CATEGORIES
Kategorien
Zeitung

காயிதே மில்லத் விருதுக்கு மூவர் தேர்வு
அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் சிறப்பான பணிக்காக மூவருக்கு காயிதே மில்லத் விருதை காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை அறிவித்துள்ளது.

கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் இன்றும் நாளையும் ரத்து
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (மார்ச் 6, 7) முழுவதும் ரத்து செய்யப்படவுள்ளது.
கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்
டென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்தார்.

தந்தையை கொலை செய்த மகனை போலீஸாரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
சென்னையில் தந்தையை கொலை செய்துவிட்டு தப்பித்துச் சென்ற மகனை ஆட்டோ ஓட்டுநர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

திருவொற்றியூர் கோயில் மாசிப் பெருவிழா தொடக்கம்
திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் உடனுறை ஸ்ரீ தியாகராஜ சுவாமி பிரம்மோற்சவ மாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஓய்வு பெறுகிறார் டேபிள் டென்னிஸ் ஜாம்பவான் சரத் கமல்
சென்னையில் நடைபெறவுள்ள டபிள்யுடிடி உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறவுள்ள தாக புதன்கிழமை ஜாம்பவான் சரத் கமல் தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பல்கலை. பாடத்திட்ட குழுவை மாற்ற நடவடிக்கை
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்ட ஆய்வுக் குழுவை (போர்ட் ஆஃப் ஸ்டடீஸ்) மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோயில் திருவிழாவில் சினிமா பாடல்களுக்கு அனுமதியில்லை
கோயில் திருவிழாக்களில் பக்தி பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும்; சினிமா பாடல்களை பாட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தில்லியில் ரைசினா மாநாடு: உக்ரைன் வெளியுறவு அமைச்சர் பங்கேற்கிறார்
தில்லியில் நடைபெறும் ரைசினா மாநாட்டில், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் அந்த்ரி சிபிஹா கலந்து கொள்ள உள்ளார்.

செபி வருவாய் 48% அதிகரிப்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் மொத்த வருவாய் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் 48 சதவீதம் அதிகரித்தது.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது
கிறிஸ்தவர்களின் 40 நாள்கள் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்வுடன் புதன்கிழமை தொடங்கியது.
அந்தியோதயா விரைவு ரயில் 10 மணி நேரம் தாமதம்
தாம்பரத்திலிருந்து சந்திரகாச்சி செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் 10 மணி நேரம் தாமதமாக சென்றதால் வடமாநிலத்தவர் நீண்ட நேரமாக ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

தேஜஸ் போர் விமானத்தில் அதிநவீன உயிர் காக்கும் அமைப்பு முறை
50,000 அடி உயரத்தில் வெற்றிகரமாக பரிசோதனை
தமிழக அரசின் கடன் ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்க வாய்ப்பு
தமிழக அரசின் நேரடிக்கடன் வரும் 2026 மார்ச் 31 நிலவரப்படி ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிக்கக் கூடும் என்று பாமக சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் நடவடிக்கை
தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பேருந்துகளை தாம்பரம் வரை இயக்கினால் ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மாவட்ட ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

செயின்ட் கோபைன் ஆலையில் தேசிய பாதுகாப்பு தின விழா
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் செயின்ட் கோபைன் கண்ணாடி ஆலையில் தேசிய பாதுகாப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தரப்படுவதற்கு காரணம் யார்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை, மார்ச் 4: திமுகவினர் அனுமதி பெற்று நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி மொழி கற்றுத் தரப்படுவதற்கு காரணம் யார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஹிந்தி மொழி விவகாரம் தொடர்பாக திமுகவினருக்கு அவர் ஏழாவது நாளாக செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:

அரசுப் பள்ளி வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்
வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே பதவி விலகல்
கொலை வழக்கில் உதவியாளருக்கு தொடர்பு எதிரொலி

மின் நுகர்வு 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் 13,154 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்
தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.

உக்ரைனுக்கு ராணுவ உதவிகள் நிறுத்திவைப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

கிழக்கு கடற்கரைச் சாலையில் சீரான போக்குவரத்துக்கு உயர்நிலைச் சாலை
கிழக்கு கடற்கரைச் சாலையில் சீரான போக்குவரத்தை உறுதிசெய்ய உயர்நிலைச் சாலை அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இந்தியா-பெல்ஜியம் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உறுதி
இந்தியா வந்துள்ள பெல்ஜியம் இளவரசி ஆஸ்ட்ரிட் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.50 லட்சத்தை இழந்ததால் தற்கொலை முடிவு? மனைவி, 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு; கணவரை தேடும் போலீஸார்
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்துவிட்டதால், மனைவி, இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக கணவர் கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில், தாய், இரு குழந்தைகளின் சடலம் மீட்கப்பட்டது.

விலங்குகளிடம் பரிவு காட்டுங்கள்: மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
குஜராத்தில் வன விலங்குகள்-பறவைகள் மீட்பு மையமான ‘வனதாரா’க்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விலங்குகளிடம் பரிவு காட்டுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை
தனியார் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

காலமானார் எழுத்தாளர் நந்தலாலா (69)
திருச்சியைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவருமான சி. நெடுஞ்செழியன் (எ) நந்தலாலா (69) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.

நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.