கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
அதன்படி கருணாபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் பிரவீன், சிவா (32), மகேஷ் (60), ஜெகதீசன் (70), ஏசுதாஸ் (36), கண்ணன் (70), குரு (48), மணி (48), சங்கர் (35), பெரியசாமி (40), சுப்பிரமணியன் (56), பரமசிவம் (56), குரு (44), செந்தில், சுரேஷ், குப்பன் மனைவி இந்திரா, சுரேஷ் மனைவி வடிவு (35), ரஞ்சித்குமார் (37), கிருஷ்ணமூர்த்தி உள்பட 45க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் மகேஷ், ஜெகதீசன், ஏசுதாஸ், கண்ணன், குரு, மணி, சங்கர் உள்பட 19 பேர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் சிலர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கருணாபுரம் சிறுவங்கூர் ரோட்டை சேர்ந்த தர்மன் மகன் சுரேஷ் (வயது 46) கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
பலியானவர்கள் விவரம்
ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. அதுபற்றிய விவரம் வருமாறு:
1.கருணாபுரம் சிறுவங்கூர்ரோடு தர்மன் மகன் சுரேஷ் (வயது 46)
2. கணேசன் மகன் பிரவீன் (29)
3. கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் (40).
4. கருணாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்த சேகர் (65).
5.கிருஷ்ணமூர்த்தி(62) 6.மணி (58) 7. குப்பன் மனைவி இந்திரா(48) 8. கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (35) 9. தனகோடி (55)
10.சுப்பிரமணி(60)
11. மாதவச்சேரியை சேர்ந்த நாராயணசாமி (65)
12.வாய்க்கால் மேடு ராமு (50)
Diese Geschichte stammt aus der June 20, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 20, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
வேலூர் மாவட்டம், வேலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் 400 பயனாளிகளுக்கு ரூ.1.95 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி, வேலூர் பேபி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.
ஸ்கூட் தனது நெட்வொர்க்கை படாங், ஃபூ குவோக் மற்றும் சாந்தூ வரை விரிவுபடுத்துகிறது
சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் (எஸ்ஐஏ) குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட், வியட்நாமில் உள்ள ஃபூ குவோக், இந்தோனே சியாவின் பாடாங் மற்றும் சீனாவின் ஷான்டோ ஆகிய இடங்களுக்கு மூன்று புதிய விமான சேவைகளை அறிமுகப்படுத்துவதாக இன்று அறிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்
அன்புமணி ராமதாஸ் பேச்சு
வருகிற 29ந்தேதி ஆந்திரா வருகிறார் பிரதமர் மோடி
ஆந்திர சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வருகிறது.
4 நாட்களுக்கு பிறகு சற்று உயர்ந்த தங்கம் விலை
தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், கடந்த மாதம் 30ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் பெற்றது.
களக்காடு தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பு: மணிமுத்தாறில் குளிக்க தடை
நெல்லை மாவட்டம் மாஞ்சோலை வனப்பகுதி இந்தியாவிலேயே அதிகம் மழைப்பொழிவு பெறும் வனப்பகுதியாகும்.
இலங்கை பாராளுமன்ற தேர்தல் அதிபர் அனுர குமார திச நாயகா கட்சி அபார வெற்றி
இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது.
இலங்கை பாராளுமன்ற தேர்தல் அதிபர் அனுர குமார திச நாயகா கட்சி அபார வெற்றி
இலங்கை பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை அமைதியான முறையில் நடந்தது.
ஊட்டச்சத்து உறுதி செய்' திட்டத்தின் 2வது தொகுப்பு
முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
நிதி பற்றாக்குறை உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கூடுதல் நிதி பெற்றுத்தர கோரிக்கை
கோவை கிணத்துக்கடவு ஒன்றியம் ஊராட்சி மன்றத்தலைவர் கூட்டமைப்பின் சார்பில் கூட்டமைப்பின் தலைவரும், சொக்கனுர் ஊராட்சி மன்றத் தலைவருமான பிரபு(எ) திருநாவுக்கரசு கோதவாடி.