மோட்டார் சைக்கிள்கள் மீது காதல் கொண்ட ஒவ்வொருவரும் தன்வசமாக்க நினைக்கும் பிராண்ட் இது.
ஸ்டைல், வேகம், தரம், தோற்றம் என எல்லாவற்றிலும் தனித்துவமான மோட்டார் சைக்கிள் இது. துபாய் சாலைகளில் அரிதாகத்தான் மோட்டார் சைக்கிள்களைப் பார்க்க முடியும். அந்த மோட்டார் சைக்கிள்கள் ‘ஹார்லி - டேவிட்சன்’ ஆகத்தான் இருக்கும் என்பது இதன் சிறப்பு.
ஹார்லி - டேவிட்சன் என்ற நண்பர்களால் உருவானது இந்த பிராண்ட்.இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஒரு குடும்பத்தில், 1880ம் வருடம் பிறந்தார், வில்லியம் ஹார்லி. இவரது தந்தை ரயில்வே துறையில் எஞ்சினியராகப் பணியாற்றி வந்தார்.
ஹார்லியின் குடும்பம் மில்வாக்கி நகரின் வடக்குப்புறத்தில் உள்ள பர்லே அவென்யூவில் வசிக்க ஆரம்பித்தது. அங்கிருந்த சைக்கிள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார் ஹார்லி. அப்போது அவரது வயது 15.
இயற்கையாகவே அவருக்கிருந்த மெக்கானிக்கல் அறிவும், சைக்கிள் நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவமும் இரு சக்கர வாகனங்களின் மீது தீராத ஆர்வத்தை அவருக்கு உண்டாக்கியது. சைக்கிளில் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உத்வேகத்திலேயே இருந்தார்.
தனது இருபதாவது வயதில், அதாவது 1901ம் வருடம் ஒரு எஞ்சின் மாடலை ஓவியமாகத் தீட்டினார் ஹார்லி. அந்த எஞ்சினை சைக்கிளுக்குப் பொருத்திப் பார்த்தார். ஆனால், ஹார்லி நினைத்துப் பார்த்த அளவுக்கு சைக்கிள் இயங்கவில்லை. வழக்கம்போல பெடலை மிதிக்க வேண்டியிருந்தது.
சாதாரண சைக்கிளுக்கு எஞ்சின் பயன்படாது; பலமான சைக்கிளை உருவாக்கினால்தான் எஞ்சினுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று ஹார்லி கண்டறிந்தார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் எஞ்சின் திட்டங்களைக் குறித்து குழந்தைப்பருவ நண்பரான ஆர்தர் டேவிட்சனிடம் பகிர்ந்தார் ஹார்லி.
டேவிட்சன் வீட்டின் கொல்லைப்புறத்தில், 10 அடி அகலமும், 15 அடி நீளமும் கொண்ட ஒரு மரக்கொட்டகையை அமைத்து ஹார்லியும், டேவிட்சனும் எஞ்சினுக்குத் தகுந்த மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் வேலையில் இறங்கினார்கள்.
இந்தக் கொட்டகையிலிருந்து மாபெரும் மோட்டார் சைக்கிள் நிறுவனமான ‘ஹார்லி- டேவிட்சனி’ன் பயணம் தொடங்குகிறது.
Diese Geschichte stammt aus der 28-06-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 28-06-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ஹியூமன் வாஷிங் மெஷின்
மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக கையால்தான் துணிகளைத் துவைத்து வந்தனர்.
வீட்டை உடைக்கும் இளைஞர்!
‘‘யாரோ திருடர்கள் தங்களின் வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்துவிட்டனர்; ஆனால், எந்தப் பொருளும் திருட்டுப் போகவில்லை...’’ என்று ஜப்பானின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேலானவர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
ஏஐ டாய்லெட் கேமரா!
இந்தத் தலைப்பு உங்களை முகம் சுளிக்க வைக்கலாம்.
விவசாயம் செய்ய பரோலில் வந்த கொலைக் 'குற்றவாளி!
சமீபத்தில் வெளியான செய்தி ஒன்று, இந்திய நீதித்துறையை மட்டுமல்லாமல், பொது மக்களையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
நெல்ல பெயரை வாங்க வேண்டும் சாந்தினியே!
பதினான்கு வருடங்கள் பயணம், டெம்ப்ளேட் கேரக்டர்களில் சிக்காமல் வித்யாசமான கதாபாத்திரங்கள்... என தனது கரியரை நல்ல நடிகைக்கான பயணமாக கொண்டு சென்று கொண்டிருக்கிறார் சாந்தினி தமிழரசன்.
உலகின் முதல் செயற்கை கண்
பொதுவாக உலகில் அனைத்து பிரச்னைகளுக்குமே தீர்வு என்பது உண்டு. அதுவும் தொழில்நுட்பம் உச்சபட்சமாக முன்னேறியிருக்கும் இந்தக் காலத்தில் பல சிக்கல்களுக்கும் தீர்வுகள் எளிதாகவே கண்டறியப்படுகின்றன.
பி.வி.சிந்துவுக்கு டும்டும்டும்
இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்துவின் திருமணம் வரும் டிசம்பர் 20ம் தேதி உதய்ப்பூரில் நடைபெறுகிறது.
உங்க விஜய் to வடிலெக்ஸா...
‘‘அலெக்ஸா... நான் த்ரிஷா மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் செய்துக்க போறேன்..!’’
வருகிறார் முஃபாசா
உலகின் தலைசிறந்த பத்து அனிமேஷன் திரைப்படங்களில் ஒன்று, ‘த லயன் கிங்’.
சைபர் மோசடி...Data s மோசடி!
2024ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் இந்தியா ரூ.11,333 கோடி அளவுக்கு சைபர் மோசடி இழப்பை சந்தித்துள்ளதாக உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.