மிரட்டிப் பணம் பறிப்பதற்காக இவர்கள் கையில் எடுத்திருப்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ள சட்டபூர்வமான உரிமையை, இவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் யாரைக் குறிவைக்கிறார்கள் தெரியுமா? ஊழலும் லஞ்சமும் பெருக்கெடுத்து அரசுத்துறையில் ஓடும் பணியாற்றும் அலுவலர்களைத்தான். அப்படி ஒரு துறையாகத்தான் இருக்கிறது, நெடுஞ்சாலைத்துறை.
அத்துறையில் முறைகேடாகப் பணம் குவித்துவரும் பொறியாளர்கள், இந்த கும்பலால் வேட்டை யாடப்படுகின்றனர்.
சாம்பிளுக்கு...விவகாரம் லீக்கான விருதுநகர் கோட்டத்தின் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம்.
நாம் களமிறங்கி அக் கோட்டத்தில் விசாரித் தறிந்த தகவல்கள் இதோ: சுமார் 33 கி.மீ. தூரத்துக்கு சிவகாசி சுற்றுச் சாலை அமையவிருக்கிறது. நிலம் கையகப் படுத்துதல் உள்ளிட்ட சாலைப் பணிகளுக்கு சுமார் ரூ.200 கோடி வரை செலவிட நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதுபோன்ற நிதி ஒதுக்கீடு அதிகமுள்ள பகுதிக்கு இட மாறுதல் பெற நடத்தப்படும் மறைமுக ஏலத்தில் பல லட்சங்களை வாரியிறைத்துவிட்டே வருகிறார்கள் உதவி கோட்டப் பொறியாளர்கள். ஏனென்றால், மதிப்பீட்டில் 1 சதவீதம் வரை சம்பந்தப்பட்ட பொறியாளருக்குப் போய்ச் சேர்ந்துவிடும்.
தற்போது சிவகாசியில் உதவி கோட்டப் பொறியாளராக இருக்கிறார் காளிதாஸ். பசையான ஏரியாவில் காளிதாஸ் பணியில் இருப்பதை ஸ்மெல் செய்துவிட்ட ஜெகதீசன் என்பவர்,
கோயம்புத்தூரிலி ருந்து அறப்போர் இயக்கம் லெட்டர் பேடில், தகவல் அறி யும் உரிமைச் சட் டத்தின் கீழ் சிவகாசி சுற்றுச்சாலைகள் குறித்த சில கேள்விகளைக் கேட்டுவிட்டு, சிவகாசி உதவி கோட்டப் பொறியாளர் காளிதாஸின் சொத்து விபரங்களையும் கேட்டுள்ளார். அந்தத் தகவல் கேட்கும் விண்ணப்ப மனுவை முறைப்படி விருது நகர் கோட்டப் பொறியாளர் அலுவல கத்துக்கு அனுப்பாமல், உள்நோக்கத்துடன் சிவகாசி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.
சொத்து விபரங்களைக் கேட்டு, தனது அலுவலகத்துக்கு வந்த மனுவைப் படித்ததும் அதிர்ந்துபோனார் காளிதாஸ்.
Esta historia es de la edición November 02-05,2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 02-05,2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
இந்திய அறுவைச் சிகிச்சை சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.ஆடிய கேம்!
அறுவைச் சிகிச்சை சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.ஆடிய கேம்!சிகிச்சை நிபுணர்கள் சங்கத் தேர்தலில் குளறுபடி நடந்துள்ளதாகவும், அதுகுறித்து தனிக்குழு அமைத்து குளறுபடிகள் குறித்து விசாரணை செய்யவேண்டும் எனவும், அந்த சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர்.
ப்ளான் B!
'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் முதல் பாகத்தில் இடம்பெற்ற 'ஊ சொல்றியா மாமா' பாடல் போல் இந்தப் படத்திலும் 'கிஸ்ஸிக்' என்ற ஒரு பாடல் இடம்பெறுத்துள்ளது. இதில் தனது துள்ளல் நடனம் மூலம் கவனம் ஈர்த்த தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீலீலா குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
கமிஷன் தகராறு! சிக்கும் மாஜி அமைச்சர்!
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமாக 6.9 ஏக்கர் காலியிடம் இருந்தது. இந்த இடத்தை விற்றுத்தருவதாக பிரபல ரியல் எஸ்டேட் வியாபாரிகள் களான சாமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரும் சுந்தர்ராஜனிடம் பேசுகின்றனர்.
கேரம் உலக சாம்பியன் காஸிமா! சாதித்த தமிழச்சி!
வட சென்னை பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் மத்தியில், கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை போட்டிகளைப் போலவே கேரம் போட்டிக்கும் தனி மவுசு உண்டு. தற்போது இந்த கேரம் விளையாட்டிலும், உலக அளவில் சாதனை படைத்து, தமிழ்நாட்டுக்கே பெருமை தேடித்தந்திருக்கிறார் புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காஸிமா என்ற 17 வயது சிறுமி.
இலங்கைக்கு கஞ்சாகடத்தல்! பிடிபட்ட பா.ஜ.க.புள்ளி!
தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு கிழக்கு கடற்கரைப் பகுதி வழியாகக் கஞ்சா கடத்தப்படுவது குறித்து நக்கீரன் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் கடற்கரையிலிருந்து பைபர் படகுகளில் இரவு நேரத்தில் கஞ்சா பண்டல்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதில் பா.ஜ.க. பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருக்கும் தகவல் தனிப்பிரிவு போலீசார் மூலம் தஞ்சாவூர் எஸ்.பி. அசிஷ் ராவத்துக்கு அனுப்பப்படுகிறது.
பன்றிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்! -பதறும் விவசாயிகள்!
இதுவரை பன்றியால் பயிர்கள்தான் சேதமானது. இப்பொழுது தங்களது உயிர்களும், உடமைகளும் சேதமாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு மனு செய்துள்ளனர் கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினர்.
புரோக்கர்கள் பிடியில் தாலுகா ஆபீஸ்!
பல மாவட்டங்களில் அளுங்கட்சிக்கு எதிராக சத்தமில்லாமல் வருவாய்த் துறையினர் செயல்பட்டு வருகிறார்கள். அதாவது, இ.மு.க. அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தாலும், மக்களிடம் அது சேர்வதில்லை. மக்கள் அந்த நிதி ஒதுக்கீடுக்காக வருவாய்த்துறையின் உயரதிகாரியைப் பார்த்து, \"மனு என்னாச்சு?\" என்றால், \"அவரப் பாத்தீங்களா? பார்த்துவிட்டு வாங்க.. வேலை ஆகும்\" என்கின்ற நிலை ஓவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் காணக் கிடைக்கிறது.
ஜக்கி ஒரு கொலையாளி! -சீறிய முத்தரசன்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன், நக்கீரனின் துணிச்சலான ஆராய்ச்சியையும், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பின் ஆர்ப்பாட்டத்தையும் விமர்சித்து கூறியதாக, \"ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் கொடூர சம்பவங்களை தோலுரித்து வரும் நக்கீரனின் துணிச்சலை பாராட்டுகிறேன்.
அமலாக்கத்துறையின் அடுத்த பாய்ச்சல்!
தமிழகத்தில் அடுத்தகட்டப் பாய்ச்சலுக்குத் தயாராகிவருகிறது அமலாக்கத்துறை. கடந்த இரண்டு மாதங்களில் இத்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளின் அடிப்படையில் இந்தப் பாய்ச்சலுக்குத் திட்டமிடப்படுகிறது என்கிறார்கள்.
விஜய்யிடம் பா.ஜ.க. பேரம்!
தமிழகத்திற்கு வரும் ஆடுமலை, நடிகர் விஜய் பேரைச் சொல்லி அடுத்தகட்ட சீனை நடத்தத் தயாராகி வருகிறார். லண்டனுக்குப் போன ஆடுமலை, அவர் தமிழகத்தில் இல்லாத காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழக பா.ஜ.க.வை ஸ்கேன் செய்து பார்த்ததில் ஆடுமலையால் இங்கு ஒன்றுமே வளர்ச்சியில்லை என்ற முடிவுக்கு தேசிய பா.ஐ.க. வந்துள்ளது.