

Dinamani Chennai - February 23, 2025

Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $14.99
1 Jahr$149.99
$12/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr $33.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
February 23, 2025
ஹிந்தியை திணிக்கிறீர்கள்
ஹிந்தியைத் திணிக்கத்தான் தேசிய கல்விக் கொள்கை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

1 min
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் ஒப்புதல்
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நால்வரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.
1 min
மொழித் திணிப்பு எதுவும் இல்லை
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

1 min
எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு, போதைப் பொருள் கடத்தல்: பாகிஸ்தானிடம் இந்திய ராணுவம் கடும் எதிர்ப்பு
எல்லை தாண்டி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
1 min
மணிப்பூரில் 17 தீவிரவாதிகள் கைது
மணிப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் 17 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
1 min
செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி
30 மாவட்டத் தலைவர்கள் தில்லியில் முகாம்

2 mins
மாநகராட்சியில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சியில் பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப.வீரபாண்டியன் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
1 min
பள்ளியில் கீழே விழுந்து மாணவி உயிரிழப்பு
சென்னை கொளத்தூரில் பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்து காயமடைந்த மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
1 min
ரோடு ரோலர் மீது மாநகரப் பேருந்து மோதல்: 10 பயணிகள் பலத்த காயம்
எண்ணூரில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலர் மீது மாநகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு எதிர்பாராமல் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

1 min
அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து நோயாளி தற்கொலை செய்துகொண்டார்.
1 min
தமிழில் பேசுவதுதான் நமது அடையாளம்
விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம்

1 min
ரயில்வே ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர். எம்.யு) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினர் ஆய்வு
தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர்.

1 min
கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ ரயில் திட்டம்: விரிவான திட்ட அறிக்கை அரசுக்கு சமர்ப்பிப்பு
கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தமிழக அரசுக்கு சமர்ப்பித்துள்ளது.
1 min
தமிழும் சம்ஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்
தமிழும் சம்ஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியர் வ.சௌம்ய நாராயணன் தெரிவித்தார்.
1 min
குரூப் 2: இன்று பிரதான தேர்வின் இரண்டாவது தாள்
குரூப் 2 பிரதானத் தேர்வின் இரண்டாவது தாளான விரித்துரைக்கும் வகையிலான தேர்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min
தமிழ்நாட்டுக்கான நிதி உரிமையைத்தான் கோருகிறோம்
'தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய நிதி உரிமையைத்தான் மத்திய அரசிடம் கோருகிறோம். அதேவேளையில், மும்மொழிக் கொள்கையை எந்தக் காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
காசியில் தமிழக பெண் தொழில்முனைவோருடன் ஆளுநர் ரவி கலந்துரையாடல்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ் சங்கமம் 3.0 நிகழ்வில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் தொழில் முனைவோருடன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார்.

1 min
நாடாளுமன்றத்தில் மநீம குரல் ஒலிக்கப் போகிறது: கமல்ஹாசன்
நாடாளுமன்றத்தில் மக்கள் நீதி மய்யத்தின் குரல் நிகழாண்டும், சட்டப்பேரவையில் அடுத்த ஆண்டும் ஒலிக்கப் போவதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

1 min
சமயம் சார்ந்த நூல்களுக்கு சேக்கிழார் விருது
சமயம் சார்ந்த நூல்களுக்கு வழங்கப்படும் சேக்கிழார் விருதுக்கு ஏப். 15-ஆம் தேதிக்குள் நூல்களை அனுப்பி வைக்கலாம் என சேக்கிழார் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
1 min
சீமான் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
பாலியல் வன் கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அப்புகாரை தன்னிச்சையாக திரும்பப் பெற முடியாது எனக் கூறி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min
அமைச்சர் மீது சேறு வீச்சு: தேடப்பட்ட இளைஞர் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே வெள்ளப்பாதிப்பு பகுதிகளைப் பார்வையிடச் சென்ற அமைச்சர் க.பொன்முடி மீது சேறு வீசிய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min
மூணாறு சாலை விபத்து: உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம்
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min
28-இல் முதல்வர் பிறந்ததின பொதுக் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் வரும் பிப்.28-இல் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
1 min
இளம் விஞ்ஞானி திட்டம்: மாணவர்களுக்கு இஸ்ரோ அழைப்பு
இளம் விஞ்ஞானி திட்டத்தின் கீழ் விண்வெளி ஆய்வு பயிற்சி பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் வரும் 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
1 min
கல்வி நிதியை விடுவிக்க வலியுறுத்தி தொடர் போராட்டம்: திமுக மாணவரணி
கல்வி நிதியை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் இருவர் விடுதலை
ராமேசுவரம் மீனவர்கள் 2 பேரை தலா ரூ. 50 ஆயிரம் (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து, மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
அரசு உதவி வழக்குரைஞர் பணிக்கு இன்று மறுதேர்வு
அரசு உதவி வழக்குரைஞர் பணிக்கான மறுதேர்வு சனிக்கிழமை (பிப். 22) நடத்தப்படவுள்ளது.
1 min
லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் கைது
பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை
தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

1 min
சில எச்சரிக்கை மணிகள்!
நமது பிரச்னைகளைத் தாண்டி, சிறிய மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு, இறக்குமதி வரிகளால் ஏற்படும் பிரச்னைகளை இந்தியா முன்னெடுத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்க வேண்டும். இதன் வழியேதான் இந்தியா எப்போதுமே ஒரு தலைமைப் பண்போடு கூடிய உலக சக்தி என்பதை அனைத்து நாடுகளும் புரிந்துகொள்ள முடியும்.

3 mins
கற்றுக்கொள்வோம் எறும்புகளிடமிருந்து...!
இயற்கையில் எதுவுமே தன்னிச்சையாக இயங்குவதில்லை.
2 mins
தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப் போர் வந்துவிடக் கூடாது
12 காரணங்களைப் பட்டியலிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்

1 min
நாட்டின் ஒவ்வொரு துறையிலும் ஆற்றல் மிக்க தலைவர்கள் தேவை
இந்திய நலன்களை முன்னிறுத்தி, உலகளாவிய சிக்கல்கள் மற்றும் தேவைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல்மிக்க தலைவர்கள், நாட்டின் ஒவ்வொரு துறையிலும் தேவை என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

1 min
தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசின் துரோகம்
தமிழகத்துக்கான நிதியை விடுவிக்க மறுப்பது மத்திய அரசு இழைக்கும் துரோகமாகவே கருதப்படும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1 min
தமிழகத்துக்கு 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்: விரைவில் டெண்டர் தொடக்கம்
தமிழகத்தில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் (ஒப்பந்தப்புள்ளி) விடும்பணி ஒரு வாரத்துக்குள் தொடங்கவுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
தமிழ்நாட்டில் பிற மொழிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது
தமிழ்நாட்டில் பிற மொழிகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

1 min
ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கைது
உதகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
44,689 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு விழாவில் 44,689 பயனாளிகளுக்கு ரூ.386.92 கோடி மதிப்பீட்டிலான நலத் திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

1 min
முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து ரூ. 4.75-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
1 min
பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விருது: ரூ.1.72 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் கல்வி, இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காமராஜர் விருதுக்கான பரிசுத்தொகை வழங்க ரூ.1.72 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min
காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடுகளை புதுப்பிக்க மார்ச் 1 முதல் சிறப்பு முகாம்
காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை மார்ச் 1 முதல் மே 31 வரை நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் புதுப்பித்துக்கொள்ளலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
1 min
கனியாமூர் பள்ளி வன்முறை வழக்கு; விழுப்புரம் இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் 37 பேர் ஆஜர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறை வழக்கு தொடர்பாக, விழுப்புரத்தில் உள்ள இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் 37 சிறார்கள் வெள்ளிக்கிழமை ஆஜராகினர்.
1 min
தமிழ்நாட்டில் மட்டுமே பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி
இந்தியாவின் பிற மாநிலங்களில் தலைநகரில் மட்டுமே தொழில் வளர்ச்சி இருக்கும் நிலையில், தமிழகத்தில் மட்டுமே பரவலாக்கப்பட்ட தொழில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

1 min
அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது
தொழிலதிபர் அதானி விவகாரம் தனிப்பட்டது அல்ல; தேசத்தைப் பற்றியது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 min
தில்லியில் பாஜகவின் ‘ஆதரவு' அணியாக செயல்பட்டது காங்கிரஸ்
தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவின் ‘ஆதரவு’ அணியாக (பி டீம்) காங்கிரஸ் செயல்பட்டது என்று அக்கட்சி எம்.பி. ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார்.

1 min
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா
தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி (78) வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

1 min
ரூ.2,500 நிதி உதவித் திட்டம்: முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்காதது ஏன்?
தில்லி அரசு அதன் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் நகரப் பெண்களுக்கு ரூ.2,500 நிதி உதவி வழங்கும் திட்டத்தை ஏன் நிறைவேற்றவில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், கால்காஜி தொகுதி எம்எல்ஏவுமான அதிஷி வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min
சர்வதேச பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் ஜி20-க்கு முக்கியப் பங்கு
சர்வதேச புவிஅரசியலில் நிகழும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஒருமித்த கருத்துகளை ஜி20 அமைப்பு தெரிவிப்பது மிக அவசியம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min
பிபிசிக்கு ரூ.3.44 கோடி அபராதம்
அந்நிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) விதிமுறைகளை மீறியதாக பிபிசி செய்தி நிறுவனத்தின் இந்திய கிளைக்கு அமலாக்கத் துறை ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது.
1 min
கணவர் குடும்பம் மீது வன்கொடுமை குற்றச்சாட்டைப் பதிய வரதட்சிணை முன்நிபந்தனை அல்ல: உச்சநீதிமன்றம்
'கணவர் அல்லது அவரின் குடும்பத்தினருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டப் (ஐபிசி) பிரிவு 498ஏ பிரிவின் கீழ் வன்கொடுமை குற்றச்சாட்டை பதிவு செய்ய, வரதட்சிணை கொடுமை என்பது ஒரு முன்நிபந்தனையாக இருக்க வேண்டிய அவசியமில்லை' என்று உச்சநீதிமன்றம் கூறியது.
1 min
எம்பிபிஎஸ் படிக்க இரு கைகளும் அவசியம் என்பது முரண்பாடானது: உச்சநீதிமன்றம்
இளநிலை மருத்துவப் படிப்பை (எம்பிபிஎஸ்) குறிப்பிட்ட மாற்றுத்திறன் மாணவர்கள் மேற்கொள்ள இரு கைகளின் செயல்பாடு அவசியம் என்ற தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல் முற்றிலும் முரண்பாடானது, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு எதிரான பாகுபாட்டை காட்டுவதாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
1 min
வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த அமெரிக்க நிதி; இந்தியா கவலை
இந்தியாவில் வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்த அமெரிக்கா நிதியளித்ததாக வெளியான தகவல் கவலையளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
மொழி ரீதியிலான பிரிவினை முயற்சிகளைப் புறந்தள்ள வேண்டும்
மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
1 min
வேளாண்மை வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
வேளாண் துறை வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் கேட்டுக் கொண்டார்.

1 min
பிகாரில் 10-ஆம் வகுப்பு மாணவர் சுட்டுக் கொலை; சக மாணவர் கைது
பிகாரின் ரோத் தாஸ் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒரு மாணவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சக மாணவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
எல்லைப் படைகளுக்கு இடையே தொடர்பை மேம்படுத்த புதிய முன்னெடுப்பு: இந்தியா-வங்கதேசம் முடிவு
இருநாட்டு எல்லைப் படைகளின் துணை கமாண்டர்களுக்கு இடையே தொலைத்தொடர்பை மேம்படுத்த புதிய முன்னெடுப்பை தொடங்க இந்தியாவும் வங்கதேசமும் முடிவு செய்துள்ளது.

1 min
மாட்டிறைச்சி வழக்கு: அஸ்ஸாம் அரசு மீது உச்சநீதிமன்றம் சாடல்
அஸ்ஸாம் மாநிலத்தில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற நபருக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 'இது போன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை விடுத்து, மக்களுக்கு நலன் அளிக்கும் சிறந்த விஷயங்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும்' என்று அறிவுரை கூறியது.

1 min
மகா கும்பமேளாவால் உயரும் உ.பி. பொருளாதாரம்
உத்தர பிரதேசத்தின் பொருளாதாரத்தில் ரூ.3 லட்சம் கோடி உயர்வதற்கு மகா கும்பமேளா உதவும் என்று அந்த மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

1 min
சஜ்ஜன் குமாருக்கு பிப்.25-இல் தண்டனை அறிவிப்பு
கடந்த 1984-இல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமாருக்கான தண்டனையை தில்லி சிறப்பு நீதிமன்றம் பிப்.25-ஆம் தேதி அறிவிக்கவுள்ளது.
1 min
அனைத்து மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றுகிறது மத்திய அரசு
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

1 min
பெங்களூருக்கு 10-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி 2-0 கோல் கணக்கில் நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min
அல்கராஸுக்கு அதிர்ச்சி; லெஹெக்கா வெற்றி
கத்தார் ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min
அயர்லாந்தை தோற்கடித்த இந்தியா
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஹெச்) புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்தியா 3-1 கோல் கணக்கில் அயர்லாந்தை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min
டைம் இதழின் சிறந்த பெண்கள் பட்டியலில் அஸ்ஸாம் வனவிலங்கு ஆர்வலர்!
அமெரிக்காவின் டைம் வார இதழின் 2025-ஆம் ஆண்டின் சிறந்த பெண்கள் பட்டியலில் அஸ்ஸாமைச் சேர்ந்த வனவிலங்கு உயிரியலாளரான பூர்ணிமா தேவி பர்மன் (45) இடம்பெற்றுள்ளார்.

1 min
பெங்களூரை வீழ்த்தியது மும்பை
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 7-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min
ஆப்கானிஸ்தானை வென்றது தென்னாப்பிரிக்கா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 3-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

1 min
இஸ்ரேல் பெண்ணுக்கு பதிலாக காஸா பெண்ணின் உடல் ஒப்படைப்பு
இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஷிரி பிபாஸ் என்று கூறி, ஹமாஸ் அமைப்பினர் வியாழக்கிழமை ஒப்படைத்த சடலம் அவருடையது இல்லை என்று இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.

2 mins
உயர்வைக் கண்ட உள்நாட்டு விமானப் போக்குவரத்து
இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கிய உள்நாட்டு போக்குவரத்து சேவை கடந்த ஜனவரி மாதத்தில் 14.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min
இந்திய ஜவுளி ஏற்றுமதி 14% அதிகரிப்பு
இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 13.88 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min
எஃப்பிஐ இயக்குநர் காஷ் படேல்
அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறையான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1 min
பிரேஸில்: பேருந்து விபத்தில் 12 மாணவர்கள் உயிரிழப்பு
பிரேஸிலில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்று கொண்டிருந்த பேருந்து லாரியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 12 மாணவர்கள் உயிரிழந்தனர்.

1 min
ருவாண்டா தலைமைத் தளபதி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் தீவிர தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் எம்23 கிளர்ச்சிப் படையினருக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தில், ருவாண்டா ராணுவ தலைமைத் தளபதி ஜேம்ஸ் கபோரெபே (படம்) மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

1 min
எம்மொழி திணிப்பையும் இருமொழிக் கொள்கையால் வெல்வோம்
எம்மொழியை எவர் திணித்தாலும், இருமொழிக் கொள்கையால் அதை வெல்வோம் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
கடலூரில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
கடலூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு சாலைவழி நடைப்பயணமாக சென்ற (ரோடு ஷோ) முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.

1 min
திரைப்படத் துறையினருக்கான 90 ஏக்கர் நில குத்தகை அரசாணை புதுப்பிப்பு
குடியிருப்புகளை கட்டலாம் என துணை முதல்வர் உதயநிதி தகவல்

1 min
உலகெங்கும் பரவட்டும் உயர்தனிச் செம்மொழி: முதல்வர்
'உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
தமிழை வீழ்த்தும் சூழ்ச்சிகளை தமிழ்நாடு வீழ்த்தும்: துணை முதல்வர்
தமிழை வீழ்த்தும் சூழ்ச்சிகளை தமிழ்நாடு வீழ்த்தும் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

1 min
தமிழ் மொழியைப் போற்றுவோம்
'நமது தமிழ் மொழியைப் போற்றுவோம்' என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital