CATEGORIES
Kategorien
அதிகாரம் பற்றிய உண்மையையும் சொல்லல்
எட்வர்ட் ஸெயித் தற்செயலாகத்தான் என் கண்ணில் பட்டார். அவரின் எழுத்துக்களைப் பல்கலைக்கழக உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வழக்கமான வழிகளான கல்விசார் ஏடுகளிலிருந்தோ கருத்தரங்குகளிலிருந்தோ நான் அறியவில்லை.
கொரோனா இரண்டாம் அலையின் முன்னே..
மனிதர்களின் உயிர் தரிப்பு இயற்கையானது அல்ல, அவர்களுடைய தேர்வின் அடிப்படையில் அமைந்தது. கொரோனா தொற்று நோய் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதர்களுக்குக் கற்பிக்கும் பாடம் இது. தொற்றுநோயால் பீடிக்கப்பட்டு நாம் இறந்து போகலாம்; அது இயற்கையானது. அதை மீறி வாழ வேண்டுமானால் நோயை முறியடிப்பதற்கான எல்லா வகையான எச்சரிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அவை நமது தேர்வுக்கு விடப்பட்டிருக்கின்றன. இயற்கையின் பெரும் சதிக்கு எதிராக மக்கள் தனித்துப் போராட முடியாது.
இந்துத்துவ அரசியலின் கருப்பை ஆர்எஸ்எஸ்
சமூக வரலாற்றாசிரியரும் பண்பாட்டு மானுடவியலாளருமான பத்ரி நாராயண் அலகாபாத்திலுள்ள ஜி.பி. பந்த் சமூக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதிவரும் அவரது சமீபத்திய நூல் Republic of Hindutva'
ஆவுடையக்காளை இருட்டடிப்புச் செய்தாரா பாரதி?
நாஞ்சில், ஆவுடையக்கா பேரு கேட்டிருக்கேளா?" என ஒருசாலை மாணாக்கரான வேதசகாயகுமார் கேட்ட கேள்வி, நாஞ்சில் நாடனையும் அவரது எழுத்து வழிப் பலரையும் ஆவுடையக்காளைப் பற்றிச் சிந்திக்கச் செய்திருக்கின்றது.
Mr. K.
கோலம் முழுதும் பசுமை விரிந்து கிடந்தது. சணல் வயல்கள் மஞ்சள். நதிகளைப்போல் இடையிடையே நெளிந்தோடின. வெயிலும் இடைக்கிடை மழையுமென வாழ்வதற்கு இதைவிட வேறென்ன வேண்டுமென நினைக்க வைக்குமளவுக்குக் காலநிலை மனத்துக்கு உவப்பானதாக இருந்தது.
முரண்களை இயைத்தல்
வெ. ஜீவானந்தத்தை 1994இல் அவரது மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னையும் அவருக்குத் தெரியாது.
பாரதியும் ‘பார்க்கப்படாதாரும்'
பாரதியின் எழுத்துகளையும் அவருடைய இறுதிக்கால வாழ்க்கையையும் பா அறிந்தவர்களுக்குப் பாபநாசம் நன்றாகவே நினைவிருக்கும். இலக்கியம் பயின்றவர்களுக்கும் குருகுலம் அறிந்தவர்களுக்கும் வ.வெ.சு. ஐயரின் வாழ்க்கை முடிந்த கதையும் நினைவுக்கு வரும்.
நிழல் போர்
மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றை வாசித்தபின், ஒரு தமிழ் நாவலைச் சில ஒத்திருந்ததைக் கவனிக்க முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால் ஒன்றை இன்னொன்று உரசிப்பார்க்கிற மாதிரி அமைந்திருந்த விதம்தான்.
நாம்தான் மாற வேண்டும்
வண்ணநிலவன்
நாணயங்களை வரலாறு ஆக்கியவர்
சேது மன்னர்கள் மரபில் வந்த பாண்டித்துரைத் தேவர் நான்காம் சேதமிழன்னக்கத் தொடக்க விழாவை மதுரையில் சேதுபதி பள்ளி முன்மண்டபத்தில் மண்டபத்தில் நடத்தியபோது (1901 செப்டம்பர் 14) பேசியவர்களில் சூரியநாராயண சாஸ்திரி என்ற பரிதிமாற் கலைஞரும் ஒருவர் (1870 1903). அவர் தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழி என்ற சொல்லால் வர்ணித்தார். தமிழைச் செம்மொழி என முதலில் கூறியவர் அவர்.
திராட்சை மணம் கொண்ட பூனை
'களிங்' எனும் ஒலியுடன் இருட்டு இழைந்திருந்த தரையில் வழுக்கியபடிச் சாவிக்கொத்து கட்டில் காலருகே வந்து நின்றது. சுற்றிலும் அடர்ந்திருந்த இருளில் இன்னமும் வெக்கை அலைய, கண்ணைத் திறவாமலே சாவிக்கொத்தின் மினுமினுப்பை அவள் உணர்ந்தாள்.
தடையை மீறிய சாதனை
பெருந்தொற்று காரணமாகப் பொது முடக்கம் அமலுக்கு வந்து ஓராண்டு முடியப்போகிறது. இதன் பாதிப்பு பலகோணங்களில் நம்மைச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. பல முக்கியமான முடிவுகளை எடுக்கவைத்திருக்கிறது.
ஆட்சி அதிகாரப் போட்டி
அரசியலமை அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப் பட்டப் பிரதிநிதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாகிவிட்டன. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும் கூட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தபாடில்லை. ஆனாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது.
இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்!
"ஏன் சார்..... என் வாயைக் கிளறுகிறீர்கள்? பல நாடுகளுக்குப் போயிருந்தாலும் தமிழகத்தில் உள்ள மாதிரி தேர்தலில் மோசமான நிலையை நான் வேறு எங்கும் பார்க்கவில்லை.
இதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்
டாக்டர் வெ. ஜீவானந்தம் கடந்த 2.3.2021 கேட்டவுடன் இனம் புரியாத வெறுமை ஆட்கொண்டது. ஏதோ ஒருவகையில் அவர் நம்பிக்கை ஊட்டும் சக நண்பராய் நம்மோடு பயணித்தவர். அவரின் பல நண்பர்களும் அந்த வெறுமையை உணர்ந்துள்ளனர்.
சில பரிந்துரைகள்
கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் அனுமதி பெற்றுக் சென்ற மாதம் நடந்தேறிய சென்னை புத்தகக்காட்சி பலவிதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருபக்கம் முழுமையான வெற்றி, மற்றொரு பக்கம் தோல்வி என்று இருசாரார்கள் பேசி வந்தார்கள்.
எதிர்பார்ப்பைக் கடந்து...
உலககெங்கிலும் உள்ள பதிப்பாளர்களின் மெக்கா' என்று பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையைக் கூறுவதுண்டு. தமிழகப் பதிப்பாளர்களின் மெக்கா என்றால் அது சென்னை புத்தகக் கண்காட்சிதான்.
இங்கு இருப்பதே கலை
2012ஆம் ஆண்டிலிருந்து தமிழ் அச்சு/பதிப்புச் சூழலில் நூல் முகப்பு, கோட்டோவியங்களை உருவாக்கிவருகிறேன்.
இதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்
நாணயவியல் அறிஞர், நாளிதழ் ஆசிரியர், கணினியில் பயன்படுத்த ஏற்ற தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர் எனப் பன்முகம் கொண்டவர் இரா. கிருஷ்ணமூர்த்தி. நாகர்கோவில், வடிவீஸ்வரம் கிராமத்தில் 1933இல் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள லண்டன் ராயல் நாணயவியல் ஆய்வுக் கழகக் கவுரவ உறுப்பினர், தொல்காப்பியர் விருது போன்ற பல கவுரவங்களைப் பெற்றார். மார்ச் 4, 2021ல் மறைந்தார்.
அரசதிகாரத்தின் அங்கமாகும் எதிர்ப்பரசியல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கூட்டணி முடிவாகி ஏறக்குறைய ஐந்து பிரதான அணிகள் களத்தில் நிற்கின்றன.
அறிவியல் தமிழறிஞர்
1980களில், தமிழ்ப் பல்கலைக்கழக வரவு, தஞ்சை வட்டாரத்தின் கல்வியுலகில் குறிப்பாகத் தமிழியற் கல்வியுலகில் சிறிய அளவிலாவது மேல்நோக்கியதொரு அசைவியக்கத்தைத் தொடங்கிவைத்தது. இந்த அசைவியக்கத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் நிகழ்ந்த கல்விசார் பணிகளை விடவும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் பலர் சமூகத்தோடு கொண்ட தொடர்பே முதற்காரணம். அப்படி தஞ்சைக்குக் கிடைத்த அறிஞர்களுள் ஒருவர், நாங்கள் ஆர் எம் எஸ் என்று அன்போடு அழைக்கும் பேராசிரியர் இராம.சுந்தரம்.
'இப்ப சரியாயிருச்சா?'
பொருநைப் பக்கங்கள்
முதல் மரியாதை
இரண்டாவது திருமணத்தைக் குறைத்து மதிப்பிடுவதன் புதிரை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
மறுக்கமுடியாத வரலாறு
சூழ்நிலைகளும் சேம்பவங்களும் மனிதர்களுடைய வாழ்க்கைப் போக்கை வடிமைப்பதில் பங்களிக்கின்றன என்பதற்கு டொமினிக் ஜீவா (மல்லிகை ஜீவா) வும் உதாரணம். எழுத்தாளராகவும் இலக்கிய இதழாளராகவும் ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் செயல்பட்டு 2021 ஜனவரியில் மறைந்த ஜீவா, பலவற்றுக்கும் முன்னுதாரணங்கள் உள்ளவர்.
மகத்தான பெண்களின் மகத்தான அடுக்களைகள்
மலையாளமொழித் திரைப்படங்கள் சிலவற்றுக்குத் தமிழ்த் திரைப்படத்தைப் போன்ற அங்கீகாரம் இங்கு கிடைக்கும். இந்த வரிசையில் சமீபத்தில் இணைந்துள்ள படம், 'தி கிரேட் இண்டியன் கிச்சன்'. ஆவண-புனைவுப் படமாக (Docu-fiction) வெளிப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜியோ பேபி இயக்கியுள்ளார்.
நேரெதிர்
அன்று ஒரு தாலுக்காத் தலைமையகத்துக்குச் செல்ல என்று ஒரு தாலுக்காத் தலைமையகத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஒன்றரை மணிநேரப் பயணம்.
தோல்ஸ்தோய் பற்றி மக்சீம் கோர்க்கி
தோல்ஸ்தோயின் உடல்நிலை மிக மோசமடைந்து பின்னர் அதிலிருந்து அவர் மீண்ட கால கட்டத்தில் சில துண்டுக் குறிப்புகள் கோர்க்கியால் எழுதப்பட்டன.
தடுப்பூசி குத்தப்போனேன்
ஒரு கால கட்டத்தில் என்னுடைய பின்புலத்தவர்களைச் சந்திக்கும்போது அவர்களின் பண்பாட்டுத் திறன் ரிக்டர் அளவில் எந்த நிலையிலிருக்கிறது என்பதை எடைபோடக் கேட்கும் கெட்டித்தனமான கேள்வி, "நீங்கள் இப்போது என்ன புத்தகங்கள் வாசிக்கிறீர்கள்?” என்பது.
துலங்கும் கீர்த்தனைகள்
உவே.சாமிநாதையர் எழுதி முதலில் அச்சில் வெளியானது ஓர் இசை நூல். 'யாழ்ப்பாணம் கொழும்புத் துறை இலந்தை நகர் ஸ்ரீதண்டபாணி விருத்தம், ஸ்ரீமுத்துக்குமாரர் ஊசல் முதலியன ' என்னும் தலைப்பிலானது அது.
காலச்சுவடும் எனது மொழிபெயர்ப்புகளும்
ஒவ்லொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வகை நூல்களை வாசிக்கும் வழக்கப்படி, மொழிபெயர்ப்பு இலக்கியங்களின் காலகட்டம் அது. தொடங்கிவைத்தவர் சார்லஸ் டிக்கின்ஸ்.