‘‘இதோ வரேன்மா...’’ என்றபடி தோட்டத்தில் பறித்த மல்லிகைப் பூக்களை வாழைநாரில் சரமாய்த் தொடுத்து எடுத்துக்கொண்டு ஓடி இரண்டு முழம் அளவுக்கு அழகாய்த் தொடுத்திருந்த பூச்சரத்தை அம்மாவிடம் காட்டிச்சிரித்தாள்.
‘‘அடடே! அழகா கட்டியிருக்கியேடா...’’ என்ற வேதவல்லியிடம், ‘‘கொஞ்சம் இருமா...’’ என்று சொல்லிக்கொண்டே ஒரு சிறிய நாற்காலியை இழுத்துப் போட்டு சுவரில் மாட்டியிருந்த பாட்டி லட்சுமியின் புகைப்படத்திற்கு அந்த பூச்சரத்தை மாலையாகத் தொங்கவிட்டாள்.
வேதவல்லியும் தனது அம்மா லட்சுமியின் புகைப்படத்தின் முன் நின்று கண்கள் கலங்க கும்பிட்டுவிட்டு ‘‘வா கண்ணு போலாம்...’’ என்று சீதாவை அழைத்துக் கொண்டு பூக்கூடையைத் தூக்கி தலையில் வைத்துக் கொண்டு கிளம்பினாள்.
சீதாவும் வீட்டைப் பூட்டிக்கொண்டு உதிரிப்பூக்கள் நிறைந்த இரண்டு சிறிய பைகளை எடுத்துக் கொண்டு கொலுசு அணிந்த தேவதையாக வேதவல்லியின் பின்னால் நடந்தாள். சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் சிவன்கோயில் வாசலில் பூக்கடை போட்டிருந்தாள் வேதவல்லி.சீதாவும் பள்ளி விட்டு வந்ததும் வேதவல்லிக்குத் துணையாக பூக்கடையில் இருப்பாள்.அம்மா பூ கட்டும் அழகை ரசித்துப் பார்ப்பாள்.
பிறகு அவளே பூ கட்டவும் ஆரம்பித்து விட்டாள். இப்பொழுது அம்மாவை விட அழகாகவே பூக்களை கட்டவும் தேறிவிட்டாள்.சீதா பிறந்த ஆறு மாதத்திலேயே அவளது அப்பா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். வேதவல்லியின் அம்மா லட்சுமிதான் தூணாக இருந்து குடும்பத்தை காத்தாள். வேதவல்லி பூக்கடைக்குச் சென்ற பிறகு சீதாவை லட்சுமி பாட்டிதான் கண் போல பார்த்துக் கொண்டாள்.
அதனால் சீதாவுக்கு பாட்டிதான் எல்லாம். தினமும் காலையில் நாலு மணிக்கு எல்லாம் எழுந்து பூக்களைப் பறித்துத் தயார் செய்து ஐந்து மணிக்கு எல்லாம் கிளம்பி விடுவாள் வேதவல்லி.
அதன் பிறகு காலை உணவு தயார் செய்து சீதாவை பள்ளிக்கு அனுப்பும் வேலை லட்சுமி பாட்டியுடையது. பத்து மணிக்கு வேதவல்லி வீட்டிற்கு வருவாள். மீண்டும் மாலை நாலு மணிக்கு பூக்களுடன் கோயிலுக்குக் கிளம்பிவிடுவாள்.
Esta historia es de la edición 13-10-2023 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición 13-10-2023 de Kungumam.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!