அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவும், நலத்திட்டங்கள் அரசின் மக்களை கள் சென்றடைவதை உறுதி செய்திடவும், "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஆய்வில் முதலமைச்சர்" போன்ற திட்டங்களையும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பெண்களுக்கான விடியல் பயணத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 போன்ற முன்னோடி திட்டங்களையும் இவ்வரசு அறிவித்து சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
அதன்தொடர்ச்சியாக, அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கு, அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் அவர்களைச் சென்று சேரும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்திடவும், திராவிட மாடல் ஆட்சியின் மற்றுமொரு மைல்கல்லாக "மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை கோயம்புத்தூர் மாவட்டம், ஆவாரம்பாளையத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் அதிகமாக அணுகும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டுக் கழகம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, எரிசக்தி துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை ஆகிய 13 அரசுத்துறைகள் சார்ந்த கோரிக்கைகளைப் பெற்று தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் நேரடிக் கண்காணிப்பில், அனைத்து நகர்ப்புற, மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மற்றும் கிராம ஊராட்சி அளவில், அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.
Diese Geschichte stammt aus der February 20, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der February 20, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் 2025ம் ஆண்டிற்கான அரசின் வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடல் அலை சீற்றத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் படகுகள் பறிமுதல்
அமைச்சர் லட்சுமி நாராயணன் எச்சரிக்கை
திமுக ஆட்சி காவல்துறையின் பொற்காலம்: மு.க.ஸ்டாலின்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3,359 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சூரிய சக்தி ஸ்டவ் தயாரித்து கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை
ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலையில் இசிஇ இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் எம். முகமத் அன்வர், எஸ்.ஆகாஷ் சாம் ஜெயசீலன், எம்.ஈஸ்வரன், கே.இ.கோகுல், ஆர். துரை ராஜா ஆகியோர் பல்கலை சர்வதேச தொழிற்சாலை உறவு இயக்குநர் முனைவர் ராஜா கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி சூரியசக்தியால் இயங்கும் குரல் கட்டுப்பாட்டு இண்டக்ஸன் ஸ்டவ்” புராஜக்ட் செய்து பல்கலை துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் முன்னிலையில் உபகரணத்தை இயக்கி காண்பித்தனர்.
புதுவையில் புயலை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படைக்கு அழைப்பு
கலெக்டர் குலோத்துங்கன் தகவல்
இகார்ட்டின் சப்ளை செயின் பணமாக்குதல் முயற்சிகள் 3 ஆண்டுகளில் 8 எக்ஸ் வளர்ச்சியை எட்டியுள்ளது
இந்தியாவின் முன்னணி 4 பிஎல் சப்ளை செயின் நிறுவனங்களில் ஒன்றான இகார்ட்,அதன் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்பாட்டுத் திறனுடன் லாஜிஸ்டிக்ஸ்த் துறையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.
தமிழகம் வந்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் நவம்பர் 30ம் தேதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கொங்கு மண்டலங்களில் கனமழை பெய்யும் கடலூர் அருகே கரையை கடக்கும் 'ஃபெங்கல்' புயல்
தனியார் வானிலை ஆர்வலர் தகவல்
விளையாட்டு உபகரணங்களை பெற்றுள்ள இளைஞர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
முதல்வர் வருகையையொட்டி வழுதரெட்டியில் விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் ஆய்வு
தமிழ்நாடு முதலமைச்சர் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை யொட்டி வழுதரெட்டியில் அரசு நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி மற்றும் எல்லீஸ் அணைக்கட்டு மறுகட்டுமானம் திறப்பு விழா முன்னேற்பாடு பணிகளை வனத்துறை அமைச்சர் பொன்முடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.