குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
Kanmani|October 09, 2024
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!

'பாதுகாப்பற்ற உணவுகளால் ஆண்டுதோறும் 60 கோடி மக்கள் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். அதில் 70 சதவீதம் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்' என்பதுதான் அந்த அதிர்ச்சிகரமான தகவல்.

உலக சுகாதார நிறுவன கணக்குபடி, உலகில் 10 பேரில் ஒருவர் அசுத்தமான உணவை சாப்பிடுவதால் நோய்வாய்ப்படுகிறார்கள். இதன் விளைவாக 33 மில்லியன் ஆரோக்கியமான வாழ்க்கை ஆண்டுகள் இழக்கப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1,25,000 பேர் இறக்கிறார்கள். உணவு மூலம் பரவும் நோய்ச் சுமையை குழந்தைகள் 40% சுமக்கிறார்கள்...இப்படியாக விரிகிறது தகவல்.

உணவில் கலப்படம் என்பது இருவகை. ஒன்று, தேவையற்ற வேதிப்பொருட்களை கலப்பது. மற்றொன்று அவற்றை தேவைக்கதிகமாக கலப்பது. உணவில் இருந்து ஏதேனும் பொருட்களைச் அகற்றுவதும் கலப்படமே என்கின்றனர் நிபுணர்கள்.

நாம் அன்றாடம் உண்ணும் உணவில், தேவைக்கேற்ப உப்பு சேர்க்கப்படுவது இயல்பு. உப்பில் உள்ள சோடியம் முக்கியமான ஊட்டச்சத்தும் கூட. அதுவே நொறுக்குத் தீனிகளில் தேவைக்கு அதிகமாக சேர்க்கப்பட்டு உடல் உபத்திரவங்களுக்கு ஆளாக்குகிறது.

ஓட்டல்களில் உணவின் சுவைக்காக சேர்க்கும் அஜினோமோட்டோ போன்றவற்றில் சோடியம் உள்ளது.

சோடியம் உட்கொள்வது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் அறிக்கை, 2025 ஆம் ஆண்டிற்குள் சோடியம் உட்கொள்வதை 30 சதவீதம் குறைக்கவேண்டிய தங்கள் இலக்கில் இருந்து உலக நாடுகள் விலகி செல்கின்றன. அது ஆபத்து என்று எச்சரித்துள்ளது.

கலப்பட உணவுக்கு குழந்தைகள் அதிகம் இலக்காவதற்கு அதன் உணவுப்பழக்கமே காரணம். குழந்தைகளை கவரும் வகையில் நொறுக்குத்தீனி, குளிர்பானம், உடனடி உணவு விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் காட்டப்படுகின்றன.

அவற்றை பார்த்துவிட்டு ஷாப்பிங் செல்லும்போது கவர்ச்சிகரமாக பேக் செய்யப்பட்ட அந்த உணவுப் பண்டங்களை கேட்டு குழந்தைகள் அடம் பிடிக்கின்றனர். அவற்றை வாங்கிக் கொடுத்து செல்லம் பாராட்டி அவற்றின் உடல்நலக்கேட்டுக்கு நாம் காரணமாகி விடுகிறோம்.

குழந்தைகளுக்கான உணவு தயாரிக்கும் நிறுவனங்களும் தங்கள் பொறுப்பை உணர்வதில்லை. வணிக லாபத்துக்காக சேர்க்க வேண்டியதை சேர்க்காமலும், சேர்க்கக் கூடாதவற்றை அதிகம் சேர்த்தும் குழந்தைகள் உடல் நலத்துக்கு உலை வைத்து விடுகின்றன.

هذه القصة مأخوذة من طبعة October 09, 2024 من Kanmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة October 09, 2024 من Kanmani.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من KANMANI مشاهدة الكل
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
Kanmani

குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!

டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.

time-read
3 mins  |
October 09, 2024
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
Kanmani

என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!

தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.

time-read
2 mins  |
October 09, 2024
அருகில் வசிக்கும் தேவதைகள்!
Kanmani

அருகில் வசிக்கும் தேவதைகள்!

அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.

time-read
2 mins  |
October 09, 2024
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
Kanmani

அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!

இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-

time-read
2 mins  |
October 09, 2024
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
Kanmani

அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!

ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

time-read
1 min  |
October 09, 2024
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
Kanmani

நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?

சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.

time-read
3 mins  |
October 09, 2024
காதால் நெருஞ்சி!
Kanmani

காதால் நெருஞ்சி!

அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.

time-read
2 mins  |
October 09, 2024
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
Kanmani

கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.

time-read
2 mins  |
October 09, 2024
என்னோட எல்லை எனக்கு தெரியும்
Kanmani

என்னோட எல்லை எனக்கு தெரியும்

தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.

time-read
2 mins  |
October 09, 2024
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
Kanmani

திருப்பதி லட்டு....உருவான வரலாறு!

திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

time-read
3 mins  |
October 09, 2024