CATEGORIES
Kategorien
எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்குவதில் எந்த மாற்றமில்லை: ரஷியா தகவல்
இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணை தொகுப்புகளை வழங்கும் ஒப்பந்தங்களை நிறைவேற்றும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
ஆம்ஃபோடெரிசின் ஊசி மருந்து ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை
நாட்டில் கோவிட் தொற்று பாதிப்புக்கு அடுத்தபடியாக தற்போது கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு தீவிரமாகியுள்ள நிலையில், அதற்கான சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்ஃபோடெரிசின்-பி ஊசி மருந்தை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவி தயாரிப்பில் எஸ்எம்இ நிறுவனங்கள் ஈடுபட கருத்தரங்கு
ஆக்ஸிஜன் உற்பத்தியில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதற்காக, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவிகள் தயாரிப்பில் ஈடுபடுத்துவதற்கான கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆகஸ்டில் இருந்து தினமும் ஒரு கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி போடமுடியும்: ஐசிஎம்ஆர் தகவல்
ஆகஸ்டுக்குள் தினமும் ஒரு கோடி பேருக்கு கோவிட் தடுப்பூசி போட முடியும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து, இந்திய மருத்து ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா மற்றும் மத்திய சுகாதாரத்துறை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
50 லட்சம் தடுப்பூசிகள் உடனே அனுப்ப வேண்டும் மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
செங்கல்பட்டு ஆலையை திறக்க உடனடி நடவடிக்கை தேவை
ரயில்வேயின் அனைத்து பயிற்சி நிறுவனங்களும் போக்குவரத்து கழகத்தின் கீழ் வர வேண்டும்: கோயல்
கடந்த 7 வருடங்களில் ரயில்வே எடுத்த உயிரி கழிவறைகள், மின்மயமாக்கல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய முன்முயற்சிகள் குறித்து தேசிய ரயில்வே மற்றும் போக்குவரத்து கழகம் ஆராய்ச்சி செய்ய வேண்டும், என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு & பொது விநியோகம் அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.
மாடர்னா தடுப்பூசிகள் குறித்து 4 முக்கிய கோரிக்கைகள் மத்திய அரசிடம் சிப்லா முன்வைத்துள்ளது
அமெரிக்காவின் மாடர்னா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசிக்கு இந்தியாவில் விரைந்து ஒப்புதல் பெறும் விதமாக, மத்திய அரசிடம் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான சிப்லா கோரிக் கைகளை முன்வைத்துள்ளது. இதுகுறித்து வெளிவந்துள்ள தகவலாவது:
ஜூலைக்குள் கோவாக்சின் உற்பத்தி 12 கோடியை எட்டும்: என்.கே. அரோரா தகவல்
கோவிட் தொற்று தடுப்பூசி மருந்துகளில் ஒன்றான கோவாக்சின் உற்பத்தி ஜூலை மாத இறுதிக்குள் 25 கோடியை எட்டும் என்று தேசிய கோவிட் 8 தடுப்பூசி உற்பத்தி குழுவின் ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர் என். கே. அரோரா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
உள்நாட்டிலேயே மருந்து உற்பத்தி ஊக்குவிப்பதற்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மருந்துகள் துறை அறிமுகம்
புது தில்லி, ஜூன் 1 முக்கிய மருந்துகளின் உற்பத்தியில் தற்சார்பு அடையவும் மற்றும் அவற்றுக்கான இறக்குமதிகள் மீது சார்ந்திருப்பதை குறைக்கவும், அவற்றை உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிப்பதற்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை மருந்துகள் துறை அறிமுகப்படுத்தியது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட கோவிட் வகைக்கு டெல்டா என பெயரிட்டது டபிள்யூஹெச்ஓ
ஜெனீவா, ஜூன் 1 உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோவிட் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி 10 மடங்கு உயர்வு: மன்சுக் மான்டவியா
புது தில்லி, மே 31 அவசர மருத்துவ தேவைக்காக 50 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகளை கொள்முதல் செய்து இருப்பில் வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் ஆலை அமைக்க 2 கோடி வரை கடன்: நிதியமைச்சகம் தகவல்
நாட்டில் கோவிட் இரண்டாம் அலை , பல துறைகளில் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால், அவசர கால கடன் உத்திரவாத திட்டத்தை மத்திய அரசு மேலும் விரிவுபடுத்தியுள்ளது.
ஜூன் மாதம் 10 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உற்பத்தி செய்து தர முடியும்: சீரம் தகவல்
புனே, மே 31 கோவிட் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல மாநிலங்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில், ஜூன் மாதத்தில் 10 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் உற்பத்தி செய்து தர முடியும் என்று மத்திய அரசிடம் சீரம் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் மாநிலங்களுக்கு 12 கோடி கோவிட் தடுப்பூசி கிடைக்கும்: மத்திய அரசு தகவல்
கோவிட் தொற்று பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசிகளுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதன்காரணமாகத் தான் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் திட்டம் முழு வீச்சுடன் நிறை வேற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தொடர்வதற்கு பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை தடையாக உள்ளது.
கோவில் பணியாளர்களுக்கு ரூ.4000 உதவித்தொகை: முதல்வர் அறிவிப்பு
கோவிட் நோய் பெருந்தொற்றினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களின் வாழ்வாதாரத்தினைப் பாதுகாக்கும் வகையில் உதவித் தொகை ரூ.4,000/-, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அடுத்த அலையை கணிக்க இயலாது உலக சுகாதார அமைப்பு தகவல்
இந்தியாவில் கோவிட் அடுத்த அலையை கணிக்க இயலாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் கோவிட்-19 தொற்றின் முதல் அலையை விட 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதில் ஒரு நாளைக்கு 4 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் கூட பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது தினசரி கோவிட் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து 1.65 லட்சமாக பதிவாகியுள்ளது.
சர்வதேச விமானப் போக்குவரத்து ஜூன் 30 வரை தடை நீட்டிப்பு
புது தில்லி, மே 29 நாட்டில் கோவிட் தொற்று பரவல் காரணமாக சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஜூன் 30ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி கடற்படை தொடங்கியது
புது தில்லி, மே 29 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் ஆலைகள் பராமரிப்பு குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சியை விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளம் கடந்த 27ம் தேதி தொடங்கியது. இந்திய கடற்படை மற்றும் நிதி ஆயோக் நடத்திய ஆலோசனையின் அடிப்படையில் இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிரிட்டனில் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு அனுமதி
புது தில்லி, மே 29 ஒரே டோஸ் தடுப்பூசியான ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியைச் செலுத்துவதற்கான அனுமதியை பிரிட்டன் வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஜூனில் இருந்து அப்போலோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி கோவிட் தடுப்பூசி செலுத்தப்படும்
ஜூன் மாதத்திலிருந்து நாடு முழுவதும் உள்ள அப்போலோ மருத்துவமனைகளில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தடுப்பூசி மருந்தின் விலை ரூ.995 என்றும், ஊசி செலுத்துவதற்கான கட்டணம் ரூ.200 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி மருந்துகளுக்கு ஐஜிஎஸ்டி விலக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
புது தில்லி, மே 29 சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சிலின் 43-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற்றது. கடந்த ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு இக்கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10.5 சதம் என்ற அளவிலேயே இருக்கும்: ஆர்பிஐ
மும்பை, மே 28 கோவிட் தொற்றுநோயின் இரண்டாவது அலையின் தாக்கத்தால், நாட்டின் வளர்ச்சி குறித்த கணிப்பை திருத்த வேண்டிய நிலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆர்பிஐ-யின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவாக்ஸினுக்கான உள்ளீடு உற்பத்திக்கு ரூ.40 கோடி செலவாகும். ஹெஸ்டர் தகவல்
புது தில்லி, மே 28 கோவேக்ஸின் தடுப்பூசியை தயாரிப்பதற்கான உள்ளீட்டு மருந்துப் பொருள் ஒன்றை உற்பத்தி செய்வதற்காக பாரத் பயோ டெக் நிறுவனம் குஜராத் கோவிட் தடுப்பூசி கூட்டமைப்பு (ஜிசிவிசி) இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கோவிட் தொற்று பாதிப்பு 23 சதம் சரிவு: உலக சுகாதார அமைப்பு தகவல்
ஜெனிவா, மே 28 இந்தியாவில் கோவிட் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 23 சதம் குறைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா அனைவரின் சுகாதாரத்துக்காக எப்போதும் பாடுபடும்: ஹர்ஷ் வர்தன் பேச்சு
புது தில்லி, மே 28 அணிசேரா நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத் தில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கலந்து கொண்டு உரையாற்றினார். இதில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டெட்ராஸ் கலந்து கொண்டார்.
ஆடியோவில் வேகத்தைக் கட்டுப்படுத்தும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் அறிமுகம்
புது தில்லி, மே 28 வாட்ஸ் அப்பில் பிறர் அனுப்பும் ஆடியோ செய்திகளின் வேகத்தை அதிகரித்துப் பயன்படுத்தும் வகையில், புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ரூ.7,000 கோடி நிதி திரட்டுகிறது எச்டிஎஃப்சி
எச்டிஎஃப்சி நிறுவனம் கடன்பத்திரங்களை வெளியிட்டு ரூ.7,000 கோடியை திரட்டவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து எச்டிஎஃப்சி நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:
செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை குத்தகைக்கு வழங்க வேண்டும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்
சிண்டிகேட் வங்கி ஐஎஃப்எஸ்சி கோடுகள் ஜூலை 1 முதல் இயங்காது: கனரா வங்கி
ஜூலை 1 முதல் சிண்டிகேட் ஐஎஃப்எஸ்சி கோடுகள் இயங்காது என செய்திகள் வெளிவந்துள்ளது.
கோவிட் சிகிச்சை நடவடிக்கைகளை பவர்கிரிட், என்டிபிசி நிறுவனங்கள் தொடர்கின்றன
மத்திய மின்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பவர்கிரிட், என்டிபிசி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு கோாவிட் சிகிச்சை , தடுப்பூசி போடும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்கின்றன.