கடுமையாகத் தாக்கியதில், படுகாயமடைந்த குருக்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரோகிங்யா முஸ்லிம்களில் 12 பேர் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைப்பு
கடந்த மாதம் இலங்கைக்குள் வந்திருந்த ரோஹிங்யா முஸ்லிம்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப் பட்டிருந்தனர்.
இந்தியா- இலங்கைக்கு இடையில் “பாலம் வேண்டும்”
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைக்கப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கை பல அனுகூலங்களைப் பெறமுடியுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பியுமான பெ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
45 இலட்சம் மெற்றிக் தொன் நெல் விளைச்சல் கிடைக்கும்
இம்முறை 45 இலட்சம் மெற்றிக்தொன் நெல் விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், விவசாயிகளிடமிருந்து 3 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கமத்தொழில் மற்றும் கால்நடை அபிவிருத்தி பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
லசந்த விக்கிரமதுங்கவின் மரணம்: "நீதி நிலைநாட்டப்படும்”
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் தொடர்பில் நீதியை நிலைநாட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
"எதிர்ப்புக்களுக்காக புறக்கணிக்க முடியாது"
எதிர்ப்புக்களுக்காக மக்கள் எமக்கு வழங்கிய ஆணையைப் புறக்கணிக்க முடியாது. ஆகவே, 'கிளீன் ஸ்ரீலங்கா' செயற்திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.