மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!
Kungumam|07-06-2024
சிறப்புக் குழந்தைகள் என்றாலே துறுதுறுவென ஆர்ப்பாட்டம் செய்துகொண்டும், கூச்சலிட்டபடியும் இருப்பார்கள் என்ற நினைப்பே நம்மில் பலருக்கும் இருக்கும்.
மிருதங்கத்தில் கலக்கும் ஹைபர் ஆக்டிவ் மாற்றுத்திறனாளி இளைஞர்!

ஆனால், சிறப்புக் குழந்தைகளோ இன்று பலவற்றில் சாதிக்கும் குழந்தைகளாக மாறிவருகின்றனர். 

நீச்சல், இசை, விளையாட்டு எனத் தங்களுக்குப் பிடித்தமான விஷயங்களில் கவனம் செலுத்தி, அதில் சாதித்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகின்றனர். அந்த வகையில் மிருதங்கம் மற்றும் டோலக் தாளக் கருவிகளை வாசித்து கலக்குகிறார் சென்னையைச் சேர்ந்த சிறப்பு மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞரான ஸ்ரீவெங்கடேஷ்.

சமீபத்தில் அன்னையர் தினத்தன்று கவர்னர் மாளிகையில் நடந்த இசை நிகழ்ச்சியில் மிருதங்கம் வாசித்து பாராட்டையும் பரிசையும் பெற்றுள்ளார். இடது கண்ணில் சிறிதளவு மட்டுமே பார்வை கொண்ட ஹைபர்ஆக்டிவ் இளைஞரான ஸ்ரீவெங்கடேஷின் இந்த அசாத்திய திறமை வியக்க வைக்கிறது.  

 ‘‘ராஜ்பவன்ல இசை நிகழ்ச்சி செஞ்சது சிறப்பாக இருந்தது. கவர்னர் எங்களப் பாராட்டினார். என்கூட அண்ணன்கள் நிறைய பேர் சேர்ந்து வாசிச்சாங்க. நான் மிருதங்கமும், டோலக்கும் வாசிச்சேன்...’’ என உற்சாகமாகச் சொல்லும் ஸ்ரீவெங்கடேஷின் தலையைக் கோதியபடி, பேச ஆரம்பித்தார் அவரின் தாய் தமிழ்ச்செல்வி.

‘‘எங்களுக்கு ரெண்டு பசங்க. மூத்தவன் ஸ்ரீவெங்கடேஷ். சின்னவன் குமரன். என் கணவர் மணி, திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை செய்றார். அதனால், இப்ப அங்க வசிக்கிறோம். இவனுக்கு நிகழ்ச்சி இருந்தால் நான் அழைச்சிட்டு வருவேன். இல்லனா அவ்வப்போது சென்னையில் அம்மா வீட்டுக்குக் கூட்டிட்டு வருவேன்.  ஸ்ரீவெங்கடேஷ் பிறந்ததுமே உடல்ல பிரச்னைகள் இருந்தது. 

அப்புறம், கண்கள்ல வெள்ளையாக இருக்குனு சொன்னாங்க. அதனால், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைச்சிட்டு போனோம். எட்டு மாசத்துல புரை வளர்ந்திருக்குனு ஆபரேஷன் செய்தாங்க. அதன்பின்பும் கருவிழி எதுவும் தெரியல. அதனால், இன்னும் சில ஆபரேஷன்கள் செய்தாங்க.

பிறகு கோவையிலுள்ள தனியார் கண் மருத்துவமனையில் பரிசோதிச்சோம். அடுத்ததாக, சென்னை தனியார் கண் மருத்துவமனையில் மாற்று அறுவை சிகிச்சை செய்தோம். ஆனால், அது ஃபெயிலியர் ஆகிடுச்சு. மூணு மாசத்துல கண்ல சீழ் பிடிச்சிடுச்சு. அதனால், நரம்புகளை அகற்றினாங்க. பிறகு, வலது கண்ல பார்வை சுத்தமாக போயிடுச்சு.

Esta historia es de la edición 07-06-2024 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición 07-06-2024 de Kungumam.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE KUNGUMAMVer todo
சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்
Kungumam

சென்னை வெள்ளத்தை தடுக்கும் சதுப்பு நிலங்கள்

‘என்னது கெணத்த காணோமா...’ போல சென்னையில் இருந்த 85 சதவீத சதுப்பு நிலங்கள் மாயமாக மறைந்திருப்பதாக வந்த அண்மைய செய்தி தீபாவளி அதிர்ச்சியாக இருந்தது.

time-read
2 minutos  |
22-11-2024
அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!
Kungumam

அமெரிக்க துணை அதிபர் இந்தியாவின் மருமகன்!

யெஸ். பிரிக்க முடியாத விஷயங்களில் ஒன்றாக அமெரிக்க அரசியலில் இந்தியர்களின் பங்கு மாறி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் தோற்றிருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அவருக்கு பதில் துணை அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார் ஜேடி வான்ஸ். இவர் இந்தியாவின் மருமகன்!

time-read
2 minutos  |
22-11-2024
அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்
Kungumam

அபோகலிப்ஸ் இஸட் த பிகினிங் ஆஃப் தி எண்ட்

‘அமேசான் ப்ரைமி’ல் நேரடியாக வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் ஸ்பானிஷ் மொழிப்படம் இது. ஒரு சோலார் பவர் நிறுவனத்தை நடத்தி வருகிறார், வழக்கறிஞரான மேனல். ஒரு கிறிஸ்துமஸ் மாலைப் பொழுதில் உறவினர் வீட்டுக்குப் போய்விட்டு, திரும்பும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மேனலின் மனைவி இறந்துவிடுகிறார்.

time-read
1 min  |
22-11-2024
கோலம்
Kungumam

கோலம்

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகி, பார்வைகளை அள்ளிக்கொண்டிருக்கும் மலையாளப்படம், ‘கோலம்’. தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது.ஒரு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கிறார் ஐசக் ஜான்.

time-read
1 min  |
22-11-2024
தேவரா பாகம் ஒன்று
Kungumam

தேவரா பாகம் ஒன்று

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக வசூலை அள்ளிய தெலுங்குப்படம், ‘தேவரா: பாகம் ஒன்று’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழில் காணக்கிடைக்கிறது. இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க ஒரு கும்பல் திட்டமிடுகிறது.

time-read
1 min  |
22-11-2024
யோலோ
Kungumam

யோலோ

உலகளவில் 2024ம் வருடத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது, ‘யோலோ’ எனும் மாண்டரின் மொழிப்படம். சீனாவில் முதல் இடம்.

time-read
1 min  |
22-11-2024
திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்
Kungumam

திரில்லர் + அமானுஷ்யம் = ககன மார்கன்

‘‘‘கவனக் குளிகை கொண்டு அதனாலே ககனமார்க்கந் தனிலே அகனமாய்ச்சென்று தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்குப் போய் குதூகலித்தேன்’ - ‘மாயா மச்சிந்திரா’ என்று செல்லமாக அழைக்கப்படும்  மச்சேந்திர சித்தர் எழுதிய பாடல் இது. அந்தப் பாடலில் இருந்துதான் இந்த ‘ககன மார்கன் ’ங்கிற பெயர்...’’ எனத் தொடங்கினார் இயக்குநர் மற்றும் எடிட்டர் லியோ ஜான் பால்.

time-read
2 minutos  |
22-11-2024
ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா
Kungumam

ரசிகர்கள் எப்போதும் ஸ்மார்ட்! சொல்கிறார் நவீன் சந்திரா

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக இருப்பவர் நவீன் சந்திரா.

time-read
2 minutos  |
22-11-2024
இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!
Kungumam

இரண்டு நான்கு கேட்டால் கிடைக்கும்!

ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்ராஜ், கோலிவுட் முதல் பாலிவுட் வரை புகழ் பெற்றவர். ஆனால், எளிமையாக, யதார்த்தமாகப் பழகக்கூடியவர். அவருடைய மென்மையான வார்த்தைகள் கடினமான மனிதர்களையும் கரைய வைத்துவிடும்.

time-read
2 minutos  |
22-11-2024
மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..
Kungumam

மணிரத்னம் என்னைப் பாராட்டவே இல்லை..

‘பொன்னியின் செல்வன்’ பூங்குழலி கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமாட்டார்கள். அகமும் முகமும் மகிழ்ச்சி கொப்பளிக்க அதில் நடித்தவர் ஐஸ்வர்யா லட்சுமி.

time-read
2 minutos  |
22-11-2024