சர்ச்சையில் வாரியக் குடியிருப்பு? -அரசு கவனிக்குமா?
Nakkheeran|October 26-29, 2024
சேலத்தை அடுத்த கருப்பூர் அருகே, கோட்டகவுண்டம்பட்டியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சேலம் கோட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 216 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இளையராஜா
சர்ச்சையில் வாரியக் குடியிருப்பு? -அரசு கவனிக்குமா?

இந்த குடியிருப்பு கட்டுமானப் பணிகள், எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, திருச்செங்கோட்டைச் சேர்ந்த நடராஜன் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனத்துக்கு 13.65 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டது. கட்டுமானப் பணிகள் 4.3.2016-ஆம் தேதி தொடங்கியது. 11.12.2020ம் தேதி முதல் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கும் பணிகள் தொடங்கின. இதற்காக பயனாளிகள் அரசுக்கு தலா 2.045 லட்சம் ரூபாய் பங்குத்தொகை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், போதிய அடிப்படை வசதிகள் செய்துதராமலேயே பயனாளி களிடம் அவசர கோலத்தில் வீடுகள் ஒப்படைக்கப்பட்டதாகவும், சிமெண்ட் பூச்சுக்கலவை ஆங்காங்கே 'பொலபொலவென உதிர்ந்து விழுவதாகவும் புகார்கள் எழுந்து துள்ளன.

இதுதொடர்பாக கோட்டகவுண்டம் பட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பாஸ்கர், சரசு, ராணி, சாந்தா ஆகியோர் நம்மிடம் பேசினர். "சேலம் - கோட்ட கவுண்டம்பட்டி அடுக்குமாடி குடியிருப்பை பயனாளிகளுக்கு ஒதுக்கி மூன்று ஆண்டுகளாகியும், நல்ல தண்ணீருக்கான பொதுக்குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதனால், கேன் குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் நிலை உள்ளது. தண்ணீரை விலைகொடுத்து வாங்க வசதி இல்லாதவர்கள், ஒரு கி.மீ. தூரம் சென்று நல்ல தண்ணீரை எடுத்துவருகிறோம். ஒவ்வொரு வீடும் தலா 400 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. எல்லா வீடுகளிலும் சமையல் அறையை குறுக்கே சுவர் வைத்து ஏனோதானோவென கட்டியுள்ளனர். இதனால் பயனாளிகள் எல்லோருமே 20 ஆயிரம் ரூபாய் செலவு செய்து சமையல்கட்டை திருத்திக் கட்டியிருக்கிறோம்.

216 வீடுகளுக்கும் சேர்த்து ஒரே ஒரு செப்டிங் டேங்க் மட்டுமே உள்ளது. அதையும் கடந்த ஓராண்டாக சுத்தம் செய்யவில்லை. 6 வீட்டுக்கு ஒரு உறிஞ்சுகுழி வீதம் அமைக்கப் பட்டுள்ளதால் அவை சீக்கிரம் நிரம்பி கழிவுநீர் வெளியேறுகிறது.

Esta historia es de la edición October 26-29, 2024 de Nakkheeran.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE NAKKHEERANVer todo
மருமகளிடம் அத்துமீறல்...கருக்கலைப்பு...-அ.தி.மு.க. நிர்வாகி டார்ச்சர்!
Nakkheeran

மருமகளிடம் அத்துமீறல்...கருக்கலைப்பு...-அ.தி.மு.க. நிர்வாகி டார்ச்சர்!

வீட்டுக்கு வந்த இளம் மருமகளிடம் பாலியல் அத்துமீறலிலும், கட்டாயக் கருக்கலைப்பிலும் ஈடுபட்டுக் கொடுமைப்படுத்திய தூத்துக்குடி மாநகரின் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகி மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவாகியிருக்கிறது.

time-read
3 minutos  |
October 26-29, 2024
அ.தி.மு.க.! டிசம்பரில் பூகம்பம்!
Nakkheeran

அ.தி.மு.க.! டிசம்பரில் பூகம்பம்!

வைத்திலிங்கம், இளங்கோவன் ஆகியோர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை ரெய்டுகள் நாம் ஏற்கெனவே கூறியிருந்தபடி பா.ஜ.க., அ.தி.மு.க.விற்கு எதிராக ஒரு பெரிய அஸ்திரத்தை ஏவப் போகிறது என குறிப்பிட்டிருந்ததை உறுதி செய்வதாக உள்ளது.

time-read
2 minutos  |
October 26-29, 2024
நான் சிவன்-நீ சக்தி! பெண் பக்தர்களை சீரழித்த ஜக்கி!
Nakkheeran

நான் சிவன்-நீ சக்தி! பெண் பக்தர்களை சீரழித்த ஜக்கி!

ஜக்கியின் ஈஷா மையத்தில் மேலாடை யின்றி பெண் குழந்தைகளுக்கு தீட்சை கொடுக்கின்றார்கள்.

time-read
4 minutos  |
October 26-29, 2024
இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!
Nakkheeran

இஸ்ரேல் Vs ஈரான் போர்! பெட்ரோல் விலையேற்ற அச்சத்தில் இந்தியா!

2023 அக்டோபரில், இஸ்ரேல் -ஹமாஸ் போராளி களுக்கிடையே தொடங்கிய போரானது, காஸா பகுதியி லுள்ள 34,000 பேருக்கும்

time-read
1 min  |
October 26-29, 2024
சர்ச்சையில் வாரியக் குடியிருப்பு? -அரசு கவனிக்குமா?
Nakkheeran

சர்ச்சையில் வாரியக் குடியிருப்பு? -அரசு கவனிக்குமா?

சேலத்தை அடுத்த கருப்பூர் அருகே, கோட்டகவுண்டம்பட்டியில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், சேலம் கோட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 216 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

time-read
2 minutos  |
October 26-29, 2024
பயிர்களைத் தாக்கும் அமெரிக்க ராணுவ படைப்புழு! அச்சத்தில் விவசாயிகள்!
Nakkheeran

பயிர்களைத் தாக்கும் அமெரிக்க ராணுவ படைப்புழு! அச்சத்தில் விவசாயிகள்!

அமெரிக்கன் மிலிட்டரி வார்ம் (AMERICAN MILITARY WARM) எனப்படும் அமெரிக்க ராணுவ படைப்புழு அடையடையாய் பயிர்களைத் தாக்கி நாசம்செய்வதால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறார்கள் தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம், கரிசல்குளம், குருவிகுளம் பிர்க்கா மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதி வேளாண் மக்கள்.

time-read
2 minutos  |
October 26-29, 2024
பங்கு தருவதில்லை! குமுறும் கவுன்சிலர்கள்!
Nakkheeran

பங்கு தருவதில்லை! குமுறும் கவுன்சிலர்கள்!

மாநகராட்சி கூட்டம் நடக்கும்போது செய்தியாளர்கள் போட்டோ, வீடியோ எடுக்கக்கூடாது என வேலூர் மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
2 minutos  |
October 26-29, 2024
தேசிய கீதத்திலுள்ள திராவிடத்தை எதிர்க்க சீமானுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? -தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!
Nakkheeran

தேசிய கீதத்திலுள்ள திராவிடத்தை எதிர்க்க சீமானுக்கு நெஞ்சுரம் இருக்கிறதா? -தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை!

தூர்தர்ஷன், சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் கொண்டாடப்பட்ட இந்தி மாத நிறைவு நாள் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆ கலந்துகொண்டார்.

time-read
4 minutos  |
October 26-29, 2024
மாவலி பதில்கள்
Nakkheeran

மாவலி பதில்கள்

நல்ல உறவுகள் என்பது கடிகார முள்களைப் போன்றது அடிக்கடி சந்தித்துக்கொள்வதில்லை... ஆனால் தொடர்ந்து ஒன்றுக்கொன்று நல்ல தொடர்பில்தான் எப்போதுமே இருக்கும்!

time-read
1 min  |
October 26-29, 2024
மறுக்கப்படும் வேலை வாய்ப்பு! குமுறும் மக்கள்!
Nakkheeran

மறுக்கப்படும் வேலை வாய்ப்பு! குமுறும் மக்கள்!

தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமி ஷன் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் குரூப் 4 தேர்வுப் பணிகளில் 15 ஆயிரம் பேர் வரை நிரப்பும் அளவுக்கு அலுவலகங்களில் காலிப் பணியிடங்கள் இல்லை என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

time-read
2 minutos  |
October 26-29, 2024