டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்திய இளைஞர் விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கத்திக்குத்தில் படுகாயமடைந்த டாக்டர் பாலாஜிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டதில் அபாயகட்டத்தைத் தாண்டியிருக்கிறார்.
புற்றுநோயால் நீண்ட காலமாக அவஸ்தைப்பட்டு வந்திருக்கிறார் குற்றவாளி விக்னேஷின் தாய் பிரேமா. எஸ்.ஆர்.எம்., சவீதா உள்ளிட்ட பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும், கிண்டியிலுள்ள புற்றுநோய் மருத்துவமனையிலும் இதற்காக ட்ரீட்மெண்ட் எடுத்துள்ளார் பிரேமா. நோய் குணமாகாததால் இந்த அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார் பிரேமா. பல மாதங்களாக அவருக்கு சிகிச்சையளித்து வந்துள்ளார் டாக்டர் பாலாஜி. இந்த நிலையில்தான், கத்தியால் குத்தியிருக்கிறார் விக்னேஷ்.
இதுகுறித்து மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் நர்ஸ்களிடம் விசாரித்தபோது, "பிரேமாவுக்கு புற்றுநோய் 5-வது ஸ்டேஜ் வரை முற்றிப்போயிருக்கிறது. ஆரம்பத்திலேயே இந்த அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தால் அவரை எளிதில் குணமாக்கியிருக்கலாம். ஆனால், தனியார் மருத்துவமனைகளில் எடுத்துக்கொண்ட சிகிச்சை பலனளிக்காததால்தான் இங்கு வந்தார். பிரேமாவுக்கு நோய் முற்றிவிட்டதால் அதற்குத் தேவையான சிகிச்சை தரப்பட்டது. நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் குணமாவதில் சிக்கல் இருக்கிறது. இதனை பிரேமாவிடமும், விக்னேஷிடமும் டாக்டர் பாலாஜி தெளிவுபடுத்தியிருக்கிறார். அவரது பதிலில் அவர்களுக்கு திருப்தி இல்லை போலும். தினமும் வருவதுபோல, 13-ந்தேதியும் மருத்துவமனைக்கு வந்தார் விக்னேஷ்.
Esta historia es de la edición November 16-19, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 16-19, 2024 de Nakkheeran.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மறைந்தார் பெரியாரின் பேரன்!
திராவிட இயக்கத்தின் முகவரியான, தந்தை பெரியார் குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அரசியலில் தனக்கென தனியான ஆளுமைத் திறனுடன் காங்கிரஸ் கட்சியில் பயணித்துவந்தவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சென்னை தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில்... சிகிச்சை பலனின்றி டிசம்பர் 14-ஆம் தேதி காலை உயிரிழந்தார்.
தமிழன்டா!
உலக செஸ் சாம்பியன் குகேஷ்!
ரங்கநாதருக்கு வைரக்கிரீடம்! நெகிழ்ச்சியில் ஜாஹீர் ஹூசைன்!
கடந்த 2021ம் ஆண்டு, டிசம்பர் 10ஆம் தேதி பரதநாட்டியக் கலைஞரான ஜாகீர் ஹுசைன் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ரங்கநாதரை தரிசிக்கச் சென்றார்.
மதவாதப் பேச்சு! நீதிபதிக்கு கடும் எதிர்ப்பு!
நீதித்துறையை காவிமயமாக்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்புகள் பல காலமாகத் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
கைதி எண் 9658
ஆயில்யத்து குற்றியேரி கோபாலன் என்னும் மிக நீண்ட பெயருக்குள் யார் இருக்கிறார் என்பதை உங்களுக்கு எட்டிப் பார்க்க தோன்றலாம். அந்த பெயருக்குள் ஒரு அனல் வீசும் தகிப்பு, காலந்தோறும் வாழ்ந்து வந்திருக்கிறது. அந்த பெயர், பயணம் செய்யாத இடம் என்று எதுவுமே இல்லை.
விதிமீறல் மருத்துவமனை! பலியான 6 உயிர்கள்!
மனிதாபிமானத்தை மறந்து, வருமானத்துக்காகவே பெரும்பாலான டாக்டர்கள் மருத்துவம் பார்த்து வருவதால் தற்போது பல உயிர்கள் பறிபோகின்றன.
இந்துத்வா கலெக்டர்! குமுறும் வி.சி.க.வினர்!
தமிழ்நாட்டில் வி.சி.க.விற்கு எதிராக மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா செயல்படுவதாக சர்ச்சை கிளம்புவது குறித்து, எதிராக மாவட்ட கலெக்டர்கள்!' என்ற செய்திக்கட்டுரையில் விரிவாக எழுதியிருந்தோம். வி.சி.க. சார்பாக ஏற்றப்படும் கொடிக்கம்பங்களை அகற்றுவதில் அவர் குறியாக இருப்பு குற்றம்சாட்டியது குறித்தும் எழுதியிருந்தோம்.
கழுத்தை நெரிக்கும் பா.ஐ.க! விஜய்க்கு தூது!
காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணத்தையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அனைத்துத் தரப்பு மக்களையும், அரசியல் நோக்கர்களையும் கூர்ந்து பார்க்க வைத்துள்ளது.
விரக்தியில் ஐக்கி! எதிர்க்கும் மாஜி!
\"இங்கு வருவதற்கே விருப்பமில்லை அவருக்கு! என்னுடைய விஷயத்தை முடித்துவிட்டுப் போ!\" என மாஜி ஒருவர் அழுத்தம் கொடுக்க, எதிர்ப்புகளுக்கு மத்தியில் கோவைக்கு வந்திருக்கிறார் ஈஷா நிறுவனரான ஐக்கி வாசுதேவ்.
அர்ஜுன் ரெட்டி விலகல் மர்மம்! அதிரடி பின்னணி!
விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த அர்ஜுன் ரெட்டி, அக்கட்சியிலிருந்து முழுமையாக விலகியிருக்கிறார்.