இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய ஒரு நிகழ்விலும் இந்த வேண்டுகோளை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
"இந்த நாட்டில் நாம் கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கை - வேலை சமநிலையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் 70 மணி நேரம் வேலை என்ற எனது பார்வையை நான் கடைசிவரை மாற்றப் போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு உடனடியாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிலடி தந்தனர்.
'மன்னிக்கவும், எங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. வீட்டிலும் பணிபுரிய வேண்டும்; அலுவலகத்திலும் வேலை செய்ய வேண்டும். நீங்கள் வீட்டிலும் அப்படியல்ல. அலுவலகத்திலும் உங்களுக்காக, உங்கள் தேவைக்காக பலரும் உழைக்கிறார்கள். சமையல், டீ, இஸ்திரி போடுவது என சகலத்துக்கும் ஆட்களை வைத்திருக்கிறீர்கள்.
நாங்கள் அப்படியல்ல. வீட்டில் பால் வாங்குவது முதல் அலுவலகத்தில் எழுந்து சென்று டீ குடிப்பது வரை எங்களுக்கானதை நாங்கள்தான் செய்ய வேண்டும்.
கணவன், மனைவி இருவரும் பணிபுரிபவர் என்றால் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். டிராஃபிக்கில் ஊர்ந்து ஊர்ந்து வேலைக்கு வர வேண்டும். பணிக்கு செல்லும் பெண்கள் அதிகாலையில் எழுந்து சமைப்பது முதல் சகல பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஒரேயொரு வேண்டுகோள். ஒரு லேத் பட்டறையில், கம்பெனியில் நீங்கள் தினமும் 12 மணிநேரம் உழைத்துக் காட்டுங்களேன்... 'என்கிறார் ஒருவர்.
இன்னொருவரோ, 'நாம் வாரத்தில் 7 நாட்கள் வேலை செய்தால் முதலாளி மகிழ்ச்சியாக இருப்பார். சம்பளம்தானே தருகிறீர்கள். ஊழியர்களுக்கு லாபத்தில் பங்குகொடுக்கிறீர்கள்? தங்கள் சுயநலத்திற்காக சமுதாயத்தை வேலைக்கு அடிமையாக்கும் இதுபோன்ற ஆட்களிடம் ஜாக்கிரதை...' எனத் தெரிவித்துள்ளார். இப்படி நிறைய கமென்ட்கள் உள்ளன.
இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜனிடம் பேசினோம். "இது அப்பட்டமான லாப நோக்கம் உள்ள ஒரு வாதம்..." எனக் கடுமையாகக் கண்டித்தவர், தொடர்ந்தார்.
"வேலை நேரம் என்ற வரையறை ஒரு காலத்தில் கிடையாது. பெரிய தொழிற்சாலைகள், தொழிலாளிகள் என்ற முறை இருந்தபோது வேலை நேரத்திற்கு ஒரு வரையறையே இல்லை.
Diese Geschichte stammt aus der 6-12-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der 6-12-2024-Ausgabe von Kungumam.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
குடிப்பழக்கமும் மோதிர விரலும்!
உண்மையில் இப்படி யெல்லாம் ஆய்வு செய்திருப்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.
விவாகரத்து அதிகரிச்சிருக்கு...ஆனா, சமூக கட்டமைப்பு அப்படியேதான் இருக்கு!
சமீபத்தில் நடிகர்கள், இசையமைப்பாளர் நாடறிந்த பிரபலங்களின் விவாகரத்து செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தடை! வழி காட்டுகிறதா ஆஸ்திரேலியா.. ?
கடந்த வாரம் ஆஸ்திரேலியா அரசு 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் பொருட்டு ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது.
சூது கவ்வும்க்கு முன்னாடி ஆரம்பிச்சு - சூது கவ்வும்க்கு பிறகு தொடரும் இந்தப் படம்!
கோலிவுட்டில் இது பார்ட்டுடூ சீசன். அந்த வகையில் விஜய்சேதுபதி வெளியாகி வெற்றியடைந்த ‘சூதுகவ்வும்”.
தாராவி மறுசீரமைப்புத் திட்டம்...ஆதாயத்தில் அதானி குழுமம்... கலக்கத்தில் மக்கள்...
சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான 'மகாயுதி' கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.
உலகின் மிகப்பெரிய பவளப்பாறை!
இது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு :
தாத்தா நடிகர், அப்பா ஸ்டண்ட் மேன், அம்மா நடிகை...நான் ட்ரீம் கேர்ள்!
'பொண்ணுங்களோட கற்பனையா மட்டும் தான்டா நிம்மதியா வாழ முடியும். கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது!' 'சூப்பர் மாமா...'
விடுதான் பெண்களுக்கு பெரிய ஆபத்து!
'சராசரியாக உலகளவில் இந்த சுமார் 140 பெண்கள் தினமும் படுகொலை செய்யப்படுகிறார்கள்.
8 வயது உலக சாம்பியன்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு 'நவம்பர் மாதத்தின் மதிய வேளை. ஹைதராபாத்தில் உள்ள ஓர் அமைதியான, விசாலமான ஹால். அங்கே சதுரங்கப் போட்டி ஆரம்பமானது.ஒரு பக்கம் இந்தியாவின் முன்னணி சதுரங்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குகேஷ் அமர்ந்திருந்தார்.
ஹெல்மெட் நிச்சயதார்த்தம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம் ஜோடி ஒன்று தங்களுடைய நிச்சயதார்த்த விழாவில் மோதிரத்துடன் ஹெல்மெட்டையும் மாற்றி சாலைப் பாதுக்காப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.