தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை மே 24
இதற்கு காரணம், ஐயா அவர்கள், இளமையில் இருந்து இறுதி வரை ஒரு முழுமையான பத்திரிகையாளராக இருந்தார்கள் என்பதே! அரசியல், தொழில், பதவி பொறுப்புகள் எதுவுமே அவரைப் 'பத்திரிகையாளர்' என்ற பாதையில் இருந்து திருப்பிவிட முடிந்தது இல்லை.
'எங்களது பொருட்களின் விற்பனையைக் கூட்டுகின்ற வகையில் விளம்பரம் தருவதற்குச் சிறந்த கருத்துப்படத்தை யார் வரைந்து அனுப்புகின்றார்களோ, அவருக்குப் பரிசு வழங்கப்படும்' என்று கொல்கத்தாவில் வாசனாதி திரவியங்கள் விற்கின்ற ஒரு தொழிற்சாலை ஏடுகளில் அறிவித்திருந்தது.
15 வயதான ஆதித்தனார் ஒரு கருத்துப்படத்தை வரைந்தார். இந்தியா முழுமையும் நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் பரிசை வென்றார்.
இத்தகைய ஆற்றலைப் பெற்ற ஐயா அவர்கள், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பயின்று, தமது 22 ஆம் வயதில் பார் அட்லா படிப்பதற்காக இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்குச் செல்லுகின்றார்.
வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் யாரும் மதுப் பழக்கத்தில் இருந்து தப்புவதில்லை. ஆனால் ஐயா ஆதித்தனார் அவர்கள் தன் வாழ்க்கையில் மதுவை தொட்டதே இல்லை.
எவ்வளவு உயர்ந்த வகை வெளிநாட்டு மதுவாக இருந்தாலும் அதை 'சாராயம்’ என்று முகச்சுழிப்புடன் குறிப்பிடுவார். அவ்வளவு வெறுப்பு!
"வாலிப வயதில் ஒருவன் பெண்களின் பின்னால் சுற்றித்திரிந்தால், வயது ஆக ஆக மனப்பக்குவம் பெற்று அவன் மாறிவிடுவான். ஆனால் மதுப் பழக்கம் நாளாக நாளாக அதிகமாகுமே தவிர குறையாது! வாழ்க்கையே அதனால் பாழாகிவிடும். மேல் நாட்டவர் அப்படி இல்லை, சாப்பிடும்போது நாம் ஊறுகாயைப் பயன்படுத்துவதைபோல மதுவை அவர்கள் அளவோடு பயன்படுத்துகிறார்கள்" என்று ஐயா அவர்கள் கூறுவது உண்டு.
அடுத்து சிங்கப்பூருக்குச் செல்கிறார், கோவிந்தம்மாள் அவர்களை தம் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்கின்றார்.
அங்கே சாரங்கபாணி தொடங்கிய தமிழ் முரசு ஏட்டுக்குத் தோள் கொடுக்கிறார். அதன்பிறகு தாமே ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்... அதற்கான முதலீட்டுக்காக, வழக்கறிஞர் தொழிலில் முழு மூச்சோடு ஈடுபட்டுத் தம் திறமையால் பணம் திரட்டினார்.
Diese Geschichte stammt aus der May 29, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 29, 2024-Ausgabe von Kanmani.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
நுண்ணுயிர் எதிர்ப்பு சக்தி...இயற்கையாக பெறுவது, எப்படி?
இன்றைய நவீன காலத்தில் விதவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே அதை தடுக்கும் வகையில் எதிர்ப்பு மருந்துகளையும் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்து வருகின்றனர்.
வளைய வரும் போலிகள்!
உண்மைக்கு மதிப்பு குறையும்போது போலி உருவாகிறது. உண்மையை விட போலி அதிகம் விலை போகிறது. நவீன உலகில் போலி வேலைகள் எளிதாகிவிட்டதால், அதை பயன்படுத்தி காசு பார்க்க தொடங்கிவிட்டனர்.
எனக்கு என் மீது நம்பிக்கை உள்ளது.
கயாடு லோஹர்... இந்த புனே பெண், இப்போது பிரதீப் ரங்க நாதன் நடிக்கும் டிராகன் படத்தின் நாயகி. அவர் தனது சினிமா அனுபவம் பற்றி சொல்கிறார்.
எத்தனை 100 மனிதர்கள்? அத்தனை நிஜமான மனிதர்கள்!
எத்தனை மனிதர்கள் தொடரின் இறுதி அத்தியாயத்திற்கு வந்திருக்கிறோம். என்னைச் சுற்றிலும் தினமும் உலவும் மனிதர்களையும், ரயில் சிநேகம் போல நான் எப்போதாவது |சந்தித்த மனிதர்களின் கதைகளையும், அவர்களின் வாழ்வியலில் இருந்து நான் கற்றுக் கொண்டவற்றையும் உங்களுடன் பகிர்ந்து வந்திருக்கிறேன்.
வாழ்க்கையில் எல்லாமே ரிஸ்க்தான்!
ஒரு வழியாக கங்குவா படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்து விட்டார் திஷா பதானி .ஆனால் ரிசல்ட்...
காதல் முறிவு....காரணம் என்ன?
தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து... திருமண வாழ்க்கையை வாழ்ந்து... இதோ விவாகரத்து பெற்றுக் கொண்டு அவரவர் வழியில் சென்றுவிட்டனர்.
அதிகரிக்கும் சாலை விபத்துகள் .. என்?
சமீப காலமாக சாலை விபத்துகள் தினசரி செய்தியாகி, பல உயிர்கள் பறிபோகும் கொடுமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீடு மோசடி... கம்பி நீட்டிய நடிகை
வழக்கமாக சினிமா நடிகை கள் என்றாலே லைம் லைட்டில் இருக்கும் போது சம்பாதித்து விட்டு, பிறகு நிரந்தர வருமானத்திற்காக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டு... திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவது வழக்கம். பல நடிகைகள் ரியல் எஸ்டேட் துறையிலும் கால் பதித்து நிலங்களில் முதலீடு செய்கின்றனர்.
தொடரும் நிலச்சரிவு, வடியாத வெள்ளம்...காரணம் என்ன?
வட தமிழ்நாட்டில் தாண்டவமாடிய ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
காதலில் விழுந்தேன்...
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அந்த கணினி மையத்தில் வகுப்புகள் முடியும் நேரம்.... அதுதான் மனோஜ்-மித்ராவின் காதல் பாடம் துவங்கும் நேரம்.... இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கத்தான் செய்கிறது...