சென்னை,பிப்.23- டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க அலுவலகத்தினுள் அத்துமீறி புகுந்த ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபியினர், ஹிந்துத்துவா வன்முறையாளர்கள் தந்தைபெரியார், காரல் மார்க்ஸ், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தத்துவத் தலைவர்களின் படங்களை சேதப்படுத்தி, மாணவர்கள் மீது கொடுமையான தாக்குதலை நடத்தினர். அத்தாக்கு தலைக் கண்டித்தும் விரைவில் அங்கு தந்தை பெரியார் பற்றிய கருத்துரையை தொடங்க உள்ள தாகவும் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் கூட்டறிக்கை விடுத்துள்ளனர்.
அதன் விவரம் வருமாறு,
டில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (யிழிஹி) பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. (கிஙிக்ஷிறி) அமைப்பானது, 20.2.2023 அன்று தமிழ் மாணவர்களின் மீது குறிவைத்து இனவெறி கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் செய்தியைக் கண்டு தமிழ் நாடே கொந்தளித்து நிற்கிறது. இதனைக் கேள்விப்பட்ட தி.மு.க. தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.
டில்லி காவல்துறை, இந்தக் கொடும் நடவடிக்கைகளுக்கு, கண்களை மூடிக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப் பதைக் கண்டு கல்வியாளர்களும், அரசியல் தலைவர்களும் பொது மக்களும் தொடர்ந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்த கதை யாகப் பொதுவுடைமை கட்சியை சார்ந்த மாணவர்களை முதலில் தாக்கிய, பா.ஜ.க.-வின் ஏ.பி.வி.பி. அமைப்பு, இப்போது தமிழ்நாடு மாணவர்கள் மீது இனவெறி கொண்டு, கொலைவெறி தாக்குதலை நடத்தியிருக்கிறது.
هذه القصة مأخوذة من طبعة February 23, 2023 من Viduthalai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة February 23, 2023 من Viduthalai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!