பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற வேதன நிர்ணயசபை பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், தொழில் அமைச்சில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபை இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கூடியது.
பல வாத விவாதங்கள் பல வர்த்தமானிகள் பல வழக்குகள் என நீண்டு கொண்டு சென்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பிலான இழுபறி நிலைமைக்கு முற்றுப்புள்ளி பெறப்பட்டுள்ளது.
அரசாங்கமும் தொழில் அமைச்சும் சம்பள நிர்ணய சபையும் ஒன்றிணைந்து அடிப்படை சம்பளத்தை உறுதி செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு உள்ளது.
அடிப்படை சம்பளம் 1,350 ரூபாய் ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை நிதி சேவைக்கால கொடுப்பனவு என்பன 1,350 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கே வழங்கப்படும். epf/etf 15 சதவீதம் தொழில் தருநர்களினால் வழங்கப்படும் அதனையும் ஒன்று சேர்த்தால் ஒரு நாள் தொழிலுக்குச் செல்லும் பெருந்தோட்ட தொழிலாளர் ஒருவருக்கு 1,552 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் . இன்றிலிருந்து இதனை நடைமுறைப்படுத்த விசேட வர்த்தமானி வெளியிடப்படும் என்றார்.
هذه القصة مأخوذة من طبعة September 11, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة September 11, 2024 من Tamil Mirror.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
26 ஆண்டுகளுக்கு பின்னர் தந்தை கைது
சொந்த மகனை, 26 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்துவிட்டு, தப்பி தலைமறைவான தந்தையை, திருமண பத்திரிக்கை மூலம் ஆந்திர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முடிவுக்கு வருகிறது
போ கொண்டுவருவதற்கான அமெரிக்க முன்மொழிவை இஸ்ரேல், ஹிஸ்புல்லாவும் ஏற்றுக்கொண்டதாக, அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
சமநிலையில் சிற்றி பெய்னூர்ட் போட்டி
பரிஸ் ஸா ஜெர்மனை வென்ற பெயேர்ண் மியூனிச்
வேல் கொடுத்த ரஷ்யர்கள்
பழனி முருகன் கோவிலுக்கு, 6 அடி உயரம் கொண்ட வேலை, ரஷ்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளனர்.
முதலாமிடத்துக்கு முன்னேறிய பும்ரா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு ஜஸ்பிரிட் பும்ரா முன்னேறியுள்ளார்.
இரு அவைகளிலும் அமளி துமளி
கே ள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரத்த விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிச தொடர் அமளியில் ஈடுபட்டன.
அழகு படுத்தும் வேலைத்திட்டம்
கற்பிட்டி வீதி பள்ளிவாசல்துறை பிரதான வீதியின் இரு மருங்கிலும் மரங்கள் நாட்டி அழகு படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வு
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய அனர்த்த நிலைமை தொடர்பில் ஆராய்வதற்கென மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் புதன்கிழமை (27) நடைபெற்றது.
சாரதிகளுக்கு அறிவுறுத்தல்
நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருவதால் அப்பிரதேச வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எம்.பியின் வாகனம் தடாகத்துக்குள் பாய்ந்தது
தேசிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச் செயலாளரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்கவின் கார் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள நீர் தடாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை (26) மாலை விழுந்து விபத்துக்குள்ளானது.