செங்கல்பட்டு To தாதா சாகேப் பால்கே!
Kungumam|13-10-2023
இந்தியளவில் திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருதை இந்த ஆண்டு பாலிவுட் மூத்த நடிகை வஹீதா ரஹ்மான் பெறுகிறார். 1960 - 70களில் பாலிவுட் வெள்ளித்திரையை ஆண்ட வஹீதா ரஹ்மான், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர் என்பது சுவாரஸ்யமான விஷயம்!
ஜான்சி
செங்கல்பட்டு To தாதா சாகேப் பால்கே!

செங்கல்பட்டு மாவட்டத்தில் வசித்த தக்னி முஸ்லிம் மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள் முகமது அப்துர் ரஹ்மான் - மும்தாஜ் பேகம் தம்பதி. அப்துர் ரஹ்மான், அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியவர்.

இந்த தம்பதிக்கு நான்கு மகள்கள். இவர்களில் கடைக்குட்டிதான் வஹீதா ரஹ்மான். 1938 பிப்ரவரி 3 அன்று பிறந்தார். சிறு வயதாக இருக்கும் போதே, இவரும் இவரது சகோதரிகளும் சென்னையில் பரத நாட்டியம் பயின்றனர்.

இப்படி நாட்டியம் பயின்றாலும் உண்மையில் வஹீதாவுக்கு மருத்துவராக வேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், காலம் இவரை நடிகையாக அழகு பார்த்தது.குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வஹீதா வாழ்ந்து வந்தபோது ஒருநாள் இடி இறங்கியது.

ஆம். வஹீதாவின் இளமைக் காலத்திலேயே அவரது தந்தை அப்துர் ரஹ்மான் திடீரென்று காலமானார். விளைவு, குடும்பம் நிலைகுலைந்தது. அம்மாவின் உடல்நிலை சரியில்லாமல் போனது. போதும் போதாததற்கு குடும்பத்தின் பொருளாதார நிலையும் கவலைக்கிடமானது.

இச்சூழலில் தனது கனவான மருத்துவர் ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கற்றுக்கொண்ட பரதம் துணையுடன் சினிமாவில் நடனக் கலைஞராக நுழைந்தார் வஹீதா ரஹ்மான்.

1955ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஜெய்சிம்மா’ படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதே ஆண்டு தெலுங்கில் வெளியான அக்கினேனி நாகேஸ்வர ராவின் ‘ரோஜுலு மாராயி’ (Rojulu Marayi) படத்தில் ஒரு நாட்டுப்புற பாடலில் மட்டும் நடனமாடினார். தொடர்ந்து தமிழில் எம்ஜிஆர், பி. பானுமதி நடிப்பில் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ (1956) திரைப்படத்திலும் நடித்தார்.

இக்காலத்தில்தான் தற்செயலாக, இந்தி திரைப்பட இயக்குநரும் தயாரிப்பாளருமான குருதத் பார்வையில் வஹீதா விழுந்தார்.அதன்பிறகு இவரது வாழ்க்கை, இவரே எதிர்பார்க்காத அளவுக்கு மாறியது.உண்மையில் இதற்காக ஒரு எருமை மாட்டுக்குத்தான் வஹீதா நன்றி சொல்ல வேண்டும்!ஆம். குருதத் வாழ்க்கையில் ஒரு எருமை மாடு குறுக்கிட்டதன் வாயிலாகத்தான், அவர் வஹீதா ரஹ்மானைக் கண்டடைந்தார்.

Esta historia es de la edición 13-10-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 13-10-2023 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
பேக் இன் ஆக்ஷன்
Kungumam

பேக் இன் ஆக்ஷன்

‘நெட்பிளிக்ஸின்' டாப் டிரெண் டிங் பட்டியலில் இடம்பிடித் திருக்கும் ஆங்கிலப் படம், 'பேக் இன் ஆக்ஷன். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.

time-read
1 min  |
31-01-2025
நிலத்தடி நீரில் நைட்ரேட்.?
Kungumam

நிலத்தடி நீரில் நைட்ரேட்.?

அப்படித்தான் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது ஆண்ட றிக்கை.

time-read
2 minutos  |
31-01-2025
ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!
Kungumam

ஒரு கொலை... 25 பேர்...திக் திக் நிமிடங்கள்!

முழுக் கதையையும் டிரெய்லரிலேயே வெளிப்படையாகச் சொல்லி இருக்கீங்களே?

time-read
1 min  |
31-01-2025
நியூ இயர் டைரி!
Kungumam

நியூ இயர் டைரி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புத்தாண்டு ஸ்பெஷல், பத்தாண்டு 'அன்று பலர் புதிய முடிவுகள், புத்தாண்டு சபதம் எடுப்பதுண்டு. அதை அந்த ஆண்டு முழுவதும் ஞாபகத்தில் வைத்து லட்சியப் பயணத்தைத் தொடர்வார்கள்.

time-read
1 min  |
31-01-2025
மிஸ் இந்தியா வணங்கான்!
Kungumam

மிஸ் இந்தியா வணங்கான்!

தமிழ் சினிமாவின் ஆளுமை இயக்குநர் பாலா. இவர் பேசியதைவிட இவர் படங்கள்தான் அதிகம் பேசும். இவருடைய ‘சேது', 'பிதா மகன்', 'நான் கடவுள்' என ஒவ்வொரு படமும் சமூக அவலங்களையும், விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையையும் மிக யதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டியவை.

time-read
2 minutos  |
31-01-2025
இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!
Kungumam

இந்த பள்ளியில் படிக்க வருடத்துக்கு 1.15 ஃபீஸ்!

பொதுவாக ஒரு நல்ல பள்ளியில் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்புவார்கள். அவர்கள் ஏழையாக இருந்தாலும் சரி, பெரும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் சரி இந்த விருப்பம் மாறாது.

time-read
2 minutos  |
31-01-2025
74 வயது மாணவி!
Kungumam

74 வயது மாணவி!

நமக்கு விருப்பமான ஒன்றைச் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

time-read
2 minutos  |
31-01-2025
ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்
Kungumam

ஆள் பாதி டிசைனர் சகோதரிகள்

\"நானும் என் தங்கையும் சேர்ந்துதான் இந்த பொட்டிக்கினை ஒன்பது வருஷம் முன்பு துவங்கி னோம்.

time-read
2 minutos  |
31-01-2025
ரைசிங் ஸ்டார்...
Kungumam

ரைசிங் ஸ்டார்...

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி என்றதும் அதிரடி வீராங்கனை 'கள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமீமா ஆகியோரே நம் நினைவுக்கு வந்து போகும் பெயர்க ளாக இருக்கும்.

time-read
1 min  |
31-01-2025
கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!
Kungumam

கிராம மக்கள் கைகோர்த்து உருவாக்கிய பணக்காரர்!

சீனாவைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர், ரிச்சர்ட் லியூ கியாங்டாங்.

time-read
1 min  |
31-01-2025