சென்னை,ஏப்.10- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (10.4.2023) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தனித்தீர்மானம் குறித்த விவரம் வருமாறு,
“தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதைத் தவிர்த்து, சட்டமன்றப் பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உரிய காலத்திற்குள் ஒப்புதல் அளித்திட வேண்டும்” - என தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (10.4.2023) அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு,
இந்த ஆண்டு “ஆளுநர் உரை” கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டு, இன்னும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள், இரண்டாவது முறையாக ஆளுநர் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை. ஆனால், ஆளுநர் அவர்கள், அரசியல் சட்டத்தையும் கடந்து, ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவில் கூட்டாட்சியை உருவாக்கவும், சுயாட்சி கொண்டவையாய் மாநிலங்களை மலர வைக்கவும், திராவிட முன்னேற்றக் கழகம் முன்னணிப் படையாகச் செயல்படும் என்று தலைநகர் டில்லியில் வைத்துப் பேரறிஞர் அண்ணா கூறியதை இம்மாமன்றத்தில் நானும் வழிமொழிகிறேன். இதை உணர வேண்டியவர்கள் உணர வேண்டும்; அதனை உணர்த்துவதற்கான நாளாக இது அமைந்துள்ளது.
அறிஞர் அண்ணா சொன்னார்
“ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை” என்று பேரறிஞர் அண்ணா கூறிய போதிலும், அதை முத்தமிழறிஞர் கலைஞர் வழிமொழிந்த போதிலும், அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை; இந்த அரசும் தவறியதில்லை.
هذه القصة مأخوذة من طبعة April 10, 2023 من Viduthalai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة April 10, 2023 من Viduthalai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!