'கோட்' திரைப்படம் பெரிய அளவில் வசூலைக் குவித்திருக்கிறது. திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே படத்தைப் பற்றி பெரிய பில்ட்அப் கொடுத்து, படத்தை தயாரித்த கல்பாத்தி அகோரம் கம்பெனி 600 கோடிக்கு படத்தை விற்பனை செய்திருக்கிறது.
தமிழ் திரையுலகின் அசைக்கமுடியாத ஒரு நடிகராக வலம்வரும் விஜய், தமிழகம் மட்டுமன்றி, மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஈர்த்து வைத்துள்ளார். நீண்ட நாட்களாக அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தாலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியை தொடங்கினார். நடிகர் விஜய் கட்சி அறிவிப்பை வெளியிட்ட நாளிலிருந்து ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களின் கவனமும் அவர் மீது திரும்பியது. அரசியலில் ஈடுபட்டு வரும் பல கட்சிகள் விஜய் நமக்கு ஆதரவளிப்பாரா என்று எதிர்பார்த்திருந்த நிலையில்... அவரே ஒரு கட்சியை ஆரம்பித்திருப்பது பெரும் ஆச்சரியத்திற்கு உரியதாக மாறிவிட்டது.
அவர் கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே மாநில அளவிலான மாபெரும் மாநாட்டை நடத்த திட்டமிட்டு, அதற்கான ஆயத்த பணிகளில் இறங்கியது... அரசியல் கட்சி தலைவர்களுக்கு அடுத்த அதிர்ச்சியைத் தந்தது. சமீப காலமாக விஜய் எந்த மேடையில் பேசினாலும், மாநில உரிமைகள் குறித்தும், நீட் தேர்வு குறித்தும், வருகின்ற 2026 தேர்தலை நாம் எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பது குறித்தும் தான் பேசுகிறார்.
இந்நிலையில், தன்னுடைய முதல் மாநாட்டை திருச்சியில் நடத்தலாம் எனத் திட்டமிட்ட விஜய், மதுரை, சேலம் என பல மாவட்டங்களில் மாநாடு நடத்துவதற்கான மைதானம் கிடைக்கவில்லை. இறுதியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்து செப். 23 ஆம் தேதி மாநாடு நடைபெறும் என்று தேதியும் அறிவிக்கப்பட்டது.
இந்த மாநாட்டின் பணிகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னின்று செய்துவரும் நிலையில், மாநாட்டிற்கான அனுமதி பெறவேண்டி விழுப்புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.
Esta historia es de la edición September 07 - 10, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 07 - 10, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இறுதிச்சுற்று! தப்பியோடிய கஸ்தூரிக்கு ஜாமீன் மறுப்பு!
நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியது.
வழக்கறிஞர் வேஷத்தில் தப்பமுயன்ற ஓம்கார் பாலாஜி! -அதிரடி கைது!
இந்து மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் அர்ஜூன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜி, ஈஷா அமைப்புக்கு எதிராக நக்கீரன் வெளியிட்டிருந்த கட்டுரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் ஆசிரியரை தரக்குறைவாகப் பேசியிருந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார்.
அண்டப்புளுகன் ஐக்கி...
\"அன்று அழைக்காத ஐ.நா.சபையில் கலந்துகொண்டதாக 'டொக்கு' வாங்கியது நித்தியானந்தா டீம். இன்றோ சரிந்துகொண்டிருக்கும் தன்னுடைய இமேஜை சரிசெய்யும் விதமாக பணம் கொடுத்து அஜர்பைஜானில் நடந்த காலநிலை மாநாட்டில் வாண்ட்டடாக வண்டி ஏறி...
அதிகாரிகளின் சதுரங்க வேட்டை! -முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா?
தொழில் வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாட்டை முன்னிறுத்தும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக இறங்கியிருக்க, சில முக்கிய அதிகாரிகளோ, இங்கு தொழில் துவங்க வரும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கோர்த்து காசு பார்க்கத் துவங்கியிருப்பதாகக் கசியும் தகவல்கள், கோட்டை வட்டாரத்தில் புயலைக் கிளப்பத் துவங்கியிருக்கின்றன.
தொடரும் தாதாயிசம்! மன்னார்குடி அவலம்!
மன்னார்குடியில் தேர்தல் பகையால் அ.தி.மு.க. நிர்வாகியை தி.மு.க. கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களோடு சென்று வெட்டிய விவகாரம் பரபரப்பாகிக் கிடக்கிறது.
ஆரம்ப காலத்தில் என்னை நாடிவந்த பதவிகள்! - டைரக்டர்-ரைட்டர் வி.சி. குகநாதன்
பல படங்களையும், சில நாடகங்களையும் எழுதுவதோடு தயாரிப்பிலும் ஓய்வற்று உழைத்துக்கொண்டு, ஏவி.எம். கதை இலாகா விலும் நான் பணியாற்றி வந்த காலத்திலே என் வண்டியை நானே ஓட்டிப்போவதே வழக்கம். கம்பெனி கார்களை என் டிரைவர்கள் ஓட்டுவார்கள். எனது கம்பெனியில் 60 திரைப்படப் பணியாளர்களுக்கு 69, 70, 71, 72-ஆம் ஆண்டுகளில் மாதச் சம்பளம் கொடுத்து அவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தேன்.
மாணவிகளுக்கு மது! பாலியல் சீண்டல்! போக்சோவில் ஆசிரியர்!
\"சரக்கு அடிக்குறதில அவதான் எக்ஸ்பர்ட். அப்படியே சாப்பிடுவா அவ மட்டும் என்னவாம்?\" கிண்டலும் கேலியுமாக 9ஆம் வகுப்பு மாணவிகள் பேசிக்கொண்டது பள்ளி வளாகத்தைத் தாண்டி வெளியில் உலாவ, \"மாணவிகளுக்கு மதுவா?\" என உடன்குடி தாலுகாவே களேபரமானது. இதன் தொடர்ச்சியாகக் கட்டாய விடுப்பில் உடற்கல்வி அசிரியர் செல்ல, பெற்றோர்கள் தொடர்ந்து போராடியிருக்கின்றனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளித் தாளாளரையும் கைது செய்துள்ளது திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்துறை.
எடப்பாடியிடம் டீல் பேசும் பா.ஜ.க.!
ஹலோ தலைவரே, தேர்தலைக் குறிவைத்து தி.மு.க. அரசு விறுவிறுப்பாகத் திட்டங்களைத் தயாரித்து வருகிறதே?
டாக்டருக்கு கத்திக்குத்து! அரசுக்கு எதிராக மருத்துவர்கள்!
சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு அரசு மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவுத்துறை தலைவர் டாக்டர் பாலாஜி ஜெகன்னாத் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
ஊழல் ஆதாரங்களை திரட்டும் விஜய்?
இலவசத் திட்டங்களையும் அறிவிப்புகளையும் மட்டுமே அவர் தனது தேர்தல் நேர டெக்னிக் காகப் பயன்படுத்தவிருக்கிறார் என்கிறார்கள்.