எப்போது முடியும் ரஷ்யா - உக்ரைன் போர்..?
Kungumam|25-11-2022
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பத்திரிகையாளர் ஒருவர் இப்படி ஒரு கேள்வி கேட்கிறார். “உக்ரைன் போர் எப்படி முடிவுக்கு வரும் என்று நினைக்கிறீர்கள்?” அதற்கு அதிபர் ஜெலன்ஸ்கி அளித்த பதில் இந்த ஒட்டு மொத்த பிரச்னையையும் எளிய ஒரு வரியில் அடிக்கோடிடுவதாக இருந்தது. “எனக்குத் தெரியாது. போரை நாங்கள் ஆரம்பிக்காதபோது அது எப்படி முடியும் என்று நாங்கள் எப்படி யூகிக்கமுடியும்?”
எப்போது முடியும் ரஷ்யா - உக்ரைன் போர்..?

இந்தப் போர் பிப்ரவரி மாதம் ஆரம்பித்தபோது யாருமே அது இவ்வளவு காலம் நீடிக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக ரஷ்யா.வல்லரசுகளில் ஒன்றான ரஷ்யா ஒரு சிறிய நாட்டை, அதுவும் ஒரு காமெடி நடிகரை புதிய அதிபராகக் கொண்ட நாட்டை, எளிதாகத் தனது படைபலத்தைக் காட்டி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துவிடலாம் என்று கனவு கண்டது.

யாருமே எதிர்பாராத வகையில், ஏன் அவரே கூட எதிர்பாராத வகையில் ரஷ்யாவை எதிர்த்து ஜெலன்ஸ்கி இது வரை கடந்த பத்து மாதங்கள் தாக்குப்பிடித்திருக்கிறார். தாக்குப்பிடித்ததோடு அல்லாமல் மேற்கு உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்த சில பகுதிகளில் இருந்து அவர்களை விரட்டவும் முடிந்திருக்கிறது.
 
 
போர் ஆரம்பித்தபோது ரஷ்யா நான்கு முனைகளில் இருந்தும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. முக்கியமாக வடக்கில்  இருந்து உக்ரைன் தலைநகரான கீவைத் தாக்கி கைப்பற்ற நினைத்தது. தலைநகரைக் கைப்பற்றினால், ஒரு தேசத்தின் அதிகார பீடத்தை அசைத்து விடலாம்; உக்ரைன் அடிபணிந்துவிடும் என்று கணக்கிட்டது. ஆனால், உக்ரைன் மிகத்தீவிரமாக போரிட்டு தனது தலைநகரைக் காத்துக்கொண்டது.  
 
இந்த திருப்புமுனைக்கு பெரும் உறுதுணையாக இருந்தது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உட்பட்ட நேட்டோ (NATO) நாடுகள், உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவியும், பயிற்சிகளும்.

அந்த வகையில் இது ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையே நடக்கும் ஒரு மறைமுகப் போர் (Proxy War) என்றால் அது மிகையில்லை.

இந்த போர் உருவாக்கிய அச்சத்தினால், முன்பு எந்த பக்கமும் சாராமல் நடுநிலையாக இருந்த பின்லாந்தும் ஸ்வீடனும் கூட இப்போது நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டுகின்றன. அந்த நாட்டு மக்களிடையே அதற்கு பெரும் ஆதரவு உருவாகியுள்ளது. உக்ரைனுக்கு நிகழ்ந்தது போல தங்களுக்கும் நிகழலாம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

புதிய நாடுகள் சேர்வதை இப்போது இருக்கும் அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது இந்த  ஒப்புதல் வழங்கும் பட்டியலில் துருக்கியும், ஹங்கேரியும் மட்டுமே பாக்கி.
உக்ரைன் நேட்டோவில் சேரக்கூடாது என்ற காரணத்தைச் சொல்லி ஆரம்பிக்கப்பட்ட போர் மேலும் இரண்டு நாடுகளை நேட்டோவில் இணைவதை  நோக்கித் தள்ளியிருக்கிறது.

Diese Geschichte stammt aus der 25-11-2022-Ausgabe von Kungumam.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der 25-11-2022-Ausgabe von Kungumam.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS KUNGUMAMAlle anzeigen
ஹியூமன் வாஷிங் மெஷின்
Kungumam

ஹியூமன் வாஷிங் மெஷின்

மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.

time-read
1 min  |
20-12-2024
வீட்டை உடைக்கும் இளைஞர்!
Kungumam

வீட்டை உடைக்கும் இளைஞர்!

‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

time-read
1 min  |
20-12-2024
ஏஐ டாய்லெட் கேமரா!
Kungumam

ஏஐ டாய்லெட் கேமரா!

இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.

time-read
1 min  |
20-12-2024
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
Kungumam

விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.

time-read
1 min  |
20-12-2024
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
Kungumam

நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!

பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான  பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.

time-read
2 Minuten  |
20-12-2024
Kungumam

உலகின் முதல் செயற்கை கண்

பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.

time-read
1 min  |
20-12-2024
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
Kungumam

பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்

இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.

time-read
1 min  |
20-12-2024
உங்க விஜய் to வடிலெக்ஸா...
Kungumam

உங்க விஜய் to வடிலெக்ஸா...

‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’

time-read
2 Minuten  |
20-12-2024
வருகிறார் முஃபாசா
Kungumam

வருகிறார் முஃபாசா

உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.

time-read
2 Minuten  |
20-12-2024
சைபர் மோசடி...Data s மோசடி!
Kungumam

சைபர் மோசடி...Data s மோசடி!

2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

time-read
2 Minuten  |
20-12-2024