எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!

Malai Murasu|March 27, 2025
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!
எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!

எடப்பாடி சந்திப்பை தொடர்ந்து அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலை இன்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

2026 சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்ளும் வகையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தயாராகி வருவதாக கூறப்பட்டும் நிலையில் தலைநகர் டெல்லியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு கூட்டணியை உறுதி செய்யும் விதமாக அமைந்தது.

இதன் எதிரொலியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா வின் அழைப்பின் பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று காலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரது இந்த பயணத்தின் போது அ.தி.மு.க.வுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கும்படி பா.ஜ.க. மேலிடம் அறிவுறுத்தும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021 ஜூலை மாதம், தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அப்போது இருந்தே ஆளும் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்து வரும் அண்ணாமலை, கூட்டணிகட்சியான அ.தி.மு.க.வுடனும் இணக்கமாக செல்ல விரும்பவில்லை என்றே கூறப்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்ததே அ.தி.மு.க. தோல்விக்கு காரணம் என அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் வெளிப்படையாக கூறினர். எனினும் அப்போது டெல்லி மேலிடம் அழைத்து இருதரப்பையும் சமாதானம் செய்தது.

தி.மு.க. தலைவர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டு பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் வெளியிடுவேன் என்று கூறியதுடன் திராவிட கட்சிகள் ஊழலில் திளைக்கின்றன, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதன் காரணமாகவே நீதிமன்றத்தால் தண்டிக்கப்படார் என அண்ணாமலை பேசியது அ.தி.மு.க. தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இரு ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு கிழக்கு தேர் தலின் போது இ.பி.எஸ்.ஓ.பி.எஸ். இருதரப்பினரை இணைக்க அண்ணாமலை முயன்ற போது கட்சியின் உள்விவகாரத்தில் தலையிடுவதை அ.தி.மு.க. நிர்வாகிகள் விரும்பவில்லை.

This story is from the March 27, 2025 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the March 27, 2025 edition of Malai Murasu.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM MALAI MURASUView All
காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்
Malai Murasu

காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்

சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

time-read
1 min  |
April 01, 2025
பெரும் அச்சுறுத்தலாகும் தெரு நாய்க்கடிக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்!
Malai Murasu

பெரும் அச்சுறுத்தலாகும் தெரு நாய்க்கடிக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்!

டாக்டர். அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!

time-read
1 min  |
April 01, 2025
Malai Murasu

ரூ.290 கோடியில் கட்டப்படும் திருச்சிநூலகத்திற்கு காமராஜர்பெயர்

* சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; “கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட தலைவர்”, என்றும் புகழாரம்

time-read
2 mins  |
April 01, 2025
Malai Murasu

சென்னை ஐ.பி.எல்.போட்டியின் போது ரசிகர்களிடம் செல்போன்கள் திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கைது!

36 செல்போன்கள் பறிமுதல் !!

time-read
1 min  |
April 01, 2025
பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருந்தாலும் விஜய், சீமானுக்காக கூட்டணிக் கதவை திறந்து வைத்திருக்கும் அ.தி.மு.க.!
Malai Murasu

பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருந்தாலும் விஜய், சீமானுக்காக கூட்டணிக் கதவை திறந்து வைத்திருக்கும் அ.தி.மு.க.!

அரசியல் களத்தில் உலாவரும் பரபரப்பு தகவல்கள்!!

time-read
2 mins  |
April 01, 2025
Malai Murasu

6- -ஆம் தேதி ராமேசுவரத்துக்கு மோடி வருகை: மண்டபம் முகாம் இறங்கு தளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் ஒத்திகை!

கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனை!!

time-read
1 min  |
April 01, 2025
“என்ன நீங்க... தா.மோ.அன்பரசனை பார்த்து பேசிட்டு இருக்கீங்க...' செல்வப்பெருந்தகையை பார்த்து கேள்வி கேட்ட அமைச்சர் கே.என்.நேரு
Malai Murasu

“என்ன நீங்க... தா.மோ.அன்பரசனை பார்த்து பேசிட்டு இருக்கீங்க...' செல்வப்பெருந்தகையை பார்த்து கேள்வி கேட்ட அமைச்சர் கே.என்.நேரு

சட்டசபையில் சிரிப்பலை

time-read
1 min  |
April 01, 2025
ராக்கெட் வேகத்தில் உச்சம்: தங்கம் விலை பவுன் ரூ.68 ஆயிரம் ஆனது!
Malai Murasu

ராக்கெட் வேகத்தில் உச்சம்: தங்கம் விலை பவுன் ரூ.68 ஆயிரம் ஆனது!

இன்றும் ரூ.480 அதிகரித்தது!!

time-read
1 min  |
April 01, 2025
அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா குறை கூறுவதா?
Malai Murasu

அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா குறை கூறுவதா?

மார்ட்டின் மகன் கடும் கண்டனம்

time-read
1 min  |
April 01, 2025
வெள்ளை மாளிகை தகவல்: இந்திய விவசாய பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிப்பு!
Malai Murasu

வெள்ளை மாளிகை தகவல்: இந்திய விவசாய பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிப்பு!

டிரம்ப் தீவிர ஆலோசனை!!

time-read
1 min  |
April 01, 2025