2024 பாராளுமன்றத் தேர்தல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடக்கும் ஃபைனல் மேட்ச் என்றால் விரைவில் நடக்க இருக்கும் 5 மாநிலத் தேர்தல் பாஜகவுக்கும் ‘இண்டியா’ கூட்டணிக்கும் இடையேயான செமி ஃபைனல் என்று களத்தில் கச்சை கட்டுகிறார்கள் இரு தரப்பினரும்.
இந்நிலையில்தான் தேர்தலைக் குறிவைத்து பாஜக ஆதரவு சக்திகள் திரைப்படங்களைத் தயாரித்து வருவது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அவற்றில் சில...
ரசாக்கர்
ரசாக்கர்கள் என்பவர்கள் ஒருகாலத்தில் ஐதராபாத் சமஸ்தானத்தை ஆண்ட நிஜாம்கள் ஆட்சியில் இருந்த ஒரு தனி இஸ்லாமிய அமைப்பினர். அன்றைய ஐதராபாத் என்பது இன்றைய தெலுங்கானா, மகாராஷ்டிரத்தின் ஒரு பகுதி மற்றும் கர்நாடகாவின் ஒரு பகுதியை உள்ளடக்கியது.
நிஜாம் ஆட்சி எனபது முகலாயர்கள் காலத்திலேயே ஏற்பட்ட ஒரு மன்னர் ஆட்சி முறை.
இன்றைக்கும் ஐதராபாத்தில் ஒரு கலவையான கலாசாரத்தைக் காணலாம். உதாரணமாக சென்னையில் பிரபலமான ஐதராபாத் பிரியாணிகூட இன்றைய ஐதராபாத்தில் ஹாட் உணவுதான்.
ஐதராபாத் கலாசாரத்தை இந்து என்பதா அல்லது இஸ்லாமிய முறை என்பதா என்று பிரித்து அறியமுடியாமல் பலர் இன்றும் திணறலாம். ஆனாலும் 1947ல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவு ஏற்பட்டபோது ஐதராபாத் சமஸ்தானம், பாகிஸ்தான் பக்கம் நிற்காமலும் இந்தியா பக்கம் நிற்காமலும் தனியாக ஆட்சி புரியப்போவதாக பிரகடனப்படுத்தியது.
ஐதராபாத்தில் முஸ்லிம்கள் மைனாரிட்டி. இந்துக்கள்தான் பெரும்பான்மை. இருந்தாலும் இந்திய சுதந்திரக் காலக்கட்டம் வரைக்கும் நிஜாம் ஆட்சிக்காலத்தில் ஒரு கலப்பு கலாசார மாநிலமாக அமைதியுடன்தான் திகழ்ந்தது.
இந்நிலையில், அன்றைய மாநிலங்கள் மற்றும் சமஸ்தானங்களை இந்தியாவுடன் சேர்க்க பாடுபட்ட சர்தார் வல்லபாய் பட்டேல், நிஜாமின் சுயாட்சிக்கு செவி சாய்க்கவில்லை. நிஜாமும் கொஞ்சம் கெத்து காட்டினார்.
இந்த வேளையில்தான் ஒரு தனியான சமூக, மத இயக்கமாக இருந்த ரசாக்கர்கள் நிஜாமின் சுயாட்சி கனவுக்கு எண்ணெய் வார்க்க ஆரம்பித்தார்கள்.
Esta historia es de la edición 06-10-2023 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 06-10-2023 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.
கோலம்
‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.
தேவரா பாகம் ஒன்று
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.
யோலோ
உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும் மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.