

Dinamani Chennai - February 24, 2025

Få ubegrenset med Magzter GOLD
Les Dinamani Chennai og 9,000+ andre magasiner og aviser med bare ett abonnement Se katalog
1 Måned $14.99
1 År$149.99
$12/måned
Abonner kun på Dinamani Chennai
1 år $33.99
Kjøp denne utgaven $0.99
I denne utgaven
February 24, 2025
இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 32 பேர் கைது
கச்சத்தீவு அருகே 5 விசைப் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 32 பேரை இலங்கைக் கடற்படையினர் சனிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
1 min
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min
கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை குறைந்தது
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்துள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது.
1 min
திருவேற்காட்டில் ரூ.1 கோடியில் மழைநீர் வடிகால் பணி
திருவேற்காட்டில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணியை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min
பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி
பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min
சிங்கார சென்னை அட்டை இருப்புத்தொகை விரைவில் கைப்பேசியில் அறியலாம்
மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்
1 min
மண் சாலையாக மாறிய ராயபுரம் நெடுஞ்சாலை
ராயபுரம் எண்ணூர் விரைவுச் சாலையில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் மீண்டும் மூடப்பட்டு முறையாக சாலை அமைக்காததால் அந்தச் சாலை மண் சாலையாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

1 min
புகையிலைப் பொருள்களுக்கு நிரந்தரத் தடை கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் பான் மசாலா, புகையிலைப் பொருள்களுக்கு நிரந்தரத் தடை விதிக்கக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
ஓடும் ரயிலில் பயணியின் கைப்பையை பறித்த காவலர்!
சென்னையில் ஓடும் ரயிலில் பெண் பயணியிடமிருந்து வைர நகைகள் இருந்த கைப்பையை பறித்துவிட்டு தப்பிச் செல்ல முயன்ற காவலரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
நாட்டுப்பற்றை தமிழர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டாம்: சீமான்
நாட்டுப்பற்றை தமிழர்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
1 min
மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது
சென்னையில் 1.5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து கார், கைப்பேசி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.
1 min
அநீதிக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது
சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிரான அறச்சீற்றம் அவசியமானது என மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி தெரிவித்தார்.

1 min
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்?
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன் என்று வன்னியர் சங்க மாநாட்டில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

1 min
இந்திய கண் மருத்துவம் உலகப் புகழ் பெற காரணம் டாக்டர் பத்ரிநாத்
இந்திய கண் மருத்துவத் துறையின் புகழ் உலகெங்கும் சென்றடைந்ததற்கு டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் முக்கியக் காரணம் என பெங்களூரு கார்திக் நேத்ராலயா மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எம்.எஸ்.ரவீந்திரா புகழாரம் சூட்டினார்.

1 min
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியர் கைது
சேலம் அருகே அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், ஓவிய ஆசிரியரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஞானசேகரனிடம் 100 பவுன் நகைகள் பறிமுதல்
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் அடகு கடைகளிலிருந்து 100 பவுன் நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
ரயில் நிலைய பெயர்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு
கோவை மாவட்டம், பொள்ளாச்சி ரயில் நிலைய பெயர்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகளை கருப்பு பெயிண்டால் அழித்த திமுகவினர் மீது ரயில்வே போலீஸார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
காவல் துறை விசாகா கமிட்டி; புதிய உறுப்பினர்கள் நியமனம்
தமிழக காவல் துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டிக்கு புதிய உறுப்பினர்களை நியமித்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
1 min
முதலீட்டுக்கு இருமடங்கு தருவதாக மோசடி: தனியார் நிறுவனத்துக்கு சீல்; 14 பேர் கைது
சேலத்தில் முதலீட்டுக்கு இருமடங்கு தருவதாகக் கூறி, கோடிக்கணக்கில் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியார் நிறுவன நிர்வாகிகள் 4 பேர், முகவர்கள் உள்பட 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கொளத்தூரில் புதிய அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்
சென்னை கொளத்தூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கு 'பெரியார் அரசு மருத்துவமனை' எனப் பெயர் சூட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

1 min
நியமனமும் விமர்சனமும்
இந்தியாவின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக, தேர்தல் ஆணையர்களில் ஒருவராக இருந்த ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் மூன்றாவது தேர்தல் ஆணையராக 1989 ஹரியாணா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விவேக் ஜோஷி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ஏற்கெனவே தேர்தல் ஆணையராக இருக்கும் சுக்பீர் சிங் சாந்து தனது பதவியில் தொடர்வார். 26-ஆவது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கும், கேரள மாநில ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்த ஞானேஷ்குமார் தனது பதவிக் காலத்தில் 20 சட்டப்பேரவை தேர்தல்களை தலைமை தாங்கி நடத்துவார் என்பதால் அவரது நியமனம் முக்கியத்துவம் பெறுகிறது.
2 mins
டிரம்ப் ஆதிக்கத்தால் அதிரும் உலகம்!
டிரம்ப்பின் நடவடிக்கைகள் அமெரிக்காவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உலக வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும். சட்ட விரோத குடியேறிகள் வெளியேற்றம் என்ற பெயரில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் வேதனையளிக்கும் விஷயம்,

3 mins
கண்டிப்பது குற்றமல்ல!
பணி இடங்களில் ஓர் ஊழியரை அலுவலகப் பணிகளுக்காக முதுநிலை ஊழியர்கள் கண்டிப்பதை, வேண்டும் என்றே செய்யப்படும் அவமானமாகக் கருதி குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியாது என உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்துள்ள தீர்ப்பு கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
2 mins
முதல்வர் மருந்தகம் திட்டம் இன்று தொடக்கம்; 36 மாவட்டங்களிலும் அமலுக்கு வருகிறது
மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் 'முதல்வர் மருந்தகம்' திட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கப்படவுள்ளது.
1 min
அதிமுகவில் நீக்கப்பட்டவர்களை சேர்க்க முடியாது
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என அந்தக் கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

1 min
அரசு ஊழியர்கள்-ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் அடங்கிய தமிழக அரசின் குழு திங்கள்கிழமை (பிப். 24) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
1 min
இலங்கை வசமுள்ள மீனவர்களை விடுவிக்க வலுவான தூதரக முயற்சி அவசியம்
மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1 min
நாட்டின் மத நம்பிக்கைகள் மீது தொடர் தாக்குதல்
'அடிமை மனப்பான்மை கொண்டவர்கள், அந்நிய சக்திகளின் ஆதரவுடன் நாட்டின் மத நம்பிக்கைகள் மீது தொடர் தாக்குதல் நடத்துகின்றனர்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

1 min
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என சமூக நலத் துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.

1 min
ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் ரூ. 5,000 கோடி கட்டுமானப் பணிகள் பாதிப்பு
வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரசு ஒப்பந்ததாரர்கள் முடிவு

1 min
தமிழகம்-காசி இடையே தனித்துவ பிணைப்பு!
தமிழகம்-காசி இடையிலான பிணைப்பு தனித்துவமானது என்று காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

1 min
தெலங்கானா கோயிலில் நாட்டின் மிக உயரமான தங்க கோபுரம்
தெலங்கானா மாநிலத்தின் யாதகிரி குட்டாவில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்ம சுவாமி கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கோபுரத்துக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
1 min
அமெரிக்காவிலிருந்து தில்லி புறப்பட்ட விமானம்: பாதுகாப்பு காரணங்களால் இத்தாலிக்கு அனுப்பிவைப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து புது தில்லிக்குப் புறப்பட்ட பயணிகள் விமானம் பாதுகாப்பு காரணங்களால், இத்தாலி தலைநகர் ரோமுக்கு திருப்பிவிடப்பட்டது.
1 min
மேகாலயம்: சட்டவிரோதமாக ஊடுருவிய 6 வங்கதேசத்தினர் கைது
சட்டவிரோதமாக ஊடுருவிய 6 வங்கதேசத்தினரை மேகாலயம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கைது செய்தது.
1 min
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடுகடத்தப்பட்ட 12 இந்தியர்கள் தில்லி வருகை
அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடுகடத்தப்பட்ட 12 இந்தியர்கள், அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தடைந்தனர்.
1 min
புற்றுநோய் மையங்கள் உள்கட்டமைப்பிற்கான ஆய்வு தொடக்கம்
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய்க்கான பகல்நேர பராமரிப்பு வசதிகளுக்கான மையங்களை அமைக்க தேவையான உள்கட்டமைப்பிற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
ஹோலி கொண்டாடிய மாணவர்களுக்கு நோட்டீஸ்
சர்ச்சையில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்

1 min
கேரளம்: தண்டவாளத்தில் இரும்பு கம்பத்தை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி
கேரள மாநிலம் கொல்லம் அருகே ரயில் தண்டவாளத்தில் தொலைத்தொடர்பு சேவையில் பயன்படுத்தும் இரும்பு கம்பத்தை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: தண்ணீர், சேறு, இடிபாடுகளால் மீட்புப் பணிகளில் சிக்கல்
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கிய 8 பேரை மீட்கும் பணிகள் தொடர்ந்து மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சேறு, தண்ணீர், இடிபாடுகள் காரணமாக அவர்களை மீட்பதில் சிக்கல் நிலவுகிறது.

1 min
பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

1 min
மாநில மகளிர் கால்பந்து: எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி முதலிடம்
கோவில்பட்டி கால்பந்து கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான மகளிர் கால்பந்து போட்டியில், சென்னை எம்ஓபி வைஷ்ணவ மகளிர் கல்லூரி அணி முதலிடம் பிடித்தது.

1 min
மோகன் பகான் சாதனை சாம்பியன்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் 1-0 கோல் கணக்கில் ஒடிஸா எஃப்சியை ஞாயிற்றுக்கிழமை வென்றது.

1 min
ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன்
மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், ரஷியாவின் இளம் வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா சாம்பியன் கோப்பை வென்றார்.

1 min
டிரம்ப், மோடி பேசினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதா?
இடதுசாரிகளுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி கண்டனம்

1 min
அமெரிக்கா: கடந்த வார பணி அறிக்கையைச் சமர்ப்பிக்க அரசுப் பணியாளர்களுக்கு எலான் மஸ்க் கெடு
அமெரிக்க அரசின் பல்வேறு துறைப் பணியாளர்கள், தங்களின் கடந்த வார பணி அறிக்கையை 48 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்நாட்டின் அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க் உத்தரவிட்டுள்ளார்.

1 min
உக்ரைனில் அமைதி நிலவ பதவி விலகவும் தயார்: அதிபர் ஸெலென்ஸ்கி
உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்க்கப்படுமானால் அதிபர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று அந்நாட்டு அதிபர் வொலொதிமீர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

1 min
பிரான்ஸ்: கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழப்பு; 7 காவலர்கள் படுகாயம்
கிழக்கு பிரான்ஸில் உள்ள சந்தையில் அல்ஜீரியாவைச் சேர்ந்த நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 7 காவலர்கள் காயமடைந்தனர்.
1 min
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே முதல் முறையாக நேரடி வர்த்தகம்
பாகிஸ்தான் - வங்கதேசம் இடையே நேரடி வர்த்தகம் தொடங்கியுள்ளது. அதன்படி, பாகிஸ்தானின் குவாஷிம் துறைமுகத்தில் இருந்து அரசு ஒப்புதலுடன் 25,000 டன் அரிசி வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1 min
மகா கும்பமேளாவில் புனித நீராடிய காஞ்சி சங்கராசாரியர்
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் காஞ்சி சங்கராசாரியர் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடினார்.

1 min
தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் மார்ச் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
சிதம்பரத்தில் பிப்.26-இல் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம்
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா வரும் 26-ஆம் தேதி தொடங்கி மார்ச் 2 வரை நடைபெறுகிறது.
1 min
சதுரகிரிக்குச் செல்ல 4 நாள்கள் அனுமதி
மகா சிவராத்திரியை முன்னிட்டு, சதுரகிரி கோயிலுக்குச் செல்ல செவ்வாய்க்கிழமை (பிப். 25) முதல் 4 நாள்கள் பக்தர்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
1 min
மருத்துவமனைகளில் ஓஆர்எஸ் விநியோகம்
அதிகரித்து வரும் வெப்ப நிலையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் உப்பு-சர்க்கரை கரைசல் விநியோக (ஓஆர்எஸ் கார்னர்) வசதிகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.
1 min
கடவுப் பாதையில் சிக்கிய டிராக்டர் மீது ரயில் மோதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே சம்பவம்

1 min
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
ஒகேனக்கல் அருவிக்கு வாரவிடுமுறையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் வந்தனர்.

1 min
சீகன்பால்கு நினைவு தினம்: தரங்கம்பாடியில் அனுசரிப்பு
தரங்கம்பாடியில் சீகன்பால்குவின் 306-ஆவது நினைவு தினம் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Utgiver: Express Network Private Limited
Kategori: Newspaper
Språk: Tamil
Frekvens: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Kanseller når som helst [ Ingen binding ]
Kun digitalt