AR மற்றும் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எங்கேயோ சென்றுகொண்டிருக்கிறது. எனில் ஃபேஷன் உலகை மட்டும் விட்டு வைக்குமா என்ன?!ஃபேஷன் சில்லறை வியாபாரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் முறைதான் பெரும்பான்மையான நுகர்வோரை, குறிப்பாக இளைஞர்களை தன்னகத்தே வைத்திருக்கிறது. என்னதான் ஆன்லைனில் உள்ள மாடல்கள் , நடிகர்கள் என அவர்கள் அணிந்திருப்பதைப் பார்த்து வாங்கினாலும் துணிகளை நமக்கு நாமே அணிந்து பார்க்கும் பொழுதுதானே 100% திருப்தியை அடைய முடியும்?
இதனால்தான் இன்றும் கூட எந்த விழாக்காலம் என்றாலும் ஜவுளிக் கடைகள், நகைகள், காலணிகள் உள்ளிட்ட கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதற்குத்தான் தற்போது பல ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஏஆர். (AR - Augmented Reality) மற்றும் ஏஐ (AI - Artificial Intelligence) தொழில்நுட்பங்களில் இயங்கும் டிரையல் ரூம்களில் அதிகம் முதலீடு செய்து வருகிறார்கள்.
ஆம். இனி உங்கள் கைகளில் இருக்கும் மொபைல் அல்லது டேப் அல்லது கணினி அப்படியே கடையில் இருக்கும் டிரையல் ரூம்கள் போல் மாறிவிடும் தொழில்நுட்பம் விரைவில் களமிறங்கவிருக்கிறது. அமேசான், அலிபாபா, நைக், கெரிங் உள்ளிட்ட பல ஆன்லைன் போர்ட்டல்கள் இந்த விர்ச்சுவல் அதாவது மெய்நிகர் டிரையல் ரூம்கள் செயலி மற்றும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து வருகிறார்கள்.
2022ம் ஆண்டின் கணக்கீட்டின்படி 4.03 பில்லியன் டாலர்கள் இந்த மெய்நிகர் டிரையல் ரூம்களில் முதலீடுகள் நடந்துள்ளன. இந்த கணக்கீடு 2029ல் 14.87 பில்லியன் டாலர்களைத் தொடலாம் என்கிறது ஏஆர் மார்க்கெட் புள்ளிவிபரம்.
ஏஆர் - ஆக்மென்டட் ரியாலிட்டி ட்ரையல் அறைகள் :
ஏஆர் தொழில்நுட்பம் விளையாட்டு உலகில் ஏற்கனவே தனக்கென தனி இடம் பிடித்துவிட்டது. கிட்டத்தட்ட ஒரு கேம் உலகில் நாமே இறங்கி விளையாடும் அனுபவத்தைத்தான் தற்போது விஆர் பாக்ஸ், பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் உள்ளிட்ட விளையாட்டுக் கருவிகள் கொடுத்து வருகின்றன.
இதனை பல கண்காட்சிகள், மால்கள், ஏன் வீடுகளில் வாங்கி விளையாடும் பிளே ஸ்டேஷன்கள் உட்பட பலவற்றில் பார்க்கலாம். இதன் முறையைப் பயன்படுத்தித்தான் மெய்நிகர் டிரையல் ரூம்கள் விரைவில் வரவிருக்கின்றன.
Diese Geschichte stammt aus der 09-02-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 09-02-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
பிடிக்காத பெண்ணை லவ் பண்ணுகிறார் ஹீரோ!
புது மாப்பிள்ளை சித்தார்த் கல்யாணப் பரிசாக வெளிவரவுள்ளது 'மிஸ் யூ'.
கிரிக்கெட் ஆட லஞ்சம் கேட்டார்கள்!
இன்றைய தினம் இந்திய 'அணியின் மிக முக்கிய ஆட்டக்காரராக விராட் கோலி இருக்கிறார்.
சர்க்கரை நோயின் தலைநகரமா இந்தியா?
உலகளவில் 82 கோடி 'சொச்சம் சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள்.
நீங்கள் வயதானவரா...தடுக்கிவிழ வாய்ப்புள்ளதா...இந்தப் பரிசோதனையை செய்து பாருங்கள்!
எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜனின் மறைவு உணர்த்தும் பாடம்
3238 மனிதர்கள் பலி...3.2 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் நாசம்...2 லட்சத்து 35 ஆயிரத்து 862 வீடுகள் தரைமட்டம்...9457 கால்நடைகள் இறப்பு...சம்பவம் செய்த தீவிர வானிலை!
274 நாட்களில் 255 நாட்கள் தீவிரமான வானிலை. இந்தத் - தீவிரமான வானிலையால் 3238 பேர் இறந்திருக்கிறார்கள்.
3 வயது சதுரங்க ஜாம்பவான்!
இந்தியச் சதுரங்கத்தின் பொற்காலம் இது என்று அடித்துச் சொல்லலாம்.
அதிபராகிறார் டிரம்ப்...கருத்தடை மாத்திரைகள் + ஹார்மோன் ஊசிகள் பதுக்கப்படுகின்றன!
அமெரிக்க தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கையில் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார் டிரம்ப்.
ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் உறவினர் நான்!
க /பெ.ரணசிங்கம்' 'மூலம் அறிமுக மானவர் பவானிஸ்ரீ. ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ் என பலமான சினிமா பேக்ரவுண்ட் உள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் பவனி வரும்படி பேர் வாங்கிக் கொடுத்த படம் வெற்றி மாறனின் 'விடுதலை'.
டாப் 10 - பணக்கார பாடகர்கள்!
திரையுலகம் எந்த அளவுக்கு வளர்கிறதோ, அதே வேகத்தில் திரை யுலகக் கலைஞர்களின் சம்பளமும் வளர்ந்து வருகிறது.
சுற்றுலாப் பயணிகளுக்காக இந்தோனேஷியாவில் அதிகரிக்கும் Contract Marriage!
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்வார்கள். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல மற்ற நாடுகளின் கலாசாரத்திலும் அப்படித்தான்.