பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் மேற்கொண்ட பயணங்கள் இதை உறுதி செய்கின்றன.
ரஷியாவின் கசானில் கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இந்த உச்சிமாநாடு பல விதங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.
மேற்கு ஆசியா, ரஷியா, தைவான் கடல் பகுதியில் மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அதில் ஈடுபட்டுள்ள நாடுகளை உறுப்பினர்களாகக்கொண்ட பிரிக்ஸ் உச்சிமாநாடு உலகின் கவனத்தைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் மோதல் போக்கைக் கொண்டுள்ள நாடுகள் மேற்குலக நாடுகளுடன் கொண்டுள்ள தொடர்பும் உலகமறிந்தவை.
சர்வதேச நிதி நிறுவனங்களின் மீது மேற்குலக நாடுகள் கொண்டிருக்கும் மேலாதிக்கத்துக்கு எதிரானதாக பிரிக்ஸ் அமைப்பு பார்க்கப்படுகிறது. இது பன்முகத்தன்மையை ஊக்குவிக்கும் அமைப்பு என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்டாலும் மேற்கத்திய ஆதிக்கத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
இந்தியாவின் பார்வையில், ரஷியா, சீனா மற்றும் ஈரானுடனான பேச்சுகள் உலகில் அமைதியைப் பேணுவதற்கும், பேச்சுவார்த்தை மூலம் மோதல்களைத் தீர்ப்பதற்குமான முயற்சியாக அமைந்தது. சீனாவும் ரஷியாவும் பிரிக்ஸ் உறுப்பினர்கள். இந்த நாடுகளுடனான அமெரிக்காவின் உறவு மோதலாக மாறியிருக்கிறது. ரஷியாவுடன் இந்தியா நல்ல உறவைப் பேணும் நிலையில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றது. எல்லைப் பிரச்னை தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அதற்கான பேச்சுவார்த்தைகள் மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் கையாள வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்து இந்தியா மேற்கொண்டிருக்கும் முயற்சி இந்திய ராஜதந்திரத்தில் ஒரு முக்கிய நிகழ்வாகும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தீர்க்க இயலாத பிரச்னைகள் பல காலமாக நிலுவையில் உள்ளன என்றாலும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்கு வெளியே நடைபெற்ற கூட்டங்கள் மேற்கத்திய நாடுகளைச் சிந்திக்க வைக்கும் அளவில் அமைந்திருந்தது என்பதில் ஐயமில்லை.
Diese Geschichte stammt aus der November 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 02, 2024-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
'தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும்'
தமிழகம், புதுச்சேரியில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வியாழக்கிழமை பதிலளித்துள்ளார்.
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதியுதவி
ஃபிஜி தீவில் தமிழ் மொழி வளர்ச்சி திட்டத்துக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
நன்மை அளிக்கும் இறைவன்...
பழையதிருமுனைப்பாடி நாட்டில் கடிலம், பெண்ணை ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ள ஊர் திருநாவலூர். இங்குள்ள கோயில் நான்கு யுகங்களுக்கு முன்பே தோன்றியதாகும்.
உக்ரைன் ‘அதிகார மையங்கள்' மீது தாக்குதல்: புதின் எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகளின் ஏவு கணைகளைக் கொண்டு தங்கள் மீது இனியும் தாக்குதல் நடத்தினால், உக்ரைனின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகார மையங்கள் மீது தாங்கள் உருவாக்கியுள்ள - இடைமறிக்க முடியாத - 'ஆரெஷ்னிக்' ரக அதிவேக ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்த மீறல்: இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து தெற்கு லெபனான் சாலைகளில் ரோந்து செல்லும் அந்த நாட்டு ராணுவம்.
ஏழு மாதங்களில் ஏற்றம் கண்ட இரும்புத் தாது உற்பத்தி
நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் இந்தியாவின் இரும்புத் தாது உற்பத்தி 4.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
உகாண்டா: நிலச்சரிவில் 15 பேர் உயிரிழப்பு
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 போ் உயிரிழந்தனா்.
இந்தியா டூர்: மே.தீவுகள் மகளிர் அணி அறிவிப்பு
இந்திய மகளிர் அணியுடனான வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாட வரும் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
டெஸ்ட்: இலங்கை 42-க்கு 'அல் அவுட்'
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 42 ரன்களுக்கு வியாழக்கிழமை ஆட்டமிழந்தது.