
1953ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி பிறந்தவர் ‘எஃப்இஜி’ பாலா. இவரது பெயரைச் சொன்னாலே பலருக்கும் அன்பான, தாராள மனம் படைத்த பாலா என்றுதான் நினைவுக்கு வரும்.
தம் சகோதரர்கள் ஏ எல் காணா, ஏ எல் தக்ஷியுடன் ‘எஃப்இஜி’ (Film Equipment Gallery) நிறுவனத்தை 1990களில் இருந்து நடத்திவந்த அவர், சிங்கப்பூரில் நடந்த பல படப்பிடிப்புகளுக்குக் கருவிகளை வழங்கினார்.
தம் சீரான பணிகளால் சிங்கப்பூரில் மட்டுமன்றி ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், சீனா, ஐரோப்பா, ஹாலிவுட் வரை இம்மூன்று சகோதரர்களின் பெயரும் பரவிவிட்டது.
110, 112, 114 சோஃபியா சாலையில் இரண்டு மாடி ‘பெரானாக்கான்’ கடைவீடுகளில் அலுவலகம் வைத்திருந்த பாலாவையும் குழுவினரையும் தேடி பன்னாட்டுத் திரைப்பட, தொலைக்காட்சிக் குழுவினரும் வந்தனர்.
“பாலா பேசும் முறையிலேயே ஒரு கவர்ச்சி இருந்தது. உடையில், நடையில் அக்காலத்திலிருந்தே அவர் நவீனமயமாக இருந்தார்.
“குறிப்பாக, அவர் தொழிலாளர்களைப் பார்த்தாலும் கோடீஸ்வரரைப் பார்த்தாலும் வித்தியாசம் பார்க்காமல் பழகுவார். அதனால் அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். ஓர் அண்ணனாகவும் மிகுந்த புரிந்துணர்வுடன் இருந்தார்,” என நினைவுகூர்ந்தார் அவருடைய இரண்டாவது தம்பி ஏ எல் காணா, 62.
“அவர் சிறுவயதிலிருந்து எங்கள் இருவரையும் நன்கு பார்த்துக்கொள்வார். திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வார். அவரால் பலரும் முன்னுக்கு வந்துள்ளனர்,” என்றார் அவருடைய முதல் தம்பி ஏ எல் தக்ஷி, 64.
Diese Geschichte stammt aus der October 11, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 11, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
ரோலக்ஸ் படத்தின் மூலம் மீண்டும் இணையும் சூர்யா, லோகேஷ்
சூர்யாவும் லோகேஷும் கன்னட சினிமாவைச் சேர்ந்த ‘கேவிஎன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘ரோலக்ஸ்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

சிறாரின் கண் நலம் பேணுவோம்
‘உலகின் கிட்டப்பார்வைத் தலைநகரம்’ என்ற மற்றொரு பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது என்பதை நம்மில் பலர் அறியாமல் இருக்கலாம்.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கான இணையத்தொடரில் ஜோதிகா
ஜோதிகா, வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியுலகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையக்கருத்தாகக் கொண்ட ‘டப்பா கார்டெல்’ (Dabba Cartel) என்ற இணையத்தொடரில் நடித்திருக்கிறார்.

நன்கொடைப் பெட்டிகளிலிருந்து ஆடைகளை எடுக்க வேண்டாம்: குளூப் நிறுவனம்
சிங்கப்பூரில் ஆடைக் கழிவுகளைக் குறைக்கும் விதமாக சமூக நிறுவனம் ஒன்று பழைய ஆடைகளை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கின்றது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு; கோலமிட்டு போராட்டம்
மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பாத வகைகளுக்கு ஏற்ற காலணிகள்
கவர்ச்சியான காலணிகளை அணிய வேண்டும் என்ற ஆசை ஒருபக்கம், வலி ஏற்படுத்தாத வகை காலணிகளை அணிந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் மறுபக்கம். இரண்டுக்கும் இடையே பலரும் சிக்கித் தவிப்பதுண்டு.
வெளிநாட்டவர்கள் பணியமர்த்தப்படுவர்
ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க குடிமைத் தற்காப்புப் படை முயற்சி
சிறப்பு நீதிமன்றம் தொடங்க மலேசியா ஆலோசனை
மலேசிய அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் ஒன்றைத் தொடங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பங்ளாதேஷில் ஏற்பட்ட மோதலில் 150 மாணவர்கள் காயம்
பங்ளாதேஷில் உள்ள பல் கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கிடையே கைகலப்பு மூண்டதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தியா: ஜம்மு-காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது
இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகள் குறித்து பாகிஸ்தான் அறிந்துகொள்ள வேண்டும்.