ProbarGOLD- Free

Dinamani Chennai  Cover - February 13, 2025 Edition
Gold Icon

Dinamani Chennai - February 13, 2025Add to Favorites

Obtén acceso ilimitado con Magzter ORO

Lea Dinamani Chennai junto con 9,000 y otras revistas y periódicos con solo una suscripción   Ver catálogo

1 mes $9.99

1 año$99.99 $49.99

$4/mes

Guardar 50%
Hurry, Offer Ends in 16 Days
(OR)

Suscríbete solo a Dinamani Chennai

1 año$356.40 $23.99

Valentines Day Sale - Guardar 93%
Hurry! Sale ends on February 16, 2025

comprar esta edición $0.99

Regalar Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Suscripción Digital
Acceso instantáneo

Verified Secure Payment

Seguro verificado
Pago

En este asunto

February 13, 2025

அதிநவீன அணு உலைகள் உருவாக்கம்

ஆக்கபூர்வ அணுசக்தி ஒத்துழைப்பின் கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி-பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் இடையிலான பேச்சுவார்த்தையில் மேற்கண்ட திட்டத்திற்கான பூர்வாங்க ஆவணம் கையொப்பமிடப்பட்டது.

அதிநவீன அணு உலைகள் உருவாக்கம்

1 min

ஜம்மு-காஷ்மீர்; பூஞ்ச் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் மோதல்

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே புதன்கிழமை கடும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

1 min

இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்

அதிமுக பொதுச் செயலர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்

1 min

தேர்தல் இலவசங்களால் மக்கள் உழைக்க விரும்பவில்லை

உச்சநீதிமன்றம் அதிருப்தி

தேர்தல் இலவசங்களால் மக்கள் உழைக்க விரும்பவில்லை

1 min

சென்னையின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்!

விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னையின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில்!

1 min

தரிசனம்: 15 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 15 மணி நேரம் காத்திருந்தனர்.

1 min

திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை

திருத்தணி முருகன் கோயிலுக்கு திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்தை புதன்கிழமை காணிக்கையாக வழங்கினார்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு பேருந்து காணிக்கை

1 min

கும்மிடிப்பூண்டி வழி புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.13) ரத்து செய்யப்படவுள்ளன.

கும்மிடிப்பூண்டி வழி புறநகர் மின்சார ரயில்கள் இன்று ரத்து

1 min

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு

1 min

இன்று மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்

தாம்பரம் கோட்ட மின்நுகர்வோர் குறை கேட்பு கூட்டம் மேற்கு தாம்பரம் முல்லை நகர் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் 1-ஆவது தளத்தில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

1 min

காதலர் தினம் : பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

காதலர் தினத்தையொட்டி (பிப்.14) சென்னையில் பொழுது போக்கு இடங்களில் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காதலர் தினம் : பொழுதுபோக்கு இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

1 min

ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய குடியிருப்புகள்

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காசிமேடு, புதுமனை குப்பம், சிங்காரவேலன் நகரில் புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ள பகுதிகளை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் புதிய குடியிருப்புகள்

1 min

எலும்பு புற்றுநோயை நவீன சிகிச்சையால் குணமாக்கிய மருத்துவர்கள்

மார்பு எலும்பில் பரவியிருந்த புற்றுநோய் கட்டியை நுட்பமாக அகற்றி அங்கு டைட்டானியம் உலோகத்திலான எலும்பை பொருத்தி நோயாளி ஒருவருக்கு சென்னை மெரிடியன் மருத்துவமனை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

1 min

பச்சை பட்டாணி முறைகேடு வழக்கு சுங்கத் துறை கூடுதல் ஆணையர் உள்பட 4 பேர் கைது

பச்சை பட்டாணி முறைகேடு வழக்குத் தொடர்பாக சுங்கத் துறை கூடுதல் ஆணையர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தோரண வாயில் இடிப்பு: ஒருவர் உயிரிழப்பு

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த தோரண வாயிலை வியாழக்கிழமை அதிகாலை இடித்து அகற்ற முயன்ற போது, அது இடிந்து விழுந்ததில் பொக்லைன் இயந்திர ஓட்டுநர் உயிரிழந்தார்.

1 min

பெண்கள் பாதுகாப்பு செயலி விழிப்புணர்வு

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பெண்களிடம் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள காவல் உதவி செயலின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

அரக்கோணம் ராஜாளி கடற்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் பணிபுரிந்து வந்த வீரர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min

பாஜக ஆட்சி அமைந்தால் அதிக மகளிர் உரிமைத் தொகை

தமிழகத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்தால் திமுகவைவிட கூடுதலாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக ஆட்சி அமைந்தால் அதிக மகளிர் உரிமைத் தொகை

1 min

வழக்குரைஞர் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் நீதிபதி எம். நிர்மல் குமார்

சட்டக் கல்வி பயிலும் மாணவர்கள் திறமையான மூத்த வழக்குரைஞரிடம் உதவியாளராகச் சேர்ந்து முழு அர்ப்பணிப்புடன் பணியை மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நிர்மல்குமார் அறிவுறுத்தினார்.

வழக்குரைஞர் பணியை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும் நீதிபதி எம். நிர்மல் குமார்

1 min

ரூ. 4.28 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்

அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

ரூ. 4.28 கோடியில் புதிய மருத்துவக் கட்டடங்கள்

1 min

மாணவர்களிடம் பகுத்தறிவு பிரசாரம்: திமுக அறிவிப்பு

மாணவர்களிடம் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

மாணவர்களிடம் பகுத்தறிவு பிரசாரம்: திமுக அறிவிப்பு

1 min

பிப்.17-இல் ஓபிஎஸ் ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்களுடன் பிப். 17-இல் ஆலோசனை நடத்தவுள்ளார்.

பிப்.17-இல் ஓபிஎஸ் ஆலோசனை

1 min

கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு புதன்கிழமை சந்தித்தார்.

கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு சந்திப்பு

1 min

ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவில்லை

கே.ஏ.செங்கோட்டையன்

ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவில்லை

1 min

சாலைகளில் தேவையற்ற இடங்களில் வேகத்தடை வேண்டாம்

அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்

சாலைகளில் தேவையற்ற இடங்களில் வேகத்தடை வேண்டாம்

1 min

பிப்.18-இல் அதிமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதைக் கண்டித்து, அதிமுக மாணவரணி சார்பில் பிப். 18-இல் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பிப்.18-இல் அதிமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்

1 min

விருதுநகர் அருகே பழுதாகி நின்ற லாரி மீது வாகனங்கள் மோதல்: மூவர் உயிரிழப்பு

விருதுநகர் அருகேயுள்ள பூசாரிபட்டி சந்திப்பு நான்கு வழிச் சாலையில் புதன்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற லாரி மீது இரு சக்கர வாகனம், மினி லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர்.

1 min

மாணவருக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியர் கைது

சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

மாணவருக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியர் கைது

1 min

அரசுப் பேருந்து கவிழ்ந்து ஏழு பேர் காயம்

பைத்தூர் கல்லுக்கட்டு பகுதியில் அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர்.

அரசுப் பேருந்து கவிழ்ந்து ஏழு பேர் காயம்

1 min

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 155 கன அடியாக சரிந்தது.

1 min

உளுந்தூர்பேட்டை அருகே மூவர் சடலமாக மீட்பு

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

உளுந்தூர்பேட்டை அருகே மூவர் சடலமாக மீட்பு

1 min

வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நில விவகாரம்: பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் தொடர்பாக வாரியம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதால் வசிப்பவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும், யாரையும் அணுக வேண்டாம் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.

வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்திய நில விவகாரம்: பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

1 min

தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக இடம் பெறும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

தேமுதிக இடம்பெறும் கூட்டணி மகத்தான வெற்றிபெறும்

1 min

'சென்னை சர்வதேச விமான நிலையம்' புதிய செயலி விரைவில் அறிமுகம்

விமானங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக 'சென்னை சர்வதேச விமான நிலையம்' என்ற புதிய செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

1 min

மனச்சான்றின்வழி வாழ்வோம்!

மனிதனின் துன்பத்துக்குக் காரணம், அவனது ஆசையே' என்றார் புத்தர். மனிதன் படிக்கும் திறன் பெற்றிருப்பதால் அறிவைப் பெறுகிறான். தன் அனுபவத்தால் பட்டறிவையும் பெறுகிறான். எனவே, அன்றாட நிகழ்வுகளில் எது நல்லது, எது கெட்டது எனப் பிரித்தறியும் திறனையும் பெறுகிறான். ஆறறிவு பெற்ற அவனுக்கு மட்டுமே, அறவழியிலும், அறமற்ற வழியிலும் வாழத் தெரியும். அவன் தன் படிப்பறிவாலும், பட்டறிவாலும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளை வளர்த்துக்கொள்கிறான். அதை நோக்கிப் பயணிக்கவும் செய்கிறான்.

2 mins

இணைய வழிப்பறி!

எது எப்படியோ, இணையக் கடலில் பயணிக்கும் போது, நம் படகைக் கவிழ்க்க ஏராளமான திமிங்கலங்கள் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. நாம்தான் முன்னெப்பொழுதையும் விட, மிக அதிக விழிப்புடன் பயணிக்க வேண்டி இருக்கிறது. கவனம் தேவை.

இணைய வழிப்பறி!

3 mins

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம்

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு வழக்கில் 12 கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்

1 min

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு

அமைச்சர் அன்பில் மகேஸ்

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு

1 min

கால்நடை பல்கலை.க்கு புதிய துணைவேந்தர்: தேடுதல் குழு அமைப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை பரிந்துரைப்பதற்கான தேடுதல் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

1 min

3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி உத்தரவு

தமிழகத்தில் 3 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி பிறப்பித்த உத்தரவு அரசிதழில் வெளியிடப்பட்டது.

1 min

2,642 மருத்துவர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,642 மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் புதன்கிழமை (பிப்.12) தொடங்கியது.

1 min

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் திட்டங்களுக்கு நிதி தேவை

தூத்துக்குடி, நீலகிரியில் சூழலியல் சார்ந்த புதிய திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டுமென மத்திய அரசிடம் தமிழக அரசு நேரில் கோரிக்கை விடுத்தது.

1 min

அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும்

மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வு, பொறுப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளியாக அறிவிப்பு

கடந்த 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான மேலும் ஒரு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாரை தில்லி நீதிமன்றம் புதன்கிழமை குற்றவாளியாக அறிவித்தது.

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளியாக அறிவிப்பு

1 min

தமிழகத்தில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

தமிழகத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (பிப்.13, 14) வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min

போக்குவரத்து ஓய்வூதியர் பணப்பலன் வழங்க அரசு கடனுதவியாக ரூ.396 கோடி ஒதுக்கீடு

போக்குவரத்துக் கழகத்தில் பணி யாற்றி 2023-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன் வழங்க ரூ.396 கோடியை தமிழக அரசு கடன் தொகையாக ஒதுக்கியுள்ளது.

1 min

வளர்ச்சி எனும் பெயரில் தலித் நிலங்கள் பறிப்பு

வளர்ச்சி எனும் பெயரில் தலித் நிலங்களை மாநில அரசு பறிக்கிறது என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பெ.சண்முகம் குற்றஞ்சாட்டினார்.

1 min

ஜாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசே எடுக்க முடியும்: காங்கிரஸ்

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசுதான் எடுக்க முடியும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

1 min

பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலா?: மாணவர்கள் புகார் தெரிவிக்க எண் '14417'

பாலியல் தொந்தரவு புகார்களை மாணவர்கள் அச்சமின்றி '14417' என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: தலைமைச் செயலர் ஆலோசனை

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது தொடர்பாக தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.

பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு: தலைமைச் செயலர் ஆலோசனை

1 min

தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கை 36 சதவீதமாக உயர்வு

தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்களின் சேர்க்கை விகிதம் 36 சதவீதமாக முன்னேற்றமடைந்துள்ளது என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.

தமிழ்நாட்டில் உயர் கல்வியில் பெண்கள் சேர்க்கை 36 சதவீதமாக உயர்வு

1 min

ஐஏஎஸ் அதிகாரிகளை அடிக்கடி பணியிட மாற்றம் செய்யக் கூடாது: ராமதாஸ்

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அடிக்கடி பணியிட மாற்றம் செய்யப்படுவதை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min

தொழுநோய் ஒழிப்பு பரிசோதனை முகாம்: தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்

தொழுநோய் பாதிப்பை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனை முகாம் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை (பிப்.13) தொடங்குகிறது.

1 min

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்

மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்

1 min

தேசிய ஹோமியோபதி ஆணைய தலைவர் பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய ஹோமியோபதி ஆணைய (என்சிஹெச்) தலைவர் பதவியில் இருந்து மருத்துவர் அனில் குரானா விலக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீர்வு கிடைக்க வாய்ப்பு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

புதிய வருமான வரி மசோதா மக்களவையில் இன்று தாக்கல்

மக்களவையில் புதிய வருமான வரி மசோதா வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளது.

1 min

கர்நாடகத்தில் சிறுகடன் வசூலில் தொல்லை தருவதைத் தடுக்கும் அவசரச் சட்டம்

ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல்

1 min

காங்கிரஸை காப்பாற்றுவது குறித்து ராகுல் அதிகம் கவலைப்பட வேண்டும்

அழிந்து வரும் காங்கிரஸ் கட்சியை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்துதான் ராகுல் காந்தி அதிகம் கவலைப்பட வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக தலைவரும், மாநில அமைச்சருமான சந்திரசேகர பவன்குலே தெரிவித்தார்.

1 min

சட்டவிரோதமாக ஊடுருவிய 16 வங்கதேசத்தவர் நாடு கடத்தல்

குஜராத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி தங்கியிருந்த 16 வங்கதேசத்தவர்கள் நாடுகடத்தப்பட்டதாக குஜராத் காவல் துறையினர் தெரிவித்தனர்.

1 min

நெகிழியில் உருவாக்கப்பட்ட மலர்களுக்கு தடை விதிக்காதது ஏன்?

மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

1 min

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு: இணையவழி விண்ணப்ப நடைமுறையில் மாற்றம்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) முதல்நிலை தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

1 min

விரைவில் 50 ரூபாய் நோட்டுகள் வெளியீடு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கையொப்பத்துடன் 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என்று ஆர்பிஐ அறிவித்துள்ளது.

1 min

மீண்டும் காங்கிரஸில் பிரணாப் முகர்ஜி மகன்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

1 min

அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் காலமானார்

பிரதமர் மோடி இரங்கல்

1 min

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மார்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமர் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனர்.

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

1 min

மகா கும்பமேளா: மாகி பௌர்ணமியில் 2 கோடி பக்தர்கள் புனித நீராடல்

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்புக்குரிய மாகி பௌர்ணமி புனித நீராடலில் 2 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.

மகா கும்பமேளா: மாகி பௌர்ணமியில் 2 கோடி பக்தர்கள் புனித நீராடல்

1 min

கல்வியில் பாகுபாடு கூடாது: உச்சநீதிமன்றம்

எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

1 min

வரி விதிப்பு, நாடு கடத்தல் விவகாரங்களை டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேச வேண்டும்

காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தல்

வரி விதிப்பு, நாடு கடத்தல் விவகாரங்களை டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேச வேண்டும்

1 min

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு

காங்கிரஸ் குற்றச்சாட்டு

1 min

இந்திய ஏவுகணைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய ஏவுகணைகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன

1 min

அசலங்கா, தீக்ஷனா அசத்தல்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை 49 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

அசலங்கா, தீக்ஷனா அசத்தல்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை

1 min

ஊழல் தரவரிசையில் இந்தியா பின்னடைவு: 96-ஆவது இடம்

டென்மார்க் முதலிடம்

1 min

முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்

ஒப்புக்கொண்டபடி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை இந்த வாரம் விடுவிக்காவிட்டால் காஸாவில் மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அங்கு 24 நாள்களாக கடைப்பிடிக்கப்பட்டுவரும் போர் நிறுத்த ஒப்பந்தம் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முறியும் அபாயத்தில் காஸா போர் நிறுத்த ஒப்பந்தம்

1 min

ஐஷர் நிகர லாபம் 18% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஐஷர் மோட்டார்ஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 18 சதவீதம் உயர்ந்துள்ளது.

ஐஷர் நிகர லாபம் 18% உயர்வு

1 min

அசோக் லேலண்ட் நிகர லாபம் புதிய உச்சம்

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட், இதுவரை இல்லாத அதிகபட்ச டிசம்பர் காலாண்டு நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

அசோக் லேலண்ட் நிகர லாபம் புதிய உச்சம்

1 min

முன்கூட்டியே பூமி திரும்பும் சுனிதா

போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் கடந்த ஆண்டு சர்வதேச விண் நிலையம் சென்று அந்த விண்கலம் பழுதானதால் அங்கேயே சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸும், அவருடன் சென்ற மற்றொரு நாசா வீரர் பட்ச்வில்மோரும் புதிய திட்டத்தின் கீழ் மார்ச் மாதமே பூமி திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

முன்கூட்டியே பூமி திரும்பும் சுனிதா

1 min

ஹசீனா ஆட்சியில் மனித உரிமை மீறல்

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும் இதில் சிறுவர்கள் உள்ளிட்ட 1,400 பேர் உயிரிழந்ததாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய நிபுணர்கள் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஹசீனா ஆட்சியில் மனித உரிமை மீறல்

1 min

ஏபிடி பார்சல் சர்வீஸ் இனி ஏபிடி லாஜிஸ்டிக்ஸ்

ஏபிடி பார்சல் சர்வீஸ் நிறுவனத்தின் பெயர் ஏபிடி லாஜிஸ்டிக்ஸ் என மாற்றப்பட்டுள்ளதாக ஏபிடி குழுமத்தின் தலைவர் எம். மாணிக்கம் கூறினார்.

ஏபிடி பார்சல் சர்வீஸ் இனி ஏபிடி லாஜிஸ்டிக்ஸ்

1 min

இழந்த பகுதிகள் இனி உக்ரைனுக்குக் கிடைக்காது

அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர்

இழந்த பகுதிகள் இனி உக்ரைனுக்குக் கிடைக்காது

1 min

மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த குலமங்கலம் மலையக்கோவிலில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடுகள் முட்டியதில் 38 பேர் காயமடைந்தனர்.

மலையக்கோவிலில் ஜல்லிக்கட்டு: 38 பேர் காயம்

1 min

ஸ்ரீரங்கம் கோயில் தை தேர்த் திருவிழா நிறைவு

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தை தேர்த் திருவிழா புதன்கிழமை இரவு ஆளும் பல்லக்கு சேவையுடன் நிறைவுற்றது.

ஸ்ரீரங்கம் கோயில் தை தேர்த் திருவிழா நிறைவு

1 min

Leer todas las historias de Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

Editor: Express Network Private Limited

Categoría: Newspaper

Idioma: Tamil

Frecuencia: Daily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancela en cualquier momento [ Mis compromisos ]
  • digital onlySolo digital

Usamos cookies para proporcionar y mejorar nuestros servicios. Al usan nuestro sitio aceptas el uso de cookies. Learn more