லஞ்ச வழக்கில் தலைமைப் பொறியாளர் கைது அமைச்சர் பதவி விலகக் கோரி பேரவையில் தர்ணா

புதுச்சேரி சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம், கேள்வி நேரத்தை தொடங்கினார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சிவா, லஞ்ச வழக்கில் புதுச்சேரி தலைமைச் செயலாளருக்கு இணையாக பணியாற்றிய பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் தீனதயாளன் உள்ளிட்ட அதிகாரிகளை CBI அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது புதுச்சேரி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று பொதுப்பணித் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் லட்சுமிநாராயணன் பதவி விலக வேண்டும். இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
அதற்கு சபாநாயகர் செல்வம் அனுமதி அளிக்க மறுத்தார்.
இதனையடுத்து, இதை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா, துணைத்தலைவர் A.M.H. நாஜிம், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக. தியாகராஜன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் வைத்தியநாதன் மற்றும் ரமேஷ் பரம்பத் ஆகியோர் பேரவையின் மைய மண்டபத்தின் நடுவில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
Diese Geschichte stammt aus der March 24, 2025-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 24, 2025-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

த.வெ.க. பொதுக்குழு கூட்டம் மும்மொழிக் கொள்கை, டாஸ்மாக் ஊழலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது, தேர்தலில் வெற்றி பெறுவது தொடர்பாக கட்சித் தலைவர் விஜய் பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறார். கடந்த மாதம் கட்சியின் 2ம் ஆண்டு தொடக்கவிழா பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது
பிளஸ் 2 மாணவமாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த 3ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
பங்குச்சந்தை வீழ்ச்சி மற்றும் போர் சூழல்களால், தங்கத்தை பலரும் பாதுகாப்பான முதலீடாக கருதி அதில் முதலீடு செய்து வருகிறார்கள்.

சிஐஐ தென்னிந்திய மநாட்டை தொடங்கி வைத்தார் இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
விளையாட்டு நகரம் அமைக்க செம்மஞ்சேரியில் 100 ஏக்கர் நிலம் தயார்: தமிழக அரசு தகவல்
தமிழக சட்டசபையில், திட்டம், வளர்ச்சி, சிறப்பு முயற்சிகள் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை ஆகிய துறைகளுக்கான கொள்கை விளக்கக் குறிப்பு நேற்று முன்வைக்கப்பட்டது.

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா
புதுக்கோட்டை, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரியின் ஆங்கிலத் துறையும் கல்லூரியின் உள்ளீடு தர நிர்ணயக் குழுவும் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கம் \"டிஜிட்டல் பிரிவு\" மொழி இலக்கியம் மற்றும் மொழிபெயர்ப்பு (DELTA2025) என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் ஜனவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் 125 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் பல நாடுகளிலிருந்து பெறப்பட்டது.
தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை மத்திய அரசு கடந்த 2005ம் ஆண்டு இயற்றியது.

அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில்
9ம் வகுப்பு மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

ஊத்தங்கரை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பெருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ரமலான் பெருவிழா பள்ளியின் அறக்கட்டளை தலைவர் பழனிவேல் தலைமையில் பள்ளியின் தாளாளர் சக்திவேல் தொடக்க உரை நிகழ்த்தினார்.